ஜம்இய்யத் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் காயல்பட்டினம் கிளை சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், 28.02.2011 அன்று (நேற்று) இரவு 07.00 மணிக்கு இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ அறிமுக உரையாற்றினார்.
இக்கூட்டத்தில், “சுன்னத் வல் ஜமாஅத் என்போர் யார்?” என்ற தலைப்பில், ஜம்இய்யத் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில துணைச் செயலாளர் கோவை ஏ.எம்.ஜி.மஸ்ஊத் சிறப்புரையாற்றினார்.
மவ்லவீ எஸ்.ஐ.ஷேக் அலீ ஃபிர்தவ்ஸீயின் நன்றியுரைக்குப் பின் அனைவரின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
தகவல்:
எஸ்.ஏ.கே.அபுல்ஹஸன்,
மரைக்கார் பள்ளித் தெரு, காயல்பட்டினம்.
படங்கள்:
எம்.ஏ.அப்துல் ஜப்பார்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |