Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:19:50 PM
வியாழன் | 30 ஐனவரி 2025 | துல்ஹஜ் 2009, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:2212:3515:5518:2719:39
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:38Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:16
மறைவு18:23மறைவு19:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:2605:5106:16
உச்சி
12:31
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4519:1019:36
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5741
#KOTW5741
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 1, 2011
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு! ஏப்ரல் 13 அன்று நடைபெறும்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3630 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய தேர்தல் ஆணையம் தலைவர் எஸ்.ஒய்.குரைஷி புது டில்லியில் இந்த அறிவிப்பினை இன்று வெளியிட்டார்.

அதன்படி சட்டசபைக்கான தேர்தல் தமிழகத்தில், புதுச்சேரியில், கேரளாவில் ஏப்ரல் 13 அன்றும், அஸ்ஸாமில் ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 11 அன்றும், மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 27, மே 3, மே 7, மே 10 அன்றும் நடைபெறும்.

மே 13 அன்று அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 4.59 கோடி வாக்காளர்கள், ஏறத்தாழ 54,000 வாக்குச்சாவடிகளில் தங்கள் வாக்கினை வழங்குவர். தேர்தல் குறித்த முறையான அறிவிப்பு மார்ச் 19 அன்று வெளியிடப்படும்.

April - May 2011: India Assembly Elections Schedule


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. 5நிமிடம் சிந்தியுங்கள் 5வருடம் பற்றி......
posted by முத்துவாப்பா.... (al khobar) [01 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2965

ஆஹா தேர்தல் வந்துவிட்டது... இனி நமக்கு நல்ல வேட்டை தான் இடை தேர்தலயே நமக்கு ஒரு ஓட்டுக்கு ஒரு கட்சியினரால் ரூபாய்.1000 கிடைத்தது. இந்த தேர்தலில் எவ்வளவு கிடைக்குமோ என்று கணக்கு போட ஆரம்பித்து விட்டீர்களா காயலர்களே...

போதும் எத்தனை நாளைக்கு தான் நாம் இன்னும் இந்த பத்தாம் பசலியாகவே இருப்பது .உங்களுக்கு கிடைத்ததோ ஒரு ஆயிரம் ரூபாய் அதன் மூலம் அவர்கள் எத்தனை கோடி அடித்தார்கள் என்று பார்த்தீர்களா..??. இன்னும் காயல்பட்டணம் நமது கழக பட்டணம் என்று சொல்லி நம்மையெல்லாம் முட்டாள்களாகவும் மூடர்களாகவும் ஆக்கி கொண்டு இருக்கும் கட்சிக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா..? நம் பழமையான முஸ்லிம் கட்சிக்கு அவர்கள் கொடுத்த தொகுதியோ மூன்று அதுவும் அவர்கள் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். அந்த மூன்று அவர்கள் நமக்கு போட்ட நாமமாகவே (111) கருதுகிறேன். இன்று வந்த ஒரு ஜாதி கட்சிக்கு 31 தொகுதி, மற்றுமொறு ஜாதி கட்சிக்கு 10 தொகுதி. இந்த பசுத்தோல் போர்த்திய புலிகளை நாம் வேட்டையாட வேண்டாமா..?? சிந்தியுங்கள்..எதிரியை கூட மண்ணிக்கலாம் துரோகிகளை மண்ணிக்க கூடாது....இந்த தேர்தலாவது அவர்களுக்கு பாடாமாக இருக்கட்டும். 5நிமிடம் சிந்தியுங்கள் 5வருடம் பற்றி......

என்றும் அன்புடன்
முத்துவாப்பா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஆஹா
posted by mohamed (Dammam) [01 March 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2968

ஆஹா என்ன அருமையான கருத்து...நண்பர் சொன்னது போல் ஜெயா க்கு ஒட்டு போடுவோம்..இந்த அம்மா தான் மமக க்கு நாமம் போட்டவள். எல்லாரும் 10 சீட் தருவார்கள் என்று இருக்கும் போது 3 தந்து கட்சியை ஒழிக்க அழகா திட்டம் போட்டவள். ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரமே சாத்தான் குளத்தில் தொடக்கி வைத்தவள்...ஆஹா...ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க எதிர்தவள்....என்னை பொறுத்தவரை திராவிட கட்சிக்கு போடாமல் ஒரு நல்லவருக்கு சுயைச்சைக்கு போடலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மக்களுக்காக தேர்தலா ? - இல்லை தேர்தலுக்காக மக்களா ?
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [01 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2969

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13 அன்று நடைபெறும்!! என்று அறிவித்திருக்கிறார்கள் ஆனால் 10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு எழுதுபவர்களுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி கடைசிப் பரீட்சை முடிகிறது.

ஏன் இப்படி செய்கிறார்கள் ??? - மாணவ மணிகள் எப்படி படிக்க முடியும் ???

தேர்தல் பிரச்சாரங்களுக்காக நாடு முழுவதும் ஊர்வலமும் , கூட்டங்களும், ஒலி பெருக்கியின் ஓசையும், ஆட்டமும், பாட்டமும் , கூத்தும் , கும்மாளமுமாக இருக்குமே!!!!!!!!!!!!!!!!.

மாணவர்கள் மன நிலை என்னவாகும் ? - கவனம் சிதறாதா ?.

இது அரசியல் வாதிகளின் ஏற்பாடா ? - இல்லை அதிகாரிகளின் கவனக் குறைவா ?

மக்களுக்காக தேர்தலா ? - இல்லை தேர்தலுக்காக மக்களா ?.

தேர்தலுக்காக மக்கள் என்றால் !!! - ஒன்றும் சொல்வதற்கு இல்லை!!!.

மக்களுக்காக தேர்தல் என்றால் மாணவர்களுடைய நன்மைக்கென்றில்லை - ஒவ்வொரு குடிமகனுடைய நன்மையையும் கருத்தில் கொண்டு செயல்பட்டிட வேண்டும்.

எனவே சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை மாற்றி வைப்பார்களாக.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அய்யா... இனி ஜாலிதான்...
posted by Sulthan (Sudan) [01 March 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 2970

எலக்சன் தொடங்க போகுது... இனி ஓசி பிரியானி பொட்டலம் கிடைக்கும் அப்புறம் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் அய்யா... ஜாலிதான்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சிந்தித்து ஓட்டு போட வேண்டும்
posted by Sulthan (Sudan) [02 March 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 2975

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கும் மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. ஜனநாயக நாட்டில் ஓட்டுரிமையை பணத்துக்காக விற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் பணம் கொடுத்தவன் ஆளுவான். வாக்காளர்களிடம் கொடுத்த பணத்தை விட, பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பதே குறிக்கோளாக கொண்டு செயல்படுவான்.5 நிமிடம் சிந்தியுங்கள்... நல்ல அரசை அமையுங்கள்...

சிறந்த ஆட்சியாளர்களை தேர்வு செய்ய மக்கள் அனைவரும் சிந்தித்து ஓட்டு போட வேண்டும். 2006க்கு முன் வரை நாட்டில் தேர்தல் நடத்த மிகவும் சிரமமான பகுதிகளின் பட்டியலில் பீகார், உத்திரபிரதேச மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 2006க்கு பின் இந்த பட்டியலில் பீகார், உத்தரபிரதேச மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதல் இடம் பெற்று விட்டது.(சொன்னவர்: இந்திய முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி)

உஷார்..... உஷார்... உஷார்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சகோதரர் முஹம்மது அவர்களுக்கு...
posted by முத்துவாப்பா.... (al khobar) [02 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2981

அருமை சகோதரர் முஹம்மது (தம்மாம்) அவர்களே .. தங்கள் பாரட்டுக்கு நன்று. நான் என்னுடைய கருத்தில் ஒரு இடத்தில் கூட ஜெயாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல வில்லையே.. அப்படி இருக்க தாங்கள் ஏன் "ஆஹா என்ன அருமையான கருத்து...நண்பர் சொன்னது போல் ஜெயா க்கு ஒட்டு போடுவோம்.." என்று நான் கூறியதாக குறிப்பிட்டீர்கள் என்று தெரியவில்லை... !!!????

என்றும் அன்புடன்
முத்துவாப்பா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அன்புச சகோதரர்களே ... சிந்தியுங்கள்
posted by SUBHAN (ABU DHABI) [02 March 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2989

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, வரும் சட்டசபை தேர்தலில் எட்டு தொகுதிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம் நாகூரில், மாநில தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது.

மாநில தலைவர் காதர் மொகிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணியில் இடம் பெற்றுள்ள எங்கள் கட்சிக்கு, மூன்றரை சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எட்டு தொகுதிகள் கேட்போம். 21 மாவட்டங்களில், 41 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய கட்சியாக முஸ்லிம் லீக் உள்ளது. கடையநல்லூர், ராமநாதபுரம், முதுகுளத்தூர், பழநி, நாகை, ஆம்பூர், பெரம்பூர் உட்பட எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடிய 21 தொகுதிகள் பட்டியலை, முதல்வரிடம் அளித்துள்ளோம். இருப்பினும், எங்களுக்கு கூட்டணியில் தொகுதி என்பது முக்கியமில்லை. சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக, நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தி.மு.க., மீண்டும் ஆட்சியில் அமர்வதற்காக நாங்கள் எதிர்பார்ப்பில்லாமல் பாடுபடுவோம். இவ்வாறு காதர் மொகிதீன் கூறினார் - தினசரி நாளிதழ் ( 25-02-2011 )

அன்புச சகோதரர்களே ... சிந்தியுங்கள் ....

தெருவுக்கொரு ஜாதிக்கட்ச்சி வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்கள் ஜாதிக்கு 10 சீட்டு வேண்டும் 15.வேண்டும் என்று பலமுள்ளக்கட்சிகளிடம் பேரம் பேசும்போது ... ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக இருக்கும் இவர்கள் ஏன் இப்படி தடுமாறுகிறார்கள் ...? கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் சாஹிப் அவர்களின் தலைமைக்கு பிறகு நமக்கு எந்த ஒரு அரசியல் கட்சியிடமிருந்தாவது உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா...? நேற்று முளைத்தக் கட்சிகளெல்லாம் தங்களுக்கென்று ஒரு சின்னம் வைத்துக்கொண்டு அதன் வாயிலாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் மக்களவையிலும் ,சட்டசபையிலும் தங்கள் இனமக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்களே அப்படி நம்மால் சுதந்திரமாக செயல் படமுடிகிறதா..? நம் கருத்துக்களைப் பேச வேண்டுமென்றால் நாம் எந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோமோ அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பேசமுடியும்.அதுவும் அவர்களது எண்ணங்களைத்தான் நாம் பிரதிபலிக்க வேண்டும். ஏன் இந்த அவல நிலை .... ? சிந்திப்போம் ......... செயல்படுவோம் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சிந்திப்போம்!செயல்படுவோம்!!
posted by kavimagan (dubai) [02 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2990

ஓட்டுக்கு பணம் கொடுத்தல் சாத்தான்குளத்திலிருந்தா துவங்கியது? சைதாப்பேட்டயிலிருந்து. கட்அவுட்,கள்ளஓட்டு கலாச்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது? கோபாலபுரத்திலிருந்து. அராஜகம்,ஆட்கடத்தல்,ஆள்மாறாட்டம் அறிமுகம் ஆனது? ஆலிவர் ரோட்டிலிருந்து. நூறாண்டு பாராம்பர்யமிக்க கட்சியினை, சொந்த சின்னத்தில் போட்டியிட விடாமல் அழிக்க நினைப்பது கயமைத்தனமா? ஆரம்பித்த ஓராண்டுகாலத்திற்குள்,மூன்று சீட்டு மற்றும் சுய சின்னத்தில் போட்டி என்ற கவ்ரவத்தை வழங்கியதா? ஆந்திரத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர் ஜெயலலிதா என்று சொல்வது ஆத்திரத்தாலா? அறியாமையாலா? ஐந்து சதவிகிதம் இடஒதுக்கீடு என்பது சட்டசிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்தை அனுபவத்தின் அறிவால் பதிவு செய்தவர் ஜெயா.பின்னர் அவர் சொன்னபடிதானே நடந்தது? இன்னும் விவாதிப்போம் நண்பர்களே! முடிந்தால் டிஷ்கஷன் போர்டுக்கு வாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2025. The Kayal First Trust. All Rights Reserved