காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளியில் தற்சமயம் 10ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அப்பள்ளி மாணவியர் இரண்டாம் முறையாக பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வை இவ்வாண்டு சந்திக்கவுள்ளனர்.
இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் இப்பள்ளியில் 11ஆம் வகுப்பு துவங்குவதற்கு அரசு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இயற்பியல், வேதியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களைக் கொண்ட முதல் பிரிவு,
இயற்பியல், வேதியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களைக் கொண்ட இரண்டாம் பிரிவு,
இயற்பியல், வேதியல் தாவரவியல், விலங்கியல் பாடங்களைக் கொண்ட மூன்றாம் பிரிவும்,
வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களைக கொண்ட நான்காம் பிரிவும் இவ்வாண்டு துவக்கப்படவுள்ளது.
இப்பாடப் பிரிவுகளுக்கான மாணவியர் சேர்க்கை வரும் மார்ச் மாதம் 02ஆம் தேதி துவங்கும் எனவும், மேலும் விபரங்களறிய பள்ளியின் +91 4639 285999, 285855 ஆகிய தொலைபேசி எண்களில், ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து இதர நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை தொடர்புகொண்டு கேட்டறியலாம் எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மீனா சேகர்,
தலைமையாசிரியை,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி,
காயல்பட்டினம்.
Administrator: News corrected |