தமிழ்நாடு மாநில அளவிலான யோகா போட்டியை ஆத்மா அகடமி ஆஃப் ஆர்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு மாநில யோகா சங்கம் இணைந்து, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வீரபாகு மஹாலில் 26.02.2011 சனிக்கிழமையன்று நடத்தின. இப்போட்டியில் காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொண்டு சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இதுகுறித்து அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
தமிழ்நாடு மாநில அளவிலான யோகா போட்டியை ஆத்மா அகடமி ஆஃப் ஆர்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு மாநில யோகா சங்கம் இணைந்து, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வீரபாகு மஹாலில் 26.02.2011 சனிக்கிழமையன்று நடத்தின. இப்போட்டியில் எமது சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொண்டு சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.
ஆறு மாவட்டங்களைச் சார்ந்த 6,400 பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொண்ட இப்போட்டி, பொதுப்பிரிவு, சிறப்புப் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன. இப்போட்டியில், எமது சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் சார்பில் 36 மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். அவர்களுள் 15 பேர் பரிசு பெற்றுள்ளனர்.
பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆர்.மரகதம், ஆறாம் வகுப்பு மாணவியர் ஏ.ரஹ்மத் ரக்ஷானா, ஏ.எஸ்.செய்யித் அஜீபா, கே.எம்.எம்.சுபைதா முன்ஷியா, நான்காம் வகுப்பு மாணவர் ஏ.ஏ.சொளுக்கு முஹம்மத், மூன்றாம் வகுப்பு மாணவி எம்.யு.எல்.ஆமினா அஃப்ரோஸ், முதல் வகுப்பு மாணவி எம்.ஏ.சி.செய்யித் ராபியா ஆகியோர் முதல் பரிசையும்,
நான்காம் வகுப்பு மாணவியர் ஏ.எஸ்.செய்யித் ராபியா, எம்.எஸ்.எச்.ஆயிஷா முபஷ்ஷரா, மூன்றாம் வகுப்பு மாணவர் என்.எஸ்.முஹம்மத் ஹஸன், இரண்டாம் வகுப்பு மாணவி எம்.எம்.நாச்சி நஸ் ரீன், முதல் வகுப்பு மாணவி எம்.ஏ.சி.செய்யித் ராபியா ஆகியோர் இரண்டாம் பரிசையும்,
ஆறாம் வகுப்பு மாணவி கே.எம்.முஹம்மத் ஃபாத்திமா, நான்காம் வகுப்பு மாணவர் எம்.ஏ.கே.ஜே.முஹம்மத் காஸிம், இரண்டாம் வகுப்பு மாணவி ஏ.எஸ்.மர்யம் மஸ்விய்யா, முதல் வகுப்பு மாணவர் எம்.எஸ்.முஹம்மத் நவாஸ்தீன் ஆகியோர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
மொத்தத்தில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களிலும் சிறந்த முறையில் யோகா செய்வோராக 22 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில், எம் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி ஏ.எஸ்.செய்யித் அஜீபா, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆர்.மரகதம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வென்ற மாணவியரை எம் பள்ளியின் தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், முதல்வர் எம்.செண்பகவல்லி மற்றும் பள்ளி ஆசிரியையர் பாராட்டினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |