வரும் ஏப்ரல் 13 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பாக நிற்கும் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நடப்பு உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இத்தொகுதிக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பீ.ஆர். மனோகரன் என நேற்று அறிவிக்கப்பட்டது.
2. Election - 2011 posted byCnash (Makkah)[17 March 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3351
அண்ணாச்சி ரெம்ப நல்லவரு ஊருக்காக நெறைய செஞ்சி இருக்கார் அதுவும் திமுக க்கு வோட்டு போட்ட நமக்கே ADMK MLA வ இருந்து நல்லது செய்தார்!! ஆனா இப்போ சேருமானம் சரி இல்லையே, சேர கூடாத இடத்தில் போய் சேந்து இருக்காரே,!! கொஞ்சம் சூதானமா இருந்துக்குங்க!! அம்மா கட்சி மாறி இல்லை, கூட இருந்தே குழி வெட்டிடுவானுங்க!!!
நேத்து வரை ஒன்னா கொள்ளை அடிச்சிட்டு பினாமியா இருந்த சாதிக் பாட்சா இன்னைக்கு தூக்கிலே தொங்கிட்டர்னு நியூஸ் வந்திருக்கு!! நீங்க தனியா நின்ன கூட கண்டிப்பா ஜெய்யிப்பிங்க, சேர்ந்து இருக்கிற கூட்டம் தான் கொஞ்சம் பீதியே கிளப்புரு!! .
3. அண்ணனுக்கு...ஜே...!!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா)[18 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3357
“நாணயம்(பணம்)விளையாடும் அரசியலில் நாணயம்(நேர்மை)எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஒருவரை நாம் நல்லவர் என நம்பினால் அவர் தான் மிகப்பெரிய நய வஞ்சகனாகவும், நம்பிக்கை துரோகியாகவும் மாறுவார், ஒருவரை நாம் எதிரியாக நினைத்தால் அவர் தான் உற்ற நண்பனாகவும், உதவியாகவும் இருப்பார் எனவே, யாருக்கும் எந்த முத்திரையையும் குத்தும் முன்பு முன்னூறு முறை யோசித்தல் நன்று.
அனிதாவை பொறுத்தவரை அவர் நமதூருக்கு பல நல்ல சேவைகள் செய்துள்ளார். அவர் ஆட்சி,அதிகாரத்தில் இருந்த போதும் கூட, நாம் கூப்பிட்டக்குரலுக்கு ஓடி வந்துள்ளார். மனிதர் நம்மில் ஒருவராகக் கலந்து விட்டபடியால் அவர் தனித்து நின்றாலும் ஜெயிப்பார், அணியில் நின்றாலும் ஜெயிப்பார், இவ்வளவு ஏன்?ஆளும்கட்சியில் நின்றாலும் சரி, எதிக்கட்சியில் நின்றாலும் சரி வெற்றி அவருக்கு உறுதி!!!
“இச்செயல் இவன் முடிக்கும் என ஆய்ந்து,
அச்செயல் அவன் கன் விடல்.”
6. அரசியல்வாதி posted byvsm ali (kangxi, jiangmen, china)[18 March 2011] IP: 119.*.*.* China | Comment Reference Number: 3367
தேன் எடுத்தவன் அதை ருசிக்காமல் விடமாட்டான். அதுபோல அரசியலில் புகுந்தவன் மக்கள் பணத்தை சுரண்டாமல் விடமாட்டான். இதில் யாரும் விதிவிலக்கு அல்ல , ஒருசிலரைத்தவிர . இங்கே கருத்து சொல்லியிருப்பவர்கள் அரசியல்வாதியாக வந்தாலும் இதே கதைதான். ஆக, அவர்கள் நமக்கு செய்யும் ஒருசில நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். திரு.அனிதா அவர்கள் இப்போதும் , மாற்றுக்கட்சியில் இருந்தபோதும் நமதூருக்கு செய்த நன்மைகள் அதிகம்.
நமதூரில் இன்றும் ஒரு வழக்கம். வியாபார பயணம் செல்லும்போது வீட்டில் உள்ள பெரியவர்கள் , முதுகில் எழுதி அனுப்புவார்கள். நன்றாக சம்பாதித்து வா என்று அர்த்தமாம். நமதூர் மக்களிடம் உள்ள சமையல் காரர்கள் , வேலைக்காரர்கள் சாமான்கள் வாங்கும்போது பில்லில் கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதுவது வழக்கம்தான். இதை அவர்களிடம் கேட்க நினைத்தால், பெரியவர்கள் சொல்வார்கள் , நீ பயணம் புறப்படும்போது உங்க உம்மா உன் முதுகில் எழுதியது போலதானே அவங்க உம்மாவும் எழுதி இருப்பாங்க. அதுனால , நமக்கு வேலை நடக்கிறதா என்று மட்டும் பார், இதெல்லாம் கண்டுக்காதே என்று சொல்லுவார்கள்.
ஆக , அரசியல் வாதிகள் செய்யும் நல்லதை பாராட்டுங்கள் .
7. முதுகில் எழுதப் படும் துஆ’’ posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா)[19 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3381
வெகு தூரம் பயணம் போகும் போது நம் முதுகில் எழுதி விடுவது பணம் சம்பாதிக்க அல்ல! அது ஓர் துஆ. இறைவனின் உதவியால் நலமுடன், புறப்பட்டுச் சென்ற இடத்திற்கே பாதுகாப்பாகத் திரும்பி வர நாடி எழுத்தப்படும் வாசகங்கள்தான் அவை,
நண்பர் அலி தெரியாமல் எழுதியுள்ளார்.பரவாயில்லை இனி தெரிந்து கொள்ளட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross