இன்று பிப்ரவரி 27 (ஞாயிறு) தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து ஊத்தும் [Intensive Pulse Polio Immunisation (IPPI)] முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும், ஏற்கனவே பல முறை போலியோ சொட்டு மருந்து ஊத்தப்பட்டிருந்தாலும், மீண்டும் சொட்டு மருந்து ஊத்தப்படவேண்டும்.
இதற்காக தமிழக அரசு, மாநிலம் முழுவதும் - அரசு மருத்துவமனைகள் உட்பட ஏறத்தாழ ௦40,000 இடங்களில் - முகாம்கள் அமைத்துள்ளது. இப்பணியினை - தன்னார்வலர்கள் உட்பட 2 லட்சம் பேர் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 70 லட்சம் குழந்தைகள் இம்முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து பெறுவர்.
நடப்பு வரிசையில் முதல் தவணை கடந்த ஜனவரி 23 அன்று வழங்கப்பட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross