தமிழக சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 13 அன்று நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணியில் நிற்கும் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவை அறிவிக்கப்பட்டு விட்டன. மேலும் தி.மு.க. தனது வேட்பாளர்கள் விபரத்தை இன்று மாலை வெளியிட உள்ளது.
இதற்கிடையில் நேற்று மாலை அ.தி.மு.க. - தான் நிற்கும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. வைகோ தலைமையில் இயங்கும் ம.தி.மு.க. க்கு தொகுதி ஒதுக்காமல் இந்த அறிவிப்பு வெளியானதால், அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்காது என செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவித்துள்ள பல தொகுதிகள் அதன் தோழமை கட்சிகளான தே.மு.தி.க., கம்யுனிஸ்ட்கள் கேட்ட தொகுதிகள் ஆகும். அ.தி.மு.க. வின் இந்த அறிவிப்பில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று அக்கட்சிகள் இன்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். ஆகவே - தொகுதி ஒதுக்கீடில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக - தே.மு.தி.க., கம்யுனிஸ்ட்கள், ம.தி.மு.க. , புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கொண்ட மூன்றாம் அணி உருவாகும் என கூறப்படுகிறது. |