அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவுக்கு இன்று 63ஆவது பிறந்தநாள். இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் நகர அதிமுக கிளை சார்பில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கும், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் நகர அதிமுக செயலாளர் எஸ்.எம்.செய்யித் காஸிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கட்சியின் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் வடமலைப்பாண்டியன் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுப்பொட்டலங்களை, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா வழங்கினார்.
அத்துடன் துளிர் பள்ளி வளர்ச்சிக்காக வடமலைப்பாண்டியன் சார்பாக ரூபாய் பத்தாயிரம் தொகைக்கான காசோலையையும் அவர் வழங்கினார்.
அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட அன்னதானத்தின்போது அதன் தலைமை மருத்துவர் டாக்டர் பாவநாசகுமார், துளிர் சிறப்புக்குழந்தைகள் பள்ளியில் அதன் பெற்றோர் - ஆசிரியர் சங்க செயலாளர் ஆயிஷா ஸாஹிப் தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில், எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், எஸ்.எல்.அன்வர், என்.எம்.அஹ்மத் கே.ஏ.எஸ்.அப்துல் காதர், வி.எம்.எச்.முஹ்யித்தீன் தம்பி, காளியப்பன், சுயம்புலிங்கம், அருணாச்சலக்கனி உட்பட கட்சியின் ஒன்றிய - நகர நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
நகர அ.தி.மு.க. சார்பாக,
N.M.அஹ்மத்,
மரைக்கார்பள்ளித் தெரு, காயல்பட்டினம்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |