தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்துள்ள காயல்பட்டணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் வருமான விபரம் 2006ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
[2005-06, 2006-07, 2007-08, 2008-09]
தற்போது 2009- 2010 வரையிலான வருமான விபர தாக்கல் பற்றிய தகவல் - தகவலறியும் சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
காயல்பட்டணத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிர்வாகங்கள் 37. இதில் 13 வக்ஃப்கள், அவைகளின் ஆண்டு வருமானம் ரூபாய் 5,000க்கும் குறைவு என்பதால் வரிவிதிப்புக்கு உட்படாதவை (Unassessable Wakfs) என வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.
அவை -
(1) அஹமது நெய்னா பள்ளி
(2) ஈக்கியப்பா தர்கா
(3) கோஸ்மரை தர்கா
(4) ஹஜ்ரத் நெய்னா முஹம்மது சாஹிப் தர்கா
(5) அமினொலி தர்கா
(6) கமல் போஸ் தர்கா
(7) கருப்புடையார் பள்ளி
(8) காட்டு பள்ளிவாசல்
(9) குட்டியப்பா பள்ளிவாசல்
(10) பாயிசீன் சங்கம்
(11) முத்துவாப்பா தைக்கா
(12) சதக்கத்துல்லா கந்தூரி சர்வீஸ்
(13) சேக் ஹுசைன் பள்ளி
எஞ்சிய 24 வக்புகளில், 4 வக்புகள் மட்டுமே 2009-2010 வரையிலான கணக்கு விபரங்களை வக்ஃப் வாரியத்திடம் தாக்கல் செய்துள்ளன.
2009-2010 வரை கணக்கு தாக்கல் செய்துள்ள நிர்வாகங்கள்:-
(1) மஹ்லரத்துல் காதிரிய்யா சபை - ரூபாய் 18,21,723
(2) அல்ஜாமியுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளிவாசல் - ரூபாய் 6,30,839
(3) அப்பாபள்ளிவாசல் - ரூபாய் 2,45,075
(4) காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி - ரூபாய் 2,03,925
2008-2009 வரை கணக்கு தாக்கல் செய்துள்ள நிர்வாகங்கள்:-
(5) மகுதூம் பள்ளிவாசல் - ரூபாய் 2,14,647
(6) ஆரம்பள்ளிவாசல் - ரூபாய் 1,99,022
(7) தாயிம்பள்ளிவாசல் - ரூபாய் 1,25,925
2007-2008 வரை கணக்கு தாக்கல் செய்துள்ள நிர்வாகங்கள்:-
(8) ஜாவியத்து ஃபாஸியத்து சாதுலியா - ரூபாய் 13,42,344
(9) பெரிய குத்பா பள்ளிவாசல் - ரூபாய் 6,94,106
(10) இரட்டைகுள பள்ளிவாசல் - ரூபாய் 4,63,869
(11) சிறு குத்பா பள்ளிவாசல் - ரூபாய் 1,88,170
(12) புதுப்பள்ளிவாசல் - ரூபாய் 1,64,548
(13) சாஹிப் தைக்கா - ரூபாய் 1,56,400
(14) மொஹித்தின் பள்ளிவாசல் - ரூபாய் 1,40,422
(15) காட்டு தைக்கா - அருசியா பள்ளி - ரூபாய் 1,31,982
2006-2007 வரை கணக்கு தாக்கல் செய்துள்ள நிர்வாகங்கள்:-
-----------------
2005-2006 வரை கணக்கு தாக்கல் செய்துள்ள நிர்வாகங்கள்:-
(16) காட்டு மொகுதூம் பள்ளி - ரூபாய் 32,198
2004-2005 வரை கணக்கு தாக்கல் செய்துள்ள நிர்வாகங்கள்:-
(17) ஹாஜி அப்பா தைக்காப்பள்ளி - ரூபாய் 1,26,850
இதர வக்ப்கள் -
(18) குருவித்துறை பள்ளிவாசல் (2000-01) ரூபாய் 2,31,555
(19) மஜ்லிசுல் புஹாரி சரீப் (1997-98) (ரூபாய் 2,49,427)
(20) மரைக்கார் பள்ளிவாசல் (1996-97) (ரூபாய் 22,210)
(21) கோமான் மொட்டையர் பள்ளி (1993-94) (ரூபாய் 4,858)
(22) சாகுல் ஹமீதியா பள்ளி (1992-93) (ரூபாய் 3,338)
(23) கடைப்பள்ளி (1991-92) (ரூபாய் 30,489)
(24) செய்யது இஸ்மாயில் ஜலாலியா புஹாரி கந்தூரி (1991-92) (ரூபாய் 5,160)
|