தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, 1.15 மணிக்கு முடிகிறது.
சரியாக 10 மணிக்கு தேர்வர்களிடம் வினாத்தாள் வழங்கப்படும். 10 நிமிடம் வினாத்தாளை படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடம் விடைத்தாள்
பூர்த்தி செய்யவும் அவகாசம் வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வு விதிமுறைகள் குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியது:
தேர்வு மையத்திற்கு அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள் காலை 8 மணிக்கு சென்று விட வேண்டும். தேர்வு முடிந்து
விடைத்தாளை பெற்றதும் தாளின் எதிர் எதிர் பக்கங்கள் சந்திக்கும் இடங்களில் ‘எச்.எஸ்.இ.’ என்ற முத்திரையை கண்காணிப்பாளர்கள் பதிவு
செய்ய வேண்டும். மேலும் விடைத்தாளின் முதல், கடைசி பக்கங்களிலும் இந்த முத்திரை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பார்வையற்ற
மாணவர்கள் தேர்வு எழுத உதவியாளர் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். அதேபோல் மூளை மற்றும் நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்ட,
கற்றலில் குறைபாடுள்ள ‘டிஸ்லெக்ஸியா‘ மாணவர்களுக்கு மற்றவர்களை விட கூடுதலாக 1 மணி நேரம் தேர்வு எழுத நேரம் வழங்கப்படும்.
இவ்வாறு தேர்வுத்துறை அதிகாரிகள் கூறினர்.
தகவல்:
தினகரன்
|