அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், 26.02.2011 (நேற்று) இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் தலைமை தாங்கினார். என்.எம்.அகமது, என்.எஸ்.நெய்னா, கே.ஏ.எஸ்.அப்துல் காதர், என்.டி.இஸ்ஹாக், எம்.ஜெபமாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் கே.விஜயகுமார், ஹாஜி எல்.எஸ்.அன்வர், எஸ்.எம்.செய்யது காசிம் ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினர். பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். |