காயல்பட்டினம் நகராட்சியில் ஏறத்தாழ 14 லட்ச ரூபாய் செக் மோசடி முயற்சி வழக்கில் குஜராத் மாநிலத்தில் கைதுசெய்யப்பட்ட செய்யத் முஹம்மது இன்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என தெரிகிறது. இவர் காயல்பட்டின நகராட்சியின் துணைத் தலைவர் எம்.ஏ. கஸ்ஸாலி மரைக்காரின் சகோதரர் ஆவார்.
முன்னதாக இவ்வழக்கில் சாத்தான்குள நீதிமன்றத்தில் சரணடைந்த கஸ்ஸாலி மரைக்கார் தற்போது திருச்செந்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
1. பதில் கிடைக்குமா..???? posted byமுத்துவாப்பா (al khobar)[28 February 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2919
காயல்பட்டிணம் செய்திகளை உடனுக்குடன் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே.. ஆனால் தங்கள் இணையதளம் பற்றி நான் சில
கருத்துகளையும் என்னுடைய கேள்விகளையும் இங்கே பதிவு செய்கிறேன்.
1) தங்கள் இணையதளத்தில் POST YOUR COMMENT அப்படி ஒன்று எதுக்கு வைத்துள்ளீர்கள் என்று எனக்கு கொஞ்சம் எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது காரணம் Moderator என்ற பெயரில் வாசகருடைய மன கருத்துகளை அப்படியே பிரதிபலிக்க தாங்கள் தவறிவிடுகின்றீர்கள். Moderator உடைய வேலை என்னவென்றால் அந்த கருத்தில் ஆபாசம் இருந்தால் மட்டுமே நீக்க வேண்டுமே தவிற யாருக்கு கருத்துக்கள் ஆதரவாக இருக்கின்றது என்று தாங்கள் பார்க்ககூடாது. உங்கள் கருத்துகளை தாங்கள் செய்திகளில் பிரதிபலிக்கின்றீர்கள். எங்கள் மனக்குமுறலை நாங்கள் இங்குமில்லை என்றால் எங்கு சென்று பிரதிபலிப்பது....??
2) கசாலி மரைக்கார் அவர்களுடைய புகைப்படத்தை இன்னும் ஏன் தாங்கள் நீக்காமல் இருக்கின்றீர்கள் என்ற கேள்வி காயல் மக்கள் அனைவருடைய மனதிலும் ஒரு கேள்வி குறியாகவே இருக்கின்றது. அது பற்றி தாங்கள் கூறியதாக என் நண்பர் ஒருவர் கூறுகையில் கசாலி மரைக்கார் பதவியில் இருந்த காலத்தில் நாம் அவரை வைத்து தான் நகராட்சி செய்திகளை பெற்று வந்தோம் அதனால் அவரையும் நாம் பகைத்து கொள்ள முடியாது ஆகையால் ஒரு வாரம் கழித்து அவருடைய புகைப்படத்தை நீக்குவதாக தங்கள் தரப்பில் இருந்து கூறியதாக அவர் கூறினார். இந்த தகவல் உண்மை தானா ? , அப்படி இந்த தகவல் உண்மை என்றால் நீங்கள் அவரை பற்றிய செய்தியே வெளியிட்டு இருக்க கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நாம் தட்டி கேட்க முடியாவிட்டாலும் நம்மால் முடிந்ததையாவது செய்ய வேண்டாமா....??
3) இந்த கருத்தை நீங்கள் வெளியிட்டு பாருங்கள் என்னுடைய இந்த கருத்து எத்தனை ஆயிரம் காயலரின் கருத்து என்பது தங்களுக்கு தெரிய வரும்.
இந்த கருத்துகள் தங்களது மனதை காயபடுத்தி இருந்தால் இந்த சகோதரனை மண்ணித்துவிடுங்கள் . தங்களது இணையதளம் மெம்மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
2. Reply to Bro.Muthuvaappaa posted byAdministrator (Chennai)[28 February 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 2925
Assalamu alaikum,
Bro.Muthuvaappa, you have made one observation (regarding approval of comments) and one accusation (regarding picture of
Mr.Kassali in the homepage).
1) Regarding comments page, kindly note it was created few months back to record public opinion on news items posted. It is a
moderated page - meaning messages are checked before being published online. You have rightly said no message which is vulgar
should be allowed. In addition to vulgarity, please note, we also check for accuracy, whether allegation is proven or not,
check for personal insults, check for decency in language, check for relevance, check those that can ignite religious
feelings etc.
On cheque fraud issue, about 8 news items have been published in the Website. Please note, of the 8 news items, only one was
direct police report. All other news items were sought out by Kayalpatnam.com through its sources. If we are not interested
in this story, we would have just waited for the news to come to us.
So far about 35 comments have been approved in the website on the matter. Almost every comment approved on the issue is
critical of the people suspected (Mr.Kassali and his brother) in the issue. A few comments have been edited and some rejected
for various reasons. The reasons include vulgarity in language (பெருச்சாளி ... for example), offensive (நாயை குளிப்பாட்டினாலும்
... for example), assuming that a person is guilty even before a case has been filed against him (துணைத்தலைவராக இருந்த
நீங்கள், பணத்தலைவர் ஆக நினைத்தது ஏனோ..??, கஸ்ஸாலி காக்கா..... நீங்களா இப்படி பண்ணிட்டீங்கோ ?) etc.
Users have the liberty to post whatever is there in their mind. However, as people who run the Website, we have certain
responsibilities. We cannot come to conclusions based on suspicions. We are responsible for not just the news we post, we are
also legally responsible for user comments that are hosted in the Website. Please understand that.
2) You have also made one allegation regarding the picture of Mr.Kassali in the homepage. You have written கசாலி மரைக்கார் அவர்களுடைய புகைப்படத்தை இன்னும் ஏன் தாங்கள் நீக்காமல் இருக்கின்றீர்கள் என்ற கேள்வி காயல் மக்கள்
அனைவருடைய மனதிலும் ஒரு கேள்வி குறியாகவே இருக்கின்றது.
I have explained this a couple of times through comments page and will explain again.
First of all, this is an immature demand. I am sorry to use this word, but it is still an immature demand. Kayalpatnam.com is
not a court to punish people. And interviews are not published honouring a person. Interview with Mr.Kassali was published in
his capacity as Vice Chairman of the Municipality to explain the new water scheme. It was published in the last week of
December - well before the cheque fraud case came to light.
You have further alleged என் நண்பர் ஒருவர் கூறுகையில் கசாலி மரைக்கார் பதவியில் இருந்த காலத்தில் நாம் அவரை வைத்து தான் நகராட்சி
செய்திகளை பெற்று வந்தோம் அதனால் அவரையும் நாம் பகைத்து கொள்ள முடியாது ஆகையால் ஒரு வாரம் கழித்து அவருடைய புகைப்படத்தை
நீக்குவதாக தங்கள் தரப்பில் இருந்து கூறியதாக அவர் கூறினார். இந்த தகவல் உண்மை தானா ?
This is a total lie. Since you have made this allegation, it would only be fair if you also reveal the name of your friend -
to whom we have allegedly uttered those words. That just isn't true.
It is true - on many occasions, Mr.Kassali gave information about municipality meetings, resolutions etc as news to us. What
is wrong in that? Secondly, if we are so worried about angering/upsetting Mr.Kassali, why would we post news at all about the
cheque fraud matter, revealing the suspects names, his movement, enquiry etc - even before the police has made a statement on
the matter?
Finally, we understand your sentiments about the cheque fraud issue. As citizens of Kayalpatnam, we also share your
sentiments. As people who run the Website, we cannot let our sentiment take control of our responsibility.
3. ஊடகத்துறை சம்பந்தமான சுதந்திரம் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[28 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2932
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர் நினைப்பது போல் ஆபாசமாக இருந்தால் மட்டும் நீக்குவது என்றால் பொருத்தமாகாது.
மனம் புண் படும்படியான வாசகங்கள், கோபத்தை ஏற்படுத்தக் கூடிய வாசகங்கள், தனிப்பட்டவரையோ, ஒரு இயக்கத்தையோ நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தாக்கும் என்றிருக்கும் வாசகங்கள், சில சட்டப் பிரச்சினையை தூண்டக்கூடியதாக இருக்கும் வாசகங்கள் இப்படி பலதுமிருக்கும்.
அதுமட்டுமில்லாமல் சில சமயம் நம்முடைய கருத்துக்கள் மக்களுக்கு ஆவேசத்தை தூண்டிவிடக்கூடும், அதனால்தான் அதை அவர்கள் ஒரு வரம்புக்குள் வைத்திருக்கிறார்கள்.
---------------------------------------------
நாம் எழுதிய ஒரு கருத்தை முழுமையாக வெளியிடுவார்கள் ஆனால் அதே கருத்து இன்னொரு செய்திக்காக நாம் எழுதும்போது அதை வெளியிட மாட்டார்கள். காரணம் அந்த கருத்து இந்த செய்தியைப் பொறுத்தவரை பொருந்தி வராததாக இருக்கும்.
எனக்கும் இந்த மாதிரி நடந்திருக்கிறது, என்னுடைய எழுத்தில் மேலே கூறப்பட்ட எந்த ஒரு காரணமுமில்லை இருந்தாலும் எடிட் செய்துதான் வெளியிட்டார்கள். அதனால் அதை பொருட்படுத்தவில்லை அவர்களுடைய வரைமுறைப்படி செய்திருக்கிறார்கள் என்று இருந்துவிட்டேன்.
------------------------------------------
" யாருக்கு கருத்துக்கள் ஆதரவாக இருக்கின்றது " என்று அவர்கள் பார்ப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் அவர்கள் கஸ்ஸாலி மரைக்காருடைய போட்டோவை நீக்கவில்லை என்பதால் அவருக்கு ஆதரவு என்று கண்டிப்பாக நாம் நினைக்கக்கூடாது.
ஏனென்றால் கஸ்ஸாலி மரைக்கார் சம்பந்தபட்ட செய்திகள் அதிகமாக வெளியிட்டிருக்கிறார்கள் எப்படி என்றால் அவருடைய போட்டோவையும் பிரசுரித்து, தினத்தந்தியில் வெளியானதையும் ஒரு செய்தியாக பிரசுரித்து இருக்கிறார்கள்.
அவர்கள் ஆதரவாக செயல்படுபவர்களாக இருந்தால் முகப்பில் உள்ள போட்டோவை அவர்களே நீக்கி இருப்பார்கள். முகப்பில் அவருடைய பேட்டியையும், போட்டோவையும் வெளியிட்டு உள்ளே அவரை பற்றிய குற்றச்சாட்டுக்கள் அடங்கியச் செய்தியை, போட்டோவுடன் போட்டு இருக்க மாட்டார்கள்.
எனவே இது செய்தித்துறை, ஊடகத்துறை சம்பந்தமான சுதந்திரம் என்பதாக நினைக்கிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன்.
---------------------------------------------
நான்கைந்து மாதத்திற்கு முன்பு வரை வெறும் செய்தியை மட்டும் படித்து விட்டு அங்கலாய்த்துக் கொண்டிருந்தோம்.
எப்போது கருத்து கூற வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தரப்பட்டதோ அன்று முதல் நம் எல்லோருக்குமே ஓர் ஆனந்தம் ஏற்பட்டது, பரவலாக கருத்துக்களை பகிர்ந்துக் கொள்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
ஆகையால் நாம் ஆதங்கப்பட வேண்டாம் இருபுறமும் ( நம் பக்கமும் - இணைய தளம் பக்கமும் ) பார்த்து, இந்த மாதிரி நம்முடைய மனக்குமுறலைக் கொட்டுவதற்கு வாய்ப்புக் கிட்டியதற்கு நன்றி கூறுவோமாக. வஸ்ஸலாம்.
சகோதரர் முத்து வாப்பா அவர்கள் சொல்வது காயல் வெப்சைட் என்பது வெளிநாடு மற்றும் வெளி ஊர்களில் வாழும் காயல் மக்கள் ஊர் நடப்புகளை தெரிந்து கொண்டு அதற்க்கான அவர்களின் கருத்துக்களை தெரிவிப்பதர்க்காக மட்டுமே! இதில் யாரேனும் மிகவும் தவறுதலான வார்த்தயை பயன் படுத்தும் பட்சத்தில் அதனை நீக்குவது தவறு இல்லை இதற்க்கு நீங்கள் கூறிய வார்த்தைகளே உதாரணம்
கசாலி மரக்காரின் புகைபடத்தை இன்னும் நீக்காமல் வைப்பதற்க்கு தாங்கள் சொல்லும் பதில் சரியானதாக தெரிய வில்லை அவருடைய புகைபடத்தை நீக்குவதை நீங்கள் அவருக்கு கொடுக்கும் தண்டணையாக நினைப்பது சரி அல்ல நிச்ச்யம் புகை படத்தை நீக்க வேண்டும் அனைவரின் கருத்தும் இது தான் டிசெம்பர் மாதம் அவர் கொடுத்த பேட்டி முடிந்து போன விஷயம் அதை பற்றி இப்போது யாருக்கும் தேவை இல்லை தயவு செய்து அவருடைய புகை படத்தை நீக்க வேண்டும்
5. மனமார்ந்த நன்றி posted byமுத்துவாப்பா.... (al khobar)[28 February 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2936
அஸ்ஸலாமு அலைக்கும்....
காயல்பட்டணம்.COM ADMINISTRATOR அவர்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய
கருத்தை பதிவு செய்ததற்கும் தங்களின் மிகுந்த வேலைபழுவிற்கிடையே அதற்கான பதிலை உடனடியாக வழங்கியதை கண்டு மட்டில்லா மகிழ்ச்சி. இந்த பிரச்சனைகள் ஈரத்துணி மாதிரி என் இதயத்தில் கனத்து கொண்டிருந்தது அதுதான் தங்களிடம் காற்றாடவிட்டேன் . தங்கள் தரப்பில் தரபட்ட பதில் மிகவும் நியாமானாதே என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. தங்களது பதில் எனக்கு மட்டுமல்ல அனைத்து காயலர்களுக்கும் தங்களது நிலையை உணர ஒரு வாய்ப்பாக அமைந்தது.
6. கருத்து மோதல் ஆரம்பித்து விட்டதா? posted byசாளை S .I .ஜியாவுதீன் (அல்கோபார் )[28 February 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2938
அப்பப்பா.. கருத்து மோதல் ஆரம்பித்து விட்டதா? நன்றாக நடக்கட்டும் அதுவும் ஆரோக்யமாக நடந்தால் நன்று.
தம்பி முத்துவாப்பா, உன்னுடைய ஆர்வத்துக்கும், கடமை உணர்ச்சிக்கும்! பாராட்டுக்கள். அணைத்து வலை தளங்களிலும் வாசகர்களின் கருத்துக்களை தனிக்கை (எடிட்) செய்துதான் பதிக்கின்றார்கள்-மிக சில தளங்களை தவிர. இது நம்மைபோன்ற குதிரைகளுக்கு ஒரு கடிவாளம் மாதிரி தான். வார்த்தையை கொட்டி பதித்து விட்டால் பின்பு நமக்கு தான் ஆப்பு, புரிந்து இருக்குமே.
அடுத்து, கசாலி மரைக்கார் அவர்களுடைய புகைப்படத்தை நீக்குவது, Moderator சொல்லுவது சரி தானப்பா. என்ன, எனக்கும் கூட கொஞ்சம் வருத்தம் தான், home page இல் நம் kayalpatnam .com இருந்தது, நெட்டை திறந்தவுடன் திருவாளர் போட்டோவிலா முழிக்கனும் என்று home page யை மாற்றி விட்டேன். அவ்வளவுதான். Very Simple.
என் முந்திய கமெண்ட்ஸ் இல் "எதையோ குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் என்ற பழமொழி” என்று பதித்து இருந்தேன், எனக்கு பின்பு சங்கடமாக இருந்தது. அதை edit பண்ணியதும் சற்று நிம்மதி. (உடனே எனக்கு முகம் தெரியாத 7 நபர்களிடம் இருந்து மெயில், காக்கா உங்களின் comments யை எடிட் பண்ணி விட்டார்கள் என்று, நமக்கும் வாசகர்களா? என்று திகைப்பு, நன்றிகள்.).
** நான் "பூனையை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்,அது மீண்டும் செத்தைக்கு செல்லும்" என்ற அர்த்தத்தில் தான் பதித்தேன், நெசம்மா.. ஆனால் moderator வேறு மாதிரி அர்த்தம் கொண்டு எடிட் பண்ணிவிட்டார்.ஓகே.ஓகே .
7. Innocent until proven posted byA.W.S. (Kayalpatnam)[28 February 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 2939
A Person is not guilty unless until proven in the court of law. He has to be prosecuted, judged and convicted by court. Until then he is innocent. We can not judge a person just by allegation(s) or confession.
8. Court & laws posted byAhamed mustafa (Dubai)[28 February 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2941
Indian court of laws can prove a criminal to be innocent so easily, for want of evidences. If we go by the laws even Kassali & his brother, can escape so easily.It doesn't require a court to judge culprits like this.Even a lay man can decide as to what kassali has done to his office.If we are to go by the law, then it won't be any surprise,if one day this guy walks out acquitted.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross