தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் அதன் அலுவலகத்தில், பெண்களுக்கான மார்க்கம் தொடர்பான கேள்வி-பதில் நிகழ்ச்சி வரும் 27.02.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
த.த.ஜ. மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துந்நாஸர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பெண்களின் மார்க்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார். இந்நிகழ்ச்சி, நகர த.த.ஜ.வின் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான ஐ.டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
முன்னதாக, 13.02.2011 அன்று, “இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட அனாச்சாரங்கள்” என்ற தலைப்பில் முஜாஹித் சிறப்புரையாற்றினார். |