தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அதன் நிர்வாகிகள், நகர இளைஞர்கள், சமூக அக்கறை கொண்டவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பிய்யா முகாம்) 13.03.2011 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09.30 மணிக்கு, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனைக்கருகிலுள்ள காயிதேமில்லத் நகரில், அன்னை கதீஜா (ரலி) மத்ரஸாவில் நடைபெறவுள்ளது.
“உள்ளத்தை வெல்வோம்” எனும் தலைப்பின் கீழ், மவ்லவீ ஜே.எஸ்.ரிஃபாஈ ரஷாதீ, மவ்லவீ மிஸ்பாஹுல் ஹுதா, மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, காஞ்சி ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் இம்முகாமில் கலந்துகொண்டு பயிற்சிகள் வழங்கவுள்ளனர்.
இம்முகாமில் நகர த.மு.மு.க. நிர்வாகிகள், இளைஞர்கள், சமுதாய அக்கறை கொண்டவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொள்ளுமாறும், அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |