காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவிலும், குட்டியாபள்ளியிலும் இயங்கி வரும் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) அமைப்பின் சார்பில், “மனதோடு போராடு!” என்ற தலைப்பில், நல்லொழுக்க பயிற்சி இரண்டாவது முகாம் வரும் 20.03.2011 அன்று காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை காயல்பட்டினம் குட்டியாபள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ளுமாறு நகர மாணவர்களையும், இளைஞர்களையும் தஃவா சென்டர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. குறைந்தளவு இடங்கள் மட்டுமே இருப்பதால், முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் 9677555548/9976937955 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தமது வருகையை முற்கூட்டியே உறுதி செய்துகொள்ளுமாறும் தஃவா சென்டர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |