உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அரசாணை (நிலை) எண்.74, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை, நாள்.24.08.2009ன்படி அமைக்கப்பட்டு 24.8.2009 முதல் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் இயங்கி
வருகிறது.
தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கும் பள்ளிவாசல்களில் பணிபுரியும் மோதினார்களுக்கும், தமிழகக் கோவில்
பூசாரிகளுக்கு வழங்கப்பட்டதைப்போல இலவச மிதிவண்டி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி ஆணைபிறப்பித்துள்ளார். இதற்காக
ரூ.3.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வண்ணமே இவ்வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களில் முதற்கட்டமாக 11171 உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள்
இலவசமாக வழங்கப்படுகிறது. (ஒரு மிதிவண்டியின் மதிப்பு ரூ.2776/- ஆகும்)
உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை சுற்றுச்சூழல் மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சர் டி.பீ.எம்.மைதீன்
ய், வக்ஃப் வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், திரு.மாலிக் பெரோஸ்கான், இ.ஆ.ப., அரசு செயலர், பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, திரு.பெ.மு.பஷீர் அகமது, இ.ஆ.ப., ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை,
ஆகியோர் முன்னிலையில் நேற்று (பிப்ரவரி 28) துவக்கிவைத்தார்.
பேராசிரியர் மு.ஆ.காதர் மொய்தீன், மற்றும் வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் நிகழ்ச்சியின் போது கலந்துக் கொண்டனர். நடப்பாண்டில் இதுவரை
பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு ரூ.12.64 லட்சம் செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு 660 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
தகவல்:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம்,
சென்னை. |