காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனைக்கு புதிதாக மகப்பேறு மருத்துவ நிபுணர் நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கடந்த 21 ஆண்டுகளாக காயல்பட்டினம் மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வரும் நமது கே.எம்.டி. மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் கோமதி தனபாலன் எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ. நேற்று (02.03.2011) நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அரசுப் பணியிலிருந்தபோது சஊதி அரபிய்யா, லிபியா போன்ற வெளிநாடுகளிலும் பணிபுரிந்துள்ளார்.
அனுபவமும், திறமையும் மிக்க மகப்பேறு மருத்துவரான இவர் கே.எம்.டி. மருத்துவமனையில் நிரந்தரமாக பணியாற்றவுள்ளார். நமதூர் மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கே.அப்துல் லத்தீஃப்,
மேலாளர், கே.எம்.டி. மருத்துவமனை, காயல்பட்டினம். |