கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) பொதுக்குழுக் கூட்டம் 27.02.2011 அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
மலபார் காயல் வெல்ஃபேர் அசோசியேசன் (MKWA) உடைய 4ஆவது பொதுக்குழு கூட்டம் 27-02-2011 அன்று கோழிக்கோடு கோட்டபரம்பிலுள்ள சகோதரர் நெய்னா அவர்களின் வீட்டு மொட்டை மாடியில் வைத்து நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ஜனாப் சாமு ஷிஹாபுதீன் அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.
தலைவர் உரை:
தலைவர் மசூது அவர்களின் தலைமை உரையில்,
நமது இயக்கத்திற்கு கேரளா அரசின் அங்கீகாரம் கிடைக்கப்பட்டுள்ள விஷயத்தை பெருமையுடன் அறிவித்தார்.
அரசு அங்கீகாரம் கிடைத்த பிறகு நமது அமைப்பின் விதிகளை புத்தக வடிவில் ஆக்கி பொது மக்களுக்கு கொடுக்கப்படும் என்று நாம் முன்னரே வாக்களித்துள்ளோம், அதன்படி அதை செய்யவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஆனால் தற்போது அமைப்பு விதிகளில் பதவிகள் சம்பந்தமான குழப்பங்களை தவிர்க்கவும், நல்ல படியாக அமைப்பை நடத்தி செல்லவும் ஏழு இடங்களில் திருத்தம் அத்தியாவசியமானது என்றும், அந்த திருத்தங்களை பொதுக்குழுவிற்கு விரிவாக விளக்கி சொன்னார். இந்த பொதுக்குழுவின் அங்கீகாரம் இல்லாமல் நாம் எந்த ஒரு மாற்றமும் செய்ய இயலாது... ஆகையால் உறுப்பினர்கள் இதை பற்றி நன்றாக புரிந்துகொண்டு மட்டுமே கருத்துக்களையும், ஆதரவையும் தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
மேலும் கடந்த செயற்குழுவில் தீர்மானிக்கபட்ட மருத்துவ உதவிகளையும், CFFCக்கான தொகையையும் நம்முடைய துணை தலைவர் ஊர் சென்றபோது நேரிலேயே வழங்கிய விஷயத்தையும் கூட்டத்திற்கு தெரியப்படுத்தினார்.
செயலர் உரை:
மருத்துவ உதவிகளை முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக கொண்ட MKWA, இது மாதிரியான உதவிகள் கோரி கிடைக்கப்படும் மனுக்களை விரிவாக விசாரித்த பின்னரே உதவிகளை செய்து வருகிறது என்று இதுவரையில் வழங்கப்பட்ட உதவிகளின் தன்மைகளை விளக்கும்போது செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டு சொன்னார். மேலும் இப்படி நாம் ஒரு அமைப்பாக கூடி உதவிகளை செய்யும்போது என்னவெல்லாம் நன்மைகள் உள்ளன என்பதையும் விளக்கி பேசினார். மேலும் நாம் இப்போது கூடியிருக்கும் இந்த குழு தான் MKWA வை பொறுத்தவரை முழுமையான சக்தி உள்ள குழுவென்றும் உறுப்பினர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், திறந்த மனதுடனும் தங்களின் கருத்துகளை சொல்ல வேண்டும் என்றும், இங்கிருந்து போன பிறகு வெளியே போய் நமது MKWA வை பற்றி குற்றம், குறைகளை பேசி திரியக்கூடாது என்றும் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
பொருளாளர் உரை:
பொருளாளர் உதுமான் அப்துல் ராசிக் அவர்கள் கடந்த பொதுக்குழுவிற்கு பிறகுள்ள (இண்டேனல் ஆடிட்டரால் (internal auditor) பார்வையிடப்பட்ட) நிதி நிலை அறிக்கையை கூட்டத்தில் அறிவித்து பேசும்போது,
இப்போதும் சில உறுப்பினர்கள் சந்தா பாக்கி வைத்துள்ளனர்... மேலும் தலைவர் உரையில் குறிப்பட்டது போல சந்தா தொகைகளை மனமுவந்து வழங்க வேண்டும்... நமது MKWAவிற்கு வங்கி கணக்கு துவக்கி, அதில் பணத்தை வைப்பு செய்துள்ளோம்... இதுவரை செக் புஸ்தகம் கிடைக்காததால் குறிப்பிட்ட ஒரு தொகையை நமது கையிலேயே இப்போதும் வைத்துள்ளோம்... என்று தெரிவித்த அவர், அந்த பணத்தையும் பொதுக்குழுவிற்கு காண்பித்தார்.
நிதிநிலை அறிக்கை:
பொருளாளர் அறிவித்த நிதி அறிக்கையை பொதுக்குழு அப்படியே அங்கீகரித்தது. பலவிதமான கருத்து பரிமாற்றங்களுக்கும், பலதரப்பட்ட கேள்வி பதில்களுக்கும், நிறைவான விவாதங்களுக்கும் பிறகு அமைப்பு விதிகளில் ஏழு திருத்தங்களையும் பொதுக்குழு அங்கீகரித்தது.
கூடுதல் செயற்குழு உறுப்பினர் தேர்வு:
செயற்குழு உறுப்பினராக இருந்து கொண்டு செயற்குழு கூட்டத்திற்கு வருகை தராத உறுப்பினர்கள் யாரும் இருக்கிறார்களா? என்று பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்ப, அது பற்றியும் விவாதங்கள் நடந்தன. முடிவில் செயற்குழுவிற்கு புதியதாக (சாமு ஷிஹாபுதீன், மஞ்சேரி) அவர்களை புதிதாக தேர்ந்தெடுக்கபட்டது. இத்துடன் MKWA விற்கு செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆகும்.
அமைப்பு விதிகளில் திருத்தங்கள்:
MKWA வின் அமைப்பு விதிகளில் ஏழு திருத்தங்களில் முக்கியமானவை:-
ஐந்து நிர்வாககுழு உறுப்பினர்களை பொதுக்குழு தேர்ந்தெடுத்து அப்படி தேர்ந்தெடுத்த நிர்வாக குழு உறுப்பினர்கள் சேர்ந்து செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது என்பதை மாற்றி, எல்லா செயற்குழு உறுப்பினர்களையும் பொதுக்குழுவே தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது என்று ஆக்குவது, மேலும் இனி முதல் நிர்வாகிகள் இருப்பார்கள், ஆனால் நிர்வாகக்குழு என்று ஒன்று இருக்காது என்பதும் திருத்தங்களில் முக்கியமானவைகள் ஆகும்.
கூட்டத்திற்கு MKWA வின் கவுரவ ஆலோசகர்களான ஜனாப் கிதுறு முஹைதீன் (KRS), ஜனாப் ஜலீல் முஹம்மது (united), ஜனாப் ஷாகுல் ஹமீது (Ameen Tools) ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் முஹம்மது ரபீக், துணை செயலாளர் அப்துல் காதிர் NM, செயற்குழு உறுப்பினர் உதுமான், இண்டேனல் ஆடிட்டரும் பொதுக்குழு உறுப்பினருமாகிய நூருல் அமீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். செயற்குழு உறுப்பினர் செய்தகமது UL அவர்களின் நன்றியுரையுடனும், உறுப்பினர்களின் பாவமன்னிப்பு பிரார்த்தனையுடனும் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
விருந்தோம்பல்:
கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மாலை ஐந்து மணிக்கு துவங்கிய கூட்டத்தின் துவக்கத்தில் தேநீரும், பிஸ்கட்டும் விநியோகம் செய்யப்பட்டு, இடையில் மக்ரிப் ஜமாஅததுக்கு இடை நிறுத்தம் செய்யபட்டன.
இரவு எட்டு மணிக்கு கூட்டம் முடிவு பெற்ற பிறகு இந்த பொதுக்குழுவுக்கென பிரத்தியேகமாக தேர்வு செய்யப்பட்ட உணவு கமிட்டி உறுப்பினர்களான ஆப்தீன் பாய், செய்தகமது UL, உமர் லக்கி, அலாவுதீன், ரஹ்மத்துல்லாஹ், உதுமான் லிம்ரா, சாஹிப் தம்பி, செல்வம் ஆகியோரின் தலைமையில் காயல் சிட்டி கலரி கறியுடன், இடியாப்பம்,சப்பாத்தி மற்றும் சவ்வரிசியும் விநியோகிக்கப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.Mமுஹம்மத் ரஃபீக் (KRS)
மற்றும்
S.Iசெய்யிது ஐதுரூஸ் (SEENA)
செய்தித் தொடர்பாளர்கள்,
மலபார் காயல் வெல்ஃபேர் அசோசியேஷன்,
கோழிக்கோடு, கேரள மாநிலம்.
கூட்ட நிகழ்வுகளின் முழு படத்தொகுப்பும் அவ்வமைப்பினரால் தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றைக் காண இங்கே சொடுக்குக!
அமைப்பின் துணைத்தலைவர் தெரிவித்ததற்கிணங்க இரண்டு படங்கள் திருத்தப்பட்டுள்ளன. - Daruttibyan Network |