காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் (சிங்கித்துறை) தமிழக அரசின் கடலோரபகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள வீடுகளை மாற்று இடத்தில் கட்டும் திட்டத்தின் கீழ் [Vulnerability Reduction of Coastal Communities (VRCC)] கட்டப்பட்டு வரும் 169 குடியிருப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே.
கட்டுமானப் பணிக்கான ஒப்புதல் நகராட்சியிடம் இருந்து பெறப்படவில்லை என்று காயல்பட்டினம் நகராட்சி சார்பில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 21 அன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில் கட்டுமான பணிகளுக்கு
இடைக்கால தடை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இத்திட்டம் குறித்து காயல்பட்டணம்.காம் சில வினாக்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியிருந்தது. அக்கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கும்படி இத்திட்டத்தினை செயல்படுத்தும் தமிழ் நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு மாவட்ட ஆட்சியர் கேள்விகளை அனுப்பியிருந்தார். அக்கேள்விகளுக்கான பதில்கள் தற்போது பெறப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
இத்திட்டத்திற்கு பயனாளிகளாக மாவட்ட ஆட்சியர் 213 பெயரை பரிந்துரை செய்திருந்தார். அதனை பரிசோதித்த அரசு சாரா தன்னார்வ நிறுவனம் (NGO), 169 பேரை தேர்ந்தெடுத்தது. இந்த NGO வின் பெயர் Scientific Educational Development for Community Organization - SEDCO என காயல்பட்டணம்.காம் மற்றொரு தகவல் மூலம் அறிகிறது.
இத்திட்டத்திற்காக 1.46 ஹெக்டர் அளவு இடம் பெறப்பட்டது/ஒதுக்கப்பட்டது. இது 148 வீடுகளுக்கு உரியது. மீதி 21 வீடுகளுக்கான இடம் பயனாளிகளிடம் இருந்தே பெறப்பட்டது.
ஒப்புதல் பெறவேண்டிய துறைகள் குறித்து வினவியதற்கு இத்திட்டத்திற்கான ஒப்புதல் Local Planning Authority அல்லது DTCP இடம் பெறவேண்டும் என்றும், தேவைப்பட்டால் CRZ ஒப்புதல் பெறவேண்டும் என்றும் குடிசை மாற்று வாரிய பதில்கள் தெரிவிக்கின்றன. ஒப்புதல் பெறவேண்டிய துறைகளில் நகராட்சியின் பெயர் குடிசை மாற்று வாரியத்தால் குறிப்பிடப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
மேலும் DTCP துணை இயக்குனர் மேற்கோள் எண் 218/2011/TUI மூலம் Layout ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த பதில்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்புதல் இவ்வருடம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில்தான் பெறப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது நகராட்சி சார்பாக வழக்கு தொடரப்பட்டப்பின்னர் இந்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மேலும் CRZ ஒப்புதலுக்காக தற்போது விண்ணப்பம் அனுப்பபட்டிருப்பதாகவும் அந்த பதில்கள் தெரிவிக்கின்றன. இதுவரை CRZ ஒப்புதல் பெறப்படவில்லை என்ற தகவல் ஏற்கனவே காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1. சட்ட மீறல்கள் posted byHusain Noorudeen (Abu Dhabi)[02 March 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2986
அப்பட்டமான சட்ட மீறல்கள் நடந்திருப்பது தெரிய வருகிறது. நமதூர் மக்கள் என்ன செய்யப்போகிறோம்? வருகின்ற தேர்தல் நமக்கு ஒரு முக்கிய துருப்புச் சீட்டு. அதை நாம் எப்படி நமதூரின் முன்னேற்றத்துக்காகவும் சமூக பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தவுள்ளோம்? பொது அமைப்புகள் இது குறித்து சீக்கிரமே கருத்தாய்வு நடத்தி நல்ல முடிவை அறிவிக்கலாம்.
3. கள்ளன் கப்பளுக்குள்ளேதான்... பிடிபடுவான். posted bys.s.md meera sahib. (riyadh)[03 March 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2991
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயலர்களே.... இது முற்றிலும் யகூதிகளின் யுக்தியில் ஒன்று. கூடிய விரைவில் (தேர்தலுக்கு முன்) நாம் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால்... தலை குனிய வேண்டியதுதான் வரும். இதில் விட்டுக்கொடுத்தால்... குட்ட,குட்ட குனியவேண்டியதுதான் வரும். இது நம் சந்ததியருக்கு ஆபத்து. இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேப்பானாம்....! என்ற கதை நிஜமாகிறது. மக்கள் சக்தியை காட்ட அமைதியான முறையில் தொடர் போராட்டம் தான் நல்ல முடிவை தரும். வஸ்ஸலாம்.
4. Like to hear posted byA.W.S. (Kayalpatnam)[03 March 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 2994
It appears to me that visitors (Aaam Admi)to Kayalpatnam.com have more information about the housing project than the "Kayal Aikkiya Peravai" and Kayalpatnam Municipality.
Thanks to Kayalpatnam.com
I guess (guided by Aikkkiya Peravai), our municipality filed the case against this government housing project. If so, it is a wrong guidance/step. According to the Law expert, the Tamil Nadu government can easily tame our municipality. Even our district Collectorate can do the job.
The court has temporarily ordered to stop the project and I was told that the government did not object to the "Stay” possibly because of the forthcoming Assembly election.
So what can be done?
Individual(s) can file the case against the project under PIL (Public Interest Litigation) to make the case stronger. For that, one needs to know the details of the order. I tried to get the copy of the "Order" from Aikkiya Peravai and from the Municipality, but failed.
I like to hear from Aillkiya Peravai and or from member(s) of our municipality through this site.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross