தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் அதிகளவு மீன்கள் கிடைக்குமிடங்களை மீன்வளக்கல்லூரி அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் 9ம் தேதி வரை அதிகமாக மீன் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகளை ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் செயற்கைக்கோள் மூலம் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.
அதன்படி மணப்பாட்டிற்கு தென்கிழக்கு திசையில் 166 டிகிரியில் 59 & 4 கி.மீ. தூரத்தில் 50 & 55 மீ ஆழத்திலும், வீரபாண்டியன் பட்டிணத்திற்கு வடகிழக்கு திசையில் 75 டிகிரியில் 18 & 23 கி.மீ. தூரத்தில் 25 & 30 மீ ஆழத்திலும், பாண்டியன் தீவிற்கு வடகிழக்கு திசையில் 85 டிகிரியில் 19&24 கி.மீ. தூரத்தில் 15 & 20 மீ. ஆழத்திலும் மீன்கள் அதிகம் கிடைக்கும்.
தூத்துக்குடிக்கு வடகிழக்கு திசையில் 86 டிகிரியில் 25 & 30 கி.மீ. தூரத்தில் 20 & 25 மீ. ஆழத்திலும், பட்டணமருதூருக்கு தென்கிழக்கு திசையில் 107 டிகிரியில் 27 & 32 கி.மீ. தூரத்தில் 20 & 25 மீ. ஆழத்திலும், வேம்பாருக்கு தென்கிழக்கு திசையில் 134 டிகிரியில் 20 & 30 கி.மீ. தூரத்தில் 25 & 30 மீ. ஆழத்திலும் அதிகளவு மீன்கள் கிடைக்கும்.
இத்தகவலை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் நந்திஷா தெரிவித்துள்ளார்.
தகவல்:
தினகரன் |