ரபியுல் ஆஹிர் (1432) மாத அமாவாசை மார்ச் 4 வெள்ளி அன்று - இங்கிலாந்து நேரப்படி இரவு 8:48 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் அதிகாலை 2:18 மணி (மார்ச் 5). அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மறையும் நேரம் 6:29, சந்திரன் மறையும் நேரம் 6:05. சூரியன் மறையும் வேளையில் அமாவாசை ஏற்பட இன்னும் ஏறத்தாழ 8 மணி நேரம் இருக்கும். மேலும் உலகில் எங்கும் அன்று வெறுங்கண்கொண்டு பிறையை காண இயலாது.
மார்ச் 5 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:29 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:49. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 16.5 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று காண இயலாது. வட அமெரிக்காவின் பல பகுதிகளில் வெறுங்கண்கொண்டும், ஐரோப்பாவின் பலபகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தாலும், வடக்கிலிருந்து ஆப்ரிக்காவின் மத்திய பகுதி வரை, மேற்கு ஆசியா, வட ஆசியா, தென் ஆசியா பகுதிகளில் தொலைநோக்கிகள் கொண்டும் பிறையை காணலாம்.
மார்ச் 6 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:29 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:33. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 40.5 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று காணலாம்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு மார்ச் 4 (அமாவாசை) அன்று ரபியுல் அவ்வல் 29 பூர்த்தி ஆகிறது. அன்று உலகில் எங்கும் பிறை கண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே மார்ச் 5 - அவர்களுக்கு ரபியுல் அவ்வல் 30 ஆகும். மார்ச் 6 - ரபியுல் ஆஹிர் 1 ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு மார்ச் 4 (அமாவாசை) அன்று ரபியுல் அவ்வல் 28 முடிந்திருக்கும். மார்ச் 5 அன்று காயல்பட்டண பகுதிகளில் பிறை வெறுங்கண்களுக்கு தென்பட வாய்ப்பில்லாததால், அன்று அவர்களுக்கு ரபியுல் அவ்வல் 29 ஆகும். மார்ச் 6 அவர்களுக்கு - ரபியுல் அவ்வல் 30 ஆகும். மார்ச் 7 அவர்களுக்கு - ரபியுல் ஆஹிர் 1 ஆகும்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு மார்ச் 5 - ரபியுல் ஆஹிர் 1 ஆகும்.
தகவல்:
www.kayalsky.com
|