காயல்பட்டினம் பிரதான வீதியில், அஞ்சலகத்தையொட்டியுள்ள பேருந்து நிறுத்த பயணியர் ஓய்வுக் கூடம் பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. பெண்கள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த அங்குள்ள இருக்கைகள் இடிந்து பயன்பாடற்ற நிலையில் காணப்படுகிறது.
குடிமக்களுக்கு அது முற்றிலும் பயனற்றுப் போனாலும் கூட, ஒரு சில “குடி”மக்களுக்கு அது பயனளித்துக் கொண்டுதானிருக்கிறது என்பதை உணர்த்தும் நேற்றைய காட்சி:-
1. பாராட்டாமல் இருக்க முடியவில்லை posted byசாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[07 March 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3052
தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்குக் வந்ததால் அடுத்த அம்மா ஆட்சி வரும் வரை இந்த ஓய்வுக் கூடத்திற்கு விடிவு இல்லை. அதுவரை "குடி" மக்கள் உபயோகத்திற்கு என்று போர்டு மாட்டி விடலாம்.
என்றாலும் இந்த குடிமகனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை, தண்ணி போட்டு தெருவில் அலம்பல் பண்ணி அலங்கோலப்படுத்தாமல்,கிடைத்த இடத்தை பயன் படுத்தினாரே..
பாருங்களேன்...,ஒரு நாள் தண்ணி போட்டு தூங்கியதால் நெட்டில் போட்டோ எல்லாம் பல போஸ்களில் வந்து உலகம் பூராவும் பார்க்கும் படி பிரபலமாகி விட்டானே!!. நானும் பல காலம் கமெண்ட்ஸ் எழுதி என்ன பயன் - பல சமயம் என் பெயரைக்கூட கட் பண்ணிவிட்டு தான் பதிக்கின்றார்கள், சரி சரி..போகட்டும்.
3. பயணியர் ஓய்வுக் கூடம் posted byதைக்கா சாஹிப் (ரியாத்)[07 March 2011] IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3056
சகோ. சாளை. S.I.ஜியாவுதீன், அவர்கள் "தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்குக் வந்ததால் அடுத்த அம்மா ஆட்சி வரும் வரை இந்த ஓய்வுக் கூடத்திற்கு விடிவு இல்லை. அதுவரை "குடி" மக்கள் உபயோகத்திற்கு என்று போர்டு மாட்டி விடலாம்." என்று கூறி இருப்பதை எந்த அர்த்தத்தில் எடுத்து கொள்வது?
அடுத்த அம்மா ஆட்சி தான் என்று உறுதியாக கூறுகிறாரா
இல்லை
அம்மா ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை, அதனால் இந்த ஓய்வுக் கூடத்திற்கு விடிவு இல்லை, என்று மறைமுகமாக கூறுகிறாரா?
4. அதிகாரம் காயல்பட்டிணம் நகர்மன்றத்திற்கே உள்ளது. posted byMUTHU ISMAIL (kayalpatnam )[07 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3058
assalamu alaikkum
POST OFFICE bus stand KUDI KARARKALIN KOODARAMAGA AAHI VARUKIRATHU காயல்பட்டின நகராட்சி ENTHA BUS STANDAI NALA PADI MAKKALUKU SEITHU KODUKKA VANDUM
5. திருந்துவானுங்களா... posted byMUTHU ISMAIL (kayalpatnam )[07 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3060
டாஸ்மாக் நம் நாட்டின் ஒரு அத்தியாவசிய அங்கமாகி விட்டது.. இன்றைய செய்தியில் பெண்களே டாஸ்மாக் திரும்ப திறக்க சொல்லி போராட்டம் செய்தார்களாம்... திருந்துவானுங்களா...
Oosanai sainga , oru kilo arusie oru robai ,
orula ulla nilar koodatha kooda katta ovoruvarum
oru roopai pottal pothum,
Sikiram undiyalai ready pannuga pa,
8. மராமத்து வேலை மட்டுமே posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[07 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3069
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இந்த நிழல் குடை சிதைவு அடைந்து எத்தனை மாதங்கள் ஆகின்றன ?.
இதை சரி செய்வது யார் ? மத்திய அரசா ? இல்லை மாநில அரசா ?.
இல்லை மக்களே! இல்லை, இதற்கு மத்திய அரசுக்கோ, மாநில அரசுக்கோ சென்று அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.
இது நம்முடைய நகரசபைக்குரியது அது மட்டுமில்லை மக்களே! இது புதியதாக அமைக்கப்போகும் நிழல் குடை அல்ல, அந்த துறையில் அனுமதி வாங்க வேண்டும் , இந்த அதிகாரியிடம் அனுமதி வாங்க வேண்டும், அதன் பின் டெண்டர் விட வேண்டும் என்று சொல்வதற்கு.
இது வெறும் மராமத்து செய்ய வேண்டிய வேலை மட்டுமே. இதை நம் நகரசபை செய்ய முடியாதா என்ன ? முடியாது! முடியாது!!.
ஏனென்றால் அங்கே பொது நல தொண்டர்கள் இல்லை - தன்னலம், கொண்டவர்களே உள்ளனர் !!!.
அதிகாரிகளோ கடமையை செய்யமாட்டார்கள் - அவர்களை கேட்க அங்கே மக்கள் பிரதிநிதி இல்லையே !!!!.
-------------------------------------
எனவே மக்களே !
மாநில அரசை அமைக்கவோ ? - மத்திய அரசை அமைக்கவோ ? யாருக்காவது , எந்த அரசியல் கட்சிக்காவது ஓட்டுப் போட்டு அவர்களை
ஆட்சியில் தாராளமாக அமர்த்துங்கள் வேண்டாம் என்று சொல்ல வில்லை.
ஆனால்............ஆனால் நமது நகரசபை தேர்தலுக்கு மட்டும் எந்த ஒரு அரசியல் கட்சியில் உள்ளவர்களுக்கும் ஆதரவுக் கொடுத்து அவர்களை
மக்கள் பிரதிநிதியாக நியமித்து விடாதீர்கள்.
9. Renovate the bus stop!! posted byRayyan's Dad (California)[08 March 2011] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 3072
Good catch AK Imran! Appreciate your social attention. Incase if am not wrong, this bus stop has been like this for many years but it got unnoticed. Finally it became a shelter for the great 'Kudi'magans.
br>
I guess still it is effectively used by our ladies but not sure why it is still unattended since renovation not going to cost much. Let us hope now it would have reached the ears of concerned team.
11. No need to post posted bySoofi (Riyadh)[08 March 2011] IP: 155.*.*.* United States | Comment Reference Number: 3076
Dear All,
Please do not post & encourage like these photos to spoil the kayal images in worldwide due to our site was viewed by all, other than kayalites.
So kayalites (new society - not remember their name) that should take away these kind of drunkards from that place (public place) which was our female path to cross the main road to avoid any bad circumstances. (even kayalites or others)
12. கருத்து சரி தான்..ஆனால் சரி இல்லை posted byசாளை.S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[08 March 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3079
சகோ.சூபி இப்ராகிம் அவர்களின் கருத்துக்கு நன்றி.
இவரின் கருத்து சரி தான்..ஆனால் சரி இல்லை.
நம்முடைய வலைதளத்தை பலரும் பார்த்து வருகிறார்கள், என்னுடன் பணி புரியும் பலரும் கூட. இந்த பதிவை படித்து விட்டு
"என்ன ஜியா சார், இது எல்லாம் ஒரு செய்தியா? எங்கள் ஊரில் மட்டும் அல்ல, தமிழ் நாடு முழுவதும் காலை முதல் இரவு வரை இப்படி தான் நடந்து கொண்டு இருக்கின்ற காட்சி.என்ன உங்கள் காயல் சவுதி அரபியாவிலா இருக்கின்றது, அதிசய செய்தி மாதிரி போட்டு உள்ளார்களே?..!!" என்று கிண்டலுடன் வினவியதும்,
உடனே நான் விட்டுக்கொடுக்காமல் நம் ஊரின் பெருமை,அது,இது,டாஸ்மார்க்(சாராயக் கடை) இல்லாதது என்று சொன்னதும் அவர்களுக்கு வியப்பு மற்றும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
இந்த மாதிரி ஊரை கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று இவர்கள் ஆசைபடுகிறார்கள்(எனக்கு செலவு தான், பரவாஇல்லை,வந்துவிட்டு போகட்டும்..- நாம் உடனே குடும்பத்துடன் அவர்களின் ஊருக்கு டூர் போட்டு விடமாட்டோமா.!!).
சகோ.சூபி இப்ராகிம் அவர்களுக்கு எதிர்த்து கருத்து தெரிவித்ததாக நினைக்க வேண்டாம், ஒரு information தான்.
WHAT PANCHAYAT AND MEMBERS ARE DOING THERE? THEY DON'T HAVE TIME FOR THESE KIND OF WORKS EXCEPT SHARING CURRUPTION MONEY.. SORRY TO POST LIKE THIS. WE NEED CHANGES. INSHA ALLAH.
15. கவி மகன் காக்கா அவர்களுக்கு.. posted byமுத்துவாப்பா...... (al khobar)[15 March 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3294
கவி மகன் காக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், தங்களை போன்ற கவிஞரிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றது பெரும் மகிழ்ச்சி. இறைவன் நாடினால் இன்னும் சிறந்த கவிதைகள் கொடுக்க முயற்சி செய்கிறேன்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross