காயல்பட்டினம் நகராட்சியில் செக் மோசடி செய்ய முயன்றது தொடர்பாக நகராட்சியின் துணைத் தலைவர் கஸ்ஸாலி மரைக்காரின் சகோதரர் செய்யத் முஹம்மது கைது செய்யப்பட்டு, இன்று திருச்செந்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸாரிடம் இந்த செக் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், தனது சகோதரரும், நகராட்சித் துணைத் தலைவருமான கஸ்ஸாலி மரைக்கார் கேட்டுக் கொண்டதன் பேரில் செக் கலெக்ஷன் போட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆறுமுகனேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன் தலைமையில் போலீஸார் குஜராத்தில் இவரை கைது செய்ய கடந்த புதன்கிழமை புறப்பட்டு சென்றனர். காவல்துறையினர் அங்கு உமர்கவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டான்சிட்டி வாரண்டு மூலம் அவரை திங்கட்கிழமை ஆறுமுகனேரி கொண்டு வந்தனர்.
செய்யத் முஹம்மது ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மாலை ஆஜர் செய்யப்பட்டு, பின்னர் திருச்செந்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
1. Ghazali Maraicar's Check Forgery posted bySadakathullah. S.M.A (Riyadh)[28 February 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2940
When many of our organization serving for the community without any cause,Guys like this(Ghazali Maraicar)is a Black Mark on White Shirt.He should be punished.This will be a lesson to others
வெறும் அம்பை நொந்து பயனில்லை எய்தவனைத்தான் பிடிக்க வேண்டும்.உண்மையில் இந்த நபர் நிரபராதியாகக்கூட இருக்கலாம்.காவல்துறையின் விசாரனை சரியான பாதையில் முன்னேறினால் மட்டுமே,இன்னும் பல கையாடல்கள் வெளிச்சத்திற்கு வரலாம்.வரும் என எதிர்பார்த்துக் காத்திருப்போம்.
கொள்ளை அடிப்பதில் வல்லமை கொண்டத் திருட்டு உலகமடா!தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!இதயம் திருந்த மருந்து சொல்லடா...என்ற பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது. இந்த ஜென்மங்கள் எப்ப திருந்துமோ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross