சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி (06023) வாராந்திர சிறப்பு ரயில், வரும் 13ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை ஒவ்வொரு புதன் கிழமை இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இரவு 11.30க்கு புறப்படும் இந்த ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோயில்பட்டி, மணியாச்சி வழியாக மறுநாள் மதியம் 12.15க்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை சென்ட்ரல் (06024) வாராந்திர சிறப்பு ரயில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.10க்கு சென்னை சென்றடைகிறது. இந்த ரயில் வரும் 14ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
தகவல்:
தினகரன்
|