காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை, காயல்பட்டினம் அரிமா சங்கம் ஆகிய பொதுநல அமைப்புகள் இணைந்து 20.02.2011 அன்று காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு மற்றும் இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம்களை நடத்தின.
முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி குளவி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் நிறுவனர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் ஆலோசகர் ஆசிரியர் எம்.அப்துல் ரசாக் அறிமுகவுரையாற்றினார்.
காயல்பட்டினம் கே.வி.ஏ.டி. புகாரி ஹாஜி அறக்கட்டளையின் மக்கள் செய்தித் தொடர்பாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப், அரிமா சங்க உறுப்பினர் ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் செயலாளர் எம்.எல்.ஷேக்னாலெப்பை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில், தூத்துக்குடி ஆர்.ஆர்.மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஆர்.சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சர்க்கரை நோய் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து மேரி தங்கம் விளக்கிப் பேசினார். டாக்டர் ஸ்ரீராம் கணகவேல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை மேலாளர் ஆஷிக் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், ஆலோசகர் ஆசிரியர் அப்துல் ரசாக், சமுதாயக் கல்லூரி நிறுவனர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, அதன் ஆசிரியையர், அலுவலர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவியர் செய்திருந்தனர்.
சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் காலையில் நடைபெற்றது. இதில் 160 பேர் பங்கேற்றனர். இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம் பிற்பகலில் நடைபெற்றது. இதில் 40 பேர் கலந்துகொண்டு தமது இரத்தப் பிரிவுகளை அறிந்துகொண்டனர்.
|