பாராளுமன்றத்தில் இன்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2011 - 2012 ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.
அதன் அதிகாரப்பூர்வ சாராம்சமும், அமைச்சரின் முழு உரையும் கீழே தரப்பட்டுள்ளது. அமைச்சர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு :-
இந்திய பொருளாதாரம் 2010 - 2011 நிதி ஆண்டில் 8.6 சதவீதம் உயர்ந்தது. தொடரும் விலை உயர்வு வருத்தம் அளிப்பதாக உள்ளது.
ஏற்றுமதி 29.4 சதவீத அளவும், இறக்குமதி 17.6 சதவீத அளவும் உயர்ந்துள்ளன. வரும் நிதி ஆண்டில் (2011 - 2012) இந்திய பொருளாதாரம் 9
சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நேரடி வரி குறியீடு (Direct Tax Code) 2011 - 2012 நிதி ஆண்டில் இறுதி செய்யப்பட்டு, ஏப்ரல் 1, 2012 முதல் அமலுக்கு வரும். Goods
and Services Tax (GST) குறித்த கருத்துவேறுபாடுகள் மாநில அரசுகளுடன் பெரும்பாலும் களையப்பட்டுவிட்டன. இது குறித்து மசோதா விரைவில்
பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறித்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
500 கோடி ரூபாய் மூலதானத்தில் பெண்கள் சுய உதவி குழுகளுக்கான நிதிமூலம் உருவாக்கப்படும்.
ஒரே சொத்தினை கொண்டு பலமுறை கடன் பெரும் முயற்சியை தடுக்க மார்ச் 31, 2012 க்குள் Central Electronic Registry உருவாக்கப்படும்.
பாம் ஆயில் உற்பத்தியை பெருக்க 300 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்யப்படும். காய்கறிகள் உற்பத்தியை பெருக்க 300 கோடி ரூபாய் ஒதிக்கீடு
செய்யப்படும்.
Infrastructure துறைக்காக 2,14,000 கோடி ரூபாய் ஒதிக்கீடு வரும் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.
நாட்டின் வருமானத்தில் பொருள்கள் உற்பத்தி செய்தல் (Manufacturing) துறையின் பங்கு தற்போதைய 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக
இன்னும் பத்து ஆண்டில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு பண பிரச்சனையை அணுக ஐந்து கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கல்வித்துறைக்கான ஒதுக்கீடு 24 சதவீதம் உயர்த்தப்படுகிறது. உடல் நலன் துறைக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரபிந்த்ரநாத் தாகூரின் 150 வது பிறந்தநாளினை கொண்டாடும் முகமாக ஒரு கோடி ரூபாய் தொகைக்கான சர்வதேச பரிசு (உலக சகோதரத்துவம்)
அறிவிக்கப்பட்டுள்ளது.
2011 - 2012 ஆண்டுக்குள் 2000 பேர் அல்லது அதற்கு அதிக மக்கள் தொகை கொண்ட 73,000 குடியிருப்புகளுக்கும் வங்கி வசதி வழங்கப்படும்.
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக இவ்வாண்டு 8000 கோடி ரூபாய் வழங்கப்படும்.
வரும் ஆண்டில் (2011-2012) வரிகள் மூலம் வருமானம் 9,32,440 கோடி ரூபாய் எனவும், வரி அல்லாத தோதுகள் மூலம் வரும் வருமானம்
1,25,435 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிதி ஆண்டில் செலவு 12,57,729 கோடி ரூபாயாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
மாதச் சம்பளம் வாங்குவோர் ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்யத் தேவையில்லை. அவர்களுக்கான வரியை, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனமே
பிடித்துக் கொடுத்து விடுவதால் இந்த விதி விலக்கு அளிக்கப்படுகிறது.
தனிநபர் வரி கட்ட வரம்பு தற்போதைய 1,60,000 ரூபாய் அளவில் இருந்து 1,80,000 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2000 ரூபாய்
வரிசலுகை கிடைக்கும்.
மூத்த குடிமகன் என எடுத்துக்கொள்ளப்படும் வயது 65 யிலிருந்து 60ஆக குறைக்கப்பட்டுள்ளது . மேலும் 2,50,000 ரூபாய் வருமானம் வரை அவர்கள் வரிகட்ட
தேவையில்லை.
மேலும் 80 வயதை தாண்டியவர் தனிநபர் ஆண்டு வருமானம் 5,00,000 ரூபாய் வரை வரிகட்ட தேவையில்லை.
ஒரு நாளுக்கு, ஒரு அறைக்கு 1000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் ஹோட்டல்கள் இனி அத்தொகைக்கு சேவை வரி கட்டவேண்டும்.
மத்திய குளுகுளு வசதி (Centralised Air conditioning) கொண்ட, 25 மெத்தைகள் மேலுள்ள, மருத்துவமனைகள் இனி சேவை வரி கட்டவேண்டும்.
விமான சேவைக்கான சேவை வரி உயர்த்தப்படுகிறது.
சேவை வரிகள் மூலம் வரும் வருடம் கூடுதலாக 4000 கோடி ரூபாய் ஈட்டப்படும். நேரடி
வரிகள் மூலம் 11, 500 கோடி ரூபாய் இழப்பும், மறைமுக வரிகள் மூலம் 11, 300 கோடி ரூபாய் கூடுதலாகவும் நிதி திரட்டப்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross