காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள காயிதேமில்லத் நகரில், அப்பகுதி மக்களுக்காக “பெரிய சம்சுத்தீன் ஒலியுல்லாஹ் பள்ளிவாசல்” என்ற பெயரில் பள்ளிவாசல் ஒன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா 07.03.2011 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ பள்ளிவாசலைத் திறந்து வைத்து, வக்ஃப் செய்யவும், நகரின் மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றவும் உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளி தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், துணைத்தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, செயலாளர் ஹாஜி ஏ.கே.கலீல், துணைச் செயலாளர் கே.அப்துர்ரஹ்மான் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர். |