தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். விளாத்திகுளம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட நுகர்வோர் மற்றும் வழங்கல் அலுவலர் பஷீர், தூத்துக்குடி தொகுதி அலுவலராக தூத்துக்குடி உதவி கலெக்டர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான், கோவில்பட்டி தொகுதி தேர்தல் அலுவலராக கோவில்பட்டி உதவி கலெக்டர், திருச்செந்தூர் தொகுதி தேர்தல் அலுவலராக திருச்செந்தூர் உதவி கலெக்டர் பொற்கொடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜேசுவரி, ஓட்டப்பிடாரம் தொகுதி அலுவலராக தூத்துக்குடி உதவி ஆணையர் (கலால்) சேதுராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் தேர்தல்பிரிவு அலுவலர் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 1259 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
மொத்தம் 1,609 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன என்று கூறினார்.
தகவல்:
தினத்தந்தி |