காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் ஸ்தாபகர் மஹான் செய்யித் அஹ்மத் வலிய்யுல்லாஹ் அவர்களின் தந்தையும், பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் பாட்டனாரும், பூவாற்றில் அடங்கியிருப்பவர்களுமான மஹான் நூஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் கந்தூரி வைபவம் காயல்பட்டினம் பெரிய முத்துவாப்பா தைக்கா வளாகத்தில் 03.03.2011 (நேற்று) மாலை முதல் இரவு வரை நடைபெற்றது.
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், அன்று மாலையில் மஹான் அவர்கள் மீது கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
மஃரிப் தொழுகைக்குப் பின் மஹான் அவர்களின் புகழ்பாடும் மர்ழிய்யா ஓதப்பட்டது. இஷா தொழுகைக்குப் பின், மார்க்க சொற்பொழிவை காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித உரையை மவ்லவீ ஹாஃபிழ் முத்துச்சுடர் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ நிகழ்த்தினார்.
துஆவுடன் வைபவம் நிறைவுற்றது. இவ்வைபவத்தில் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. கலந்துகொண்ட அனைவருக்கும் நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது.
வைபவ ஏற்பாடுகளை நூஹ் வலிய்யுல்லாஹ் கந்தூரி குழுவினர் செய்திருந்தனர்.
தகவல்:
சொளுக்கு A.J.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |