சென்னை ஷேக்ஸ்பியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இங்க்லீஷ் ஸ்டடீஸ் நிறுவனம் சார்பில், அண்மையில் மாநில அளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியைச் சார்ந்த நான்கு மாணவ-மாணவியர் பரிசுகளை வென்றனர்.
காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சார்ந்த எம்.என்.அஹ்மத் மீராஸாஹிப் நாஸர் என்பவரின் மகன் நான்காம் வகுப்பு பயிலும் ஏ.எம்.என்.அப்துர்ரஹீம்,
குத்துக்கல் தெருவைச் சார்ந்த அபுல்ஹஸன் ஷாதுலீ என்பரின் மகள் ஐந்தாம் வகுப்பு பயிலும் சித்தி ஹாலிதா,
கற்புடையார்பள்ளி வட்டம் சாலையைச் சார்ந்த அமீர் முஹ்யித்தீன் என்பவரின் மகன் யு.கே.ஜி. பயிலும் ஏ.எம்.முஹம்மத் பஹ்ருத்தீன்
ஆகிய சாதனை மாணவ-மாணவியரைப் பாராட்டி, 20.02.2011 அன்று மாலை 04.45 மணிக்கு, காயல்பட்டினம் கே.டி.எம். தெரு தாயிம்பள்ளிவாசல் எதிரில் அமைந்துள்ள சீதக்காதி நினைவு நூலக வளாகத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சார்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ், எல்.டி.எஸ்.கோல்டு ஹவுஸ், ஜுவெல் ஜங்ஷன், ஃபேஷன் பர்தா மஹால், ஜென்னத் கலெக்ஷன்ஸ், டைமண்ட் ஸ்டேஷனரி, காயல் சிட்டி ஸ்டோர்ஸ், ஏ.எல்.எஸ். ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ், கராத்தே மாஸ்டர் சென்செய் இர்ஃபான் ஆகியோர் அனுசரணையளித்திருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சீதக்காதி நினைவு நூலக வாசகர் வட்ட தலைவர் எஸ்.எச்.முஹம்மத் நியாஸ், செயலாளர் ஏ.எல்.எஸ். மாமா ஆகியோர் செய்திருந்தனர்.
ஆங்கில புலமைத் தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற கே.டி.எம். தெருவைச் சார்ந்த ஏ.எஸ்.எல்.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ் மகள் ஒன்பதாம் வகுப்பு பயிலும் எம்.எஸ்.ஃபாத்திமா ஃபஸீஹா என்ற மாணவிக்கு, காயல்பட்டினம் ரஹ்மானிய்யா பள்ளியின் ஆண்டுவிழாவின்போது சிறப்புப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
Y.M.முஹம்மத் தம்பி,
A.K.M.ஜுவல்லர்ஸ்,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |