தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து மார்ச் மூன்றாவது வாரம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 19ம் தேதி அன்று தூத்துக்குடி துறைமுகத்தின் பெயர் மாற்ற விழாவின் போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இத்தகவலை இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
சுங்க அதிகாரிகள் நியமனம் போன்ற சில வேலைகள் இன்னும் முடியாமல் இருப்பதால் கப்பல்போக்குவரத்து துவங்க கால தாமதம் ஆவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பு - இத்திட்ட துவக்கத்தினை பாதிக்காது என அவர் கூறினார்.
தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணியர் கப்பல் போக்குவரத்து இன்று (பிப்ரவரி 28) துவங்கும் என சில இலங்கை ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இத்தடத்தில் போக்குவரத்தை இயக்க சேவை நிறுவனங்களை கண்டறிய Shipping Corporation of India நியமிக்கப்பட்டிருந்தது. நான்கு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன. ஆண்டுக்கு 7.2 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் 7 ஆண்டுக்கான உரிமம் Flamingo Duty Free Shopping மற்றும் Tradex Shipping என்ற நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளன.
தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணம் 12 மணி நேரம் எடுக்கும் எனவும், விமான கட்டண அளவைவிட 30 சதவீதம் குறைவாக இருக்கும் எனவும், பயணியர் ஒருவர் 100 கிலோ எடை வரை பொருட்கள் எடுத்து செல்லலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross