காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரில் 07.03.2011 அன்று புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
புதிய பள்ளிவாசல்:
காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி காயிதேமில்லத் நகர். இப்பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, இங்கு ஒரு மஹல்லா பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்ற தேவை இருந்து வந்தது.
நிலம், பொருளுதவி:
சுமார் 25 வருடங்களுக்கு முன், இப்பகுதி நிலங்ளுக்கு மொத்த உரிமையாளரான காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த மறைந்த பி.டி.எஸ்.இப்றாஹீம், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளி நிர்வாகத்தின் கீழ் இப்பள்ளிவாசல் இயங்க வேண்டும் என்று விதிமுறையிட்டு, தனது நிலத்தில் 13 சென்ட் இடத்தை பள்ளிவாசல் கட்டுவதற்காக தானமாக வழங்கினார்.
திறப்பு விழா:
பின்னர், நகரின் தனவந்தர்கள் மற்றும் வணிகர்களின் பொருளுதவியுடன் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு, 07.03.2011 அன்று திறப்பு விழா கண்டது.
பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளிவாசல் என்ற பெயரிலான இப்பள்ளியின் திறப்பு விழா, அன்று காலை 11.00 மணிக்குத் துவங்கியது. காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ பள்ளிவாசலைத் திறந்து வைத்து வக்ஃப் சாசனத்தை வாசிக்க, பள்ளி வக்ஃப் செய்யப்பட்டது. பின்னர், துவக்கமாக அனைவரும் இரண்டு ரக்அத் பள்ளி காணிக்கைத் தொழுகை (தஹிய்யத்துல் மஸ்ஜித்) தொழுதனர்.
அதனைத் தொடர்ந்து துவங்கிய திறப்பு விழா நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் தொகுத்து வழங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி சோல்ஜர் அப்துல்லாஹ் ஸாஹிப், ஹாஜி கே.இசட்.சேகு அப்துல் காதிர், ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி எஸ்.டி.சேகு அப்துல் காதிர், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா தலைவர் பெயரை, பள்ளி செயலாளர் ஹாஜி ஏ.கே.கலீல் (ஜெஸ்மின் பாரடைஸ்) முன்மொழிய, துணைத்தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா வழிமொழிந்தார்.
மஹ்ழரா அரபிக்கல்லூரி குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் காரீ சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பள்ளியின் துணைச் செயலாளர் ஜுவல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமையுரையைத் தொடர்ந்து, மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ திறப்பு விழா உரையாற்றினார்.
வாழ்த்துரை:
பின்னர், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாருக் ஃபாஸீ,
அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர்,
முஹ்யித்தீன் பள்ளிவாசல் இமாம் மவ்லவீ ஏ.கே.அபூமன்சூர் மஹ்ழரீ,
பன்னூல் ஆசிரியர் “முத்துச்சுடர்” மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் நன்றி கூற, பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷெய்க் அலீ மவ்லானா துஆவுடன் விழா நிறைவுற்றது. விழாவில் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது.
முதல் தொழுகை:
பின்னர் தொழுகைக்கான முதல் அழைப்போசையை (பாங்கு) அம்பலம் மஹ்மூத் நெய்னா நிகழ்த்தினார். முதல் தொழுகையை மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ வழிநடத்தினார்.
விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகக் குழுவினர் மற்றும் செயற்குழுவினர் செய்திருந்தனர். |