காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் (சென்னை) அமைப்பின் 19வது பொதுக்குழு கூட்டம் நேற்று (மார்ச் 13) வடச்சென்னை மூர் தெருவில் உள்ள ஹோட்டல் கல்யாண பவன் பிரியாணி ஹாலில் சங்கத்தலைவர் ஹாஜி ஏ.கே.அப்துல் ஹலீம் தலைமையில் நடைபெற்றது. ஹாஜி எஸ். அக்பர்ஷா, ஹாஜி K .A.Z. செய்யத், வழக்கறிஞர் இம்தியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மொஹிதீன் கிராஅத் ஓதி கூட்டத்தினை துவக்கிவைத்தார். காயல் மௌலானா வழங்கிய வரவேற்புரையினை தொடர்ந்து சங்கத்தின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் ஏ.கே.பீர் முஹம்மது உடல் நலன் சரியில்லாத காரணத்தால் கூட்டத்திற்கு வரவில்லை. அவரின் சார்பாக ஆண்டறிக்கையை காயல் மெஹபூப் வாசித்தார்.
தொடர்ந்து காயல்பட்டினம் முன்னுள்ள பிரச்சனைகள் குறித்து கருத்து பரிமாற்றங்கள் நடந்தது. ஆடிட்டர் ஏ.கே.அப்துல்லா, ஹாஜி ஆர்.எம்.என். சேக்னா, ஸ்மார்ட் எம்.எஸ்.அப்துல் காதர், ஜாவித் நஜீம், கோமான் ஷாஜஹான், ஹாஜி ஹெட்ச்.என். சதக்கத்துல்லா, ஹாஜி ஆர்.எஸ்.எம். அபுல் ஹசன், ஹாஜி காயல் இளவரசு, ஹாஜி எம்.எம். அஹ்மத், எம்.டி. ஷேக் முஹம்மது ஆகியோர் பேசினர்.
மூத்த வயது காரணமாக தற்போதைய சங்கத்தலைவர் ஹாஜி ஏ.கே.அப்துல் ஹலீம் பதவி விலக விருப்பம் தெரிவித்ததன் காரணமாக, சங்கத்தின் புதிய தலைவராக ஹாஜி கதீப் சலீம் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவர் கே.வீ.எஸ். ஹபீப் முஹம்மது சிறப்புரை வழங்கினார். ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் சுஹைப் நூஹு துஆ ஓத, காயல் மெஹபூப் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் சென்னை வாழ் காயலர் ஏறத்தாழ 300 பேர் கலந்துக்கொண்டனர்.
கூட்ட அரங்கில் - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் “புற்றுக்கு வைப்போம் முற்று” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள குறுந்தகுடு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
தகவல்:
எஸ்.எஸ்.எம். சதக்கத்துல்லா,
செயற்குழு உறுப்பினர், காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் (சென்னை). |