தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் கிளை சார்பில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பிய்யா முகாம்) 13.03.2011 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை, காயல்பட்டினம் அன்னை கதீஜா (ரலி) மத்ரஸாவில் நடைபெற்றது.
முகாமின்போது நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்ழரீ “உலகத்தை அறிந்துகொள்வோம்” என்ற தலைப்பிலும்,
மவ்லவீ மிஸ்பாஹுல் ஹுதா “ஈமானின் கிளைகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
“ஊடகங்களும், நாமும்” என்ற தலைப்பில் அத்தீஸ்,
“மனித உரிமை சட்டம்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் காஞ்சி ஜைனுல் ஆபிதீன் ஆகியோரும் உரையாற்றினர்.
“தலைமைத்துவ பண்புகள்” என்ற தலைப்பின் கீழ் மவ்லவீ ஜே.எஸ்.ரிஃபாஈ ரஷாதீ உரையாற்றினார்.
முகாமில், காயல்பட்டினம் மற்றும் வெளியூர்களைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|