சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் 26.03.2011 அன்று மாலை 04.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலர் ரஷீத் ஜமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நம் மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வரும் 26.03.2011 அன்று மாலை 04.30 மணிக்கு சிங்கப்பூர் Fairy Point Chaletஇல் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில்,
கடந்த 31.12.2010 வரையிலான மன்றத்தின் வரவு செலவு கணக்கறிக்கை மன்றப் பொருளாளராலும், மன்றத்தின் ஆண்டறிக்கை மன்ற செயலாளராலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், 01.04.2011 முதல் 31.03.2013 வரையிலான பருவத்திற்கான புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இக்கூட்டத்தில் நடைபெறவுள்ளது.
மன்றத்தின் வருங்கால திட்டங்கள் குறித்தும், தேவைப்பட்டால் தலைவர் அனுமதியின் பேரில் இதர அம்சங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
மிகவும் முக்கியமான இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
புதிய நிர்வாகக் குழு தேர்தல் விபரம் பின்வருமாறு:-
Conduct of Election
• Election of New Executive Committee:
(For the period of two years commencing from 1 April 2011)
President
Vice President
Secretary
Assistant Secretaries - 2
Treasurer
Assistant Treasurers – 2
• Eligibility: Must be a Singapore Citizen or Permanent Resident with a minimum age of 21 years as on 1 April 2011.
Executive Members – 5
• Eligibility: Any adult member with a minimum age of 21 years as on 1 April 2011
• Members who are interested to hold any of the above positions are requested to write officially to the current secretary on or before 24 March 2011.
• Election will be conducted, if there are more than one nominations for any of the above posts.
• The Results will be announced immediately after the conclusion of the election.
Your understanding and cooperation are highly appreciated.
தவிர்க்கவியலாத அத்தியாவசிய காரணங்களால் இக்கூட்டத்தில் பங்கேற்க இயலாத உறுப்பினர்கள், மன்றத்திற்கான புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தமது வாக்குரிமையைப் பயன்படுத்தும் பொருட்டு உங்கள் சார்பில் ஒருவரை கீழ்க்காணும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஒப்பமிட்டு, அவரிடம் கொடுத்தனுப்பக் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
PROXY FORM
The undersigned, being a member of Kayalpatnam Welfare Association Singapore, hereby appoints Mr. _________________________________________ NRIC / FIN No. __________________, as his proxy to attend and act on his behalf at the Annual General Meeting to be held on 26 March 2011 and at any adjournment thereof to exercise my vote for the election of the Office Bearers of the Executive Committee for the term of 2 years starting from 1 April 2011.
Dated this ___________ day of March 2011.
Signature:_________________________________
Name : _________________________________
படிவம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின், உங்கள் சார்பில் நிர்வாகக் குழு தேர்தலில் வாக்களிக்க மட்டும் அவர் தகுதி பெறுவார் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுகுறித்த அனைத்து விபரங்களுமடங்கிய விரிவான சுற்றறிக்கை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Daruttibyan Network: செய்தி திருத்தப்பட்டுள்ளது. |