ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்திற்கு இலச்சினை ஒன்றை வடிவமைத்திடும் பொருட்டு, அவ்வமைப்பின் சார்பில் அண்மையில் இலச்சினை உருவாக்கப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
அனுப்பி வைக்கப்பட்ட பல இலச்சினைகளில், அபூதபியில் பணிபுரியும் காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சார்ந்த ஹுஸைன் நூருத்தீன் உருவாக்கிய இலச்சினை மன்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டு, அதற்காக அவருக்கு 500 திர்ஹம் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், போட்டியில் இலச்சினைகளை அனுப்பித் தந்த அனைவருக்கும் 100 திர்ஹம் பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அமீரக காயல் நல மன்றம் அதன் இலச்சினையை (LOGO) உருவாக்கும் பொருட்டு
ஒரு போட்டியை அறிவித்து காயலர்களிடம் மன்றத்தின் இலச்சினையை ஒரு சில
விதி முறைகளின் அடிப்படியில் உருவாக்கக் கோரி இருந்தது.
அதன் அடிப்படையில் எட்டு பேர் தத்தமது ஆக்கங்களை மன்றத்திற்கு அனுப்பி தந்திருந்தனர். போட்டிக்கு வந்திருந்த எல்லா ஆக்கங்களையும் மன்றத்தின் செயற்குழுவில் ஆய்ந்து மன்றத்தின் தலைவைர், உப தலைவர் மற்றும் செயலர் உட்பட்ட ஒரு சிறப்பு குழு இதனை தீர்மானிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்த சிறப்புக்குழு அபுதாபியில் பணிபுரிந்து வரும் சகோதரர் ஹுசைன் நூருத்தீன் அவர்கள் தன்னுடன் பணிபுரியும் நண்பர் ஸ்ரீகாந்துடன் இணைந்து வரைந்து அனுப்பி வைத்திருந்த இலச்சினையை ஏக மனதாக தெரிவுசெய்து, இந்த போட்டிக்கு பரிசாக ஏற்கனவே தீர்மானித்திருந்த அமீரக
திர்ஹம் 500 தொகையை அவர்களுக்கு வழங்குவது என்றும் அறிவிக்கப்படுகிறது.
அதேநேரம் எங்களின் வேண்டுகோளை என்று தங்களின் நேரம் கருதாது சிரமம் எடுத்து மன்றத்திற்காக ஒதுக்கி, இந்த போட்டிக்கு தங்களின் ஆக்கங்களை அனுப்பித்தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மன்றம் தனது நன்றியினை தெரிவிப்பதோடு போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தலா Dhs . 100 ஆறுதல் பரிசாக வழங்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்படுகிறது.
மன்றத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள - பரிசுக்குரிய இலச்சினை பின்வருமாறு:-
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துணைத் தலைவர்,
அமீரக காயல் நல மன்றம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |