வரும் ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் திருச்செந்தூர் தொகுதி வேட்பாளராக நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல இறைவனின் திருப்பெயரால்...
அன்பார்ந்த திருச்செந்தா சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே! இறைவனின் நல்லருள் நம் அனைவர் மீதும் என்றும் நிலவட்டுமாக ஆமீன்.
பிறந்த மண்ணிற்குப் பெருமை தேடி, வாழும் நகருக்கு வளம் சேர்த்து, செல்லும் இடமெல்லாம் சிறப்படையச் செய்யும் உங்களை உளமார வாழ்த்துகிறேன்.
நான் கடந்த காலங்களில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து அரசின் பல திட்டங்களை பெருமளவில் நம் தொகுதி மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளேன்.
இன, மத, கட்சி வேறுபாடின்றி ஏழை எளியவர்களின் தேவைகளை இயன்ற வரை நிறைவேற்றி இருக்கிறேன். ஆனாலும் ஆற்ற வேண்டிய பணிகள் அநேகம் இருக்கின்றன.
மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் தொண்டனாகிய நான் திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்பட்டிருக்கிறேன்.
அன்பானவர்களே! எனது வெற்றிக்காக நீங்களும் வாக்களித்து, உங்கள் குடும்பத்தினரையும் வாக்களிக்கச் செய்யுங்கள்.
இந்த வேண்டுகோளை உங்களிடம் நான் நேரில் சந்தித்துக் கேட்டதாகக் கருதும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிக்கை பிரசுரமாக வெளியிடப்பட்டு, இன்று நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிக்ளுக்கு வெளியிலும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
1. தேன் தடவிய வார்த்தைகள் posted byHusain Noorudeen (Abu Dhabi)[18 March 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3372
சகோதரர்களே, நமதூருக்கு சமீப காலத்தில் ஏற்பட்ட சோதனைகளின்போது அண்ணாச்சி அவர்கள் எங்கே போயிருந்தார்கள். தேர்தலில் சீட் கிடைத்தும், இந்த பிரச்சனைகளை குறித்தும் அவற்றை எவ்வாறு அணுக போகிறார் என்பதைப்பற்றியும் ஒரு வார்த்தை சொல்லவில்லை.
இனியும் இந்த தேன் தடவிய வார்த்தகைளை நம்பி வாளாவிருக்கப்போகிறோமா? அல்லது இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி அவரிடம் ஊரின் பிரச்சினை குறித்து பேசவாவது போகிறோமா?
4. DCW posted byDR D MOHAMED KIZHAR (chennai)[19 March 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 3380
அஸ்ஸலாமு அழைக்கும் அண்ணாச்சி அவர்கள் நிச்சயம் நமதூர் தலையாய பிரச்சினை ஆனா D C W கழியுகளை அப்படியே கடலில் கலக்க விட்டும் மற்றும் சுற்று புற சூழலை அதிகம் மாசு படுத்தி, நமதூரில் பல மக்களின் நோய்க்கும், அதிக மரணத்திற்கும் வழிவகுத்ததை இனியாவது, POLLUTION CONTROL மூலமாக தடுத்து நிறுத்தி, இன்னும் பல மரணங்களை தடுக்க ஆவன செய்வாரா.
இப்பவும் காலம் கடந்து விடவில்லை. விதிமுறைகளை மீறும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுப்பது, தேர்தல் நன்னடத்தை விதியின் கீழ் வராது.. எனவே இக்கணமே அண்ணாச்சி இந்த வேலையை ஆரம்பித்து காயல்பட்டினத்தின் ஒட்டு மொத்த VOTE களையும் பெற்று விடலாம். VOTE கேட்டு வரும் சமயம் அனைவரும், இந்த கோரிக்கையை வைத்து நமதூரின் துயர் துடைக்க சபதம் எடுப்போம்.
நமக்கும் VOTE போட பணம் வேண்டாம், சேலை வேட்டி வேண்டாம். புற்று நோயால் இறந்த நம் சகோதர்களின் நிலை , இனி யார்க்கும் வராமல் தடுக்க இது ஒரு சிறு முயற்சி.. நம்ம வீட்டில் பாதிப்பு இல்லையே என்று இருக்காதீர்கள்.. இது நாள் வரை DMK VOTE போடுவது நமது ஆறாவது கடமை என்று இருந்ததை மாற்றி, நம் ஊர்க்கு அளப்பரிய காரியம் செய்த அண்ணாச்சிக்கு வோட்டு மூலம் நன்றி சொல்வோம். அதற்க்கு அண்ணாச்சி வழி வகுப்பார் என்று நம்புவோம். அதை செய்தால் அண்ணாச்சி என்று காயல் மக்களின் இதயத்தில் இடம் பெறுவார். சலாம்
As quoted by Dr. Kizar, We can all or DMK Representatives strongly put a demand to Mr. Anitha concering DCW issues to avoid the "RED SEA" it reflects killing many peoples & fish.
It is good time to demand.
Enkal Vote DMK ku & UNGAL velai to stop the DCW violation of factory law.
8. ஆப்பு posted byசாளை.S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[19 March 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3394
அன்பு நண்பர்களே.. இப்போ நம்ம தொகுதி சூடு பிடித்து விட்டதா?
நாம் யாருக்கு ஒட்டு போடுவது? நன்கு அறிந்த அண்ணாச்சி அனிதா அவர்களுக்கா, அல்லது யார் என்றே தெரியாதா அண்ணாச்சி மனோகரன் அவர்களுக்கா?
ஒரு பழமொழி நினைவுக்கு வருகின்றது ( பழமொழி எழுதினாலே cut பண்ணிவிடுகிறாரே administrator, சரி நம் கடமை கமெண்ட்ஸ் தட்டுவது,) "நன்கு தெரிந்த ....வி நல்லதா அல்லது ஒன்றுமே தெரியாத சீதேவி நல்லதா. (அதற்காக அண்ணாச்சியை நான் ...வி என்று சொன்னதாக அர்த்தம் எடுத்து விடாதீர்கள்).
காச்.. மூச்.. என்று நன்றாக எழுதும் சகோ.இப்னு சாஹிப் அவர்களே பதில் பதிவு போடுங்கள் (யப்பா. சொந்த பெயரில் எழுதுங்கப்பா.. நீங்கள் யார் என்று அறிவதற்குள் தாவு தீர்ந்து விட்டது, கடைசியில் உங்களின் IP ADDRESS கொண்டு உங்களை யார் என்று கண்டு பிடித்து விட்டேன்ல... நாங்கள் எல்லாம் யாரு.. ஒரே மொடக்கில் ஒரு பாட்டில் அடிப்போம்லே.. பயப்படாதீர்கள்.. செந்தூர் வாட்டர் தான்.. ச்ச்சும்மா..)
நீங்கள் அனிதா அவர்களுக்கு ஆதரவு என்றால் "கூட்டணி தர்மத்திற்கு அப்பு",
மனோகரன் அவர்களை ஆதரித்தால் "மனசாட்சிக்கு ஆப்பு",
இல்லை யாருக்கும் ஓட்டு இல்லை என்றால் "உங்களுக்கே ஆப்பு அடிக்கின்றீர்கள்". பார்ப்போம் உங்களின் பதிலை.
9. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் posted byIBN SAHIB (Dammam, Saudi Arabia)[19 March 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3398
அருமை அண்ணாச்சி, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
நீங்கள் அதிமுகவில் இருக்கும்போது கூட காயல்பட்டிணத்தை நன்றாக கவனித்தீர்கள். கலைஞர்பட்டணம் என்ற ஊரில் உங்கள் அயராத பணியால் அதிமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரித்தீர்கள். இருந்தாலும் திமுகவின் மதுரைக்காரர் தொழில் ரீதியாக உங்களுக்கு கொடுத்த குடச்சல், ஜெ.ஜெ. உங்கள் மீது காட்டிய அலட்சியம், உங்களை கட்சி மாற வைத்தது. எனினும் உங்களின் கடந்த கால நல்ல பணியின் காரணத்தால் காயலர்கள் நீங்கள் சுயேட்சையாக நின்றாலும் வாக்களித்து இருப்பார்கள் / வாக்களிப்பார்கள். காயலர்கள் என்றுமே நன்றி மறவா மக்கள்.
இந்நேரத்தில் உங்களுக்கு சில வேண்டுகோள்:
1. கற்புடையார் வட்டம் - முறையான அங்கீகாரம் இல்லாமல் திமுக அரசால் அவசர அவசரமாக கட்டப்படும் சுனாமி வீடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலிடம் கட்டியே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்தால், குறைந்தபட்சம் எங்கள் ஊரில் வறுமை எனும் சுனாமியால் தினமும் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு அந்த வீடுகள், முஸ்லிம் ஐக்கிய பேரவையின் ஆலோசனைகளோடு, பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
2. எங்கள் ஊர் சுற்றுவட்டாரத்தில் ரசாயண கழிவால் ஏற்படும் நீர்,காற்று மற்றும் நிலத்தில் ஏற்படும் மாசு கட்டுப்பாட்டுக்கு வழி வகை செய்ய வேண்டும்.
இந்த முக்கியமான இரு வேண்டுகோளை நீங்கள் தேர்தல் வாக்குறுதியாக வழங்க வேண்டும். நீங்கள் அரசியல்வாதியாக இருந்தாலும் வாக்குறுதி கொடுத்தால் மீற மாட்டீர்கள் என்றும், நீங்கள் வரும் காலத்தில் எதிர்கட்சியில் இருந்தாலும் இக்கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவீர்கள் என்றும் காயலர்கள் நம்புகிறார்கள்.
10. தேர்தல் 2011 posted byதைக்கா சாஹிப் (ரியாத் )[19 March 2011] IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3401
சாளை.S.I.ஜியாவுதீன் அவர்கள் சொன்னது போல முகம் தெரியாத ஒருவருக்கு ஓட்டு போடுவதைவிட கட்சி பாகுபாடின்றி அன்றும், இன்றும் தொகுதிக்கு பணியாற்றிய திரு. அனிதா அவர்களுக்கு ஓட்டு போடலாம்.
11. பண அலையா? இரட்டை இலையா? posted bykavimagan (dubai)[19 March 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3404
ஜியாவுதீன் காக்கா அஸ்ஸலாமுஅலைக்கும்!
ஐந்தாண்டு காலம் காங்கிரசின் உதவியோடு ஆட்சி அதிகாரத்தை அனுபவித்த கருணாநிதி, வெறும் மூன்று சீட்டுகளுக்காக,
தனது ஆதரவினை விலக்கிடத்துணிந்தார். பாராளுமன்றத் தேர்தலில் தனக்கு ஒத்துவராத காங்கிரஸ்காரர்களின் முதுகில்குத்தி
தோற்கடித்தார். அதேபோல,ஐந்தாண்டுகால கருணாநிதியின் வஞ்சக,அராஜக.அநீதியான அரசுக்கெதிரான போர்க்களத்தில்
அண்ணா திமுகவிற்கு எல்லா வகையிலும் தோள்கொடுத்த வைகோவை கொஞ்சமும் அரசியல்நாகரீகமோ, நேர்மையோ
சிறுதுமின்றி கழற்றிவிடத் துணிந்தார் ஜெயலலிதா.இதில் கூட்டணி தர்மமாவது,வெங்காயமாவது?
கல்குவாரி.மணற்கொள்ளை போன்ற
பல்வேறு குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டு கருணாநிதியால் சொத்துக்குவிப்பு வழக்கை சந்திக்க நேரிட்ட அனிதா,சாதாரண பாத்திரவியாபாரியான
தன்னை,எம்.எல்.ஏ.,மாவட்டச்செயலாளர்,மந்திரி என்று பல்வேறு உயர்பதவிகளை அடையக் காரணமாயிருந்த ஜெயாவிற்கும்,வாக்களித்த மக்களுக்கும்
துரோகம் செய்து,அழகிரியின் காலடியில் மண்டியிட்டார் .அதேநேரத்தில் கொள்ளையடித்த பணத்தை முற்றிலும் பதுக்கி
விடாமல் கொஞ்சம் தொகுதி மக்களுக்காகவும் செலவிட்டார் என்பது உண்மை.அதுதான் கடந்த தேர்தலில் ஓட்டுக்காக அவர் பணத்தை வாரி வாரி
இறைத்ததை கண்கூடாகக் கண்டோமே! மொத்தத்தில் இவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. அதேநேரத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏ. ஆளுங்கட்சியை சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், நமது ஊருக்கு அரசின் ஏராளமான நலத்திட்டங்களை கொண்டுவரமுடியும். அந்தவகையில்,புதியவருக்கு
வாக்களிப்பதுதான் நன்மையில் முடியும் என்பது எனது பணிவான கருத்து!
12. போலியான நண்பன்..... posted byமுத்துவாப்பா.... (அல்-கோபர்)[19 March 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3406
"தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது." என்பார்கள்.
அதுபோல்தான் இங்கு நாம் தாகத்தில் இருக்கிறோம் நமக்கு அனிதாவின் முத்துக்கள் தேவையில்லை நாம் தாகம் போக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கிடைத்தால் போதும். நாம் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று நினைக்க கூடாது தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்ற பரந்த சிந்தனை வேண்டும்.
எல்லாரும் ஒன்றை பெருமையாக சொல்லுகிறார்கள், அனிதா நம்ம தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறார் அதனால் நாம் நன்றி மறக்க கூடாது அப்படி இப்படி என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
நான் ஒன்றை கேட்கிறேன், முதலில் இந்த அனிதா நன்றியுள்ளவரா..? வெறும் பாத்திர வியாபாரியா இருந்த அவரை எம்.எல்.ஏ, மந்திரி என்று பல்வேறு உயர்பதவிகளை அடையக் காரணமாயிருந்த அ.தி.மு.க விற்கு துரோகம் செய்த இந்த அனிதா நன்றியுள்ள்வர் என்றால் அவரை எதிர்த்து ஓட்டு போடும் நாம் அனைவரும் நன்றியுள்ள்வரே....
"போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்."
போலி நண்பனை கண்டு ஏமாந்து விடாதீர்கள். இந்த தேர்தலிலாவது இந்த துரோகி கூட்டத்திற்கு பாடம் புகட்டுங்கள்.
13. புதியவர்!!!!!!!!!! posted byதைக்கா சாஹிப் (ரியாத் )[19 March 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3407
"கொள்ளையடித்த பணத்தை முற்றிலும் பதுக்கி விடாமல் கொஞ்சம் தொகுதி மக்களுக்காகவும் செலவிட்டார் என்பது உண்மை" என்று கூறிய சகோதரருக்கு ஒரு கேள்வி, புதியவர் வந்து மொத்தமும் சுட்டுட்டு போய்டா?
16. துர்நாற்றம்... தேவைதானா? posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.)[20 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3414
என்னமோ,நாறுதேன்னு?சுற்றும்,முற்றும் பார்த்தேன்,அது சரி,அரசியல் சாக்கடையில் நம்ம வாசகர்கள் கமெண்ட்ஸ் என்ற கற்களை எறிந்து கலக்கோ கலக்கென்று கலக்கி விட்டுட்டாங்கப்பா!கருத்து சுதந்திரம் இருக்குதேன்ணு காயல் வெப் சைட்டை இப்படி நாறடிக்கிறது சரியில்லை!அதுக்காக,இனி அரசியலைப் பற்றி கருத்தே எழுதக் கூடாதுன்ணூ அத்தமில்லை!ஒருத்தரை ஒருத்தர் பழிப்பதையும்,தான் சார்ந்த கட்சியை வானளாவப் புகழ்வதையும் சற்றே தவித்துக் கொள்ளலாமே?அவ்வளவு தான்.
17. தேர்தல் 2011 posted byதைக்கா சாஹிப் ( ரியாத் )[20 March 2011] IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3418
முன்னால் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்கள் ஒன்றும் பரம்பரை பணக்காரர்கள் இல்லையே?
வேட்பாளர்கள் ரூ.75 லட்சம் செலுத்த தே.மு.தி.க., வலியுறுத்தல்?
வேட்பாளர் செலுத்தும் பணத்துடன் தலைமைக் கழகம் சார்பில், 50 லட்சம் ரூபாய் சேர்த்து தேர்தல் செலவுக்கு வழங்கப்படும்.?
மார்ச் 20,2011,02:29 IST தினமலரில் வெளியான செய்தி.
பார்க்க. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=209219
ரூ. 125 லட்சம் ஒரு வேட்பாளருக்கு என்றால் 41 தொகுதியில் போட்டியிடுகின்றனர்?
மொத்தம் ரூ. 5 ,125 லட்சம் இன்று முளைத்த கட்சி செலவிடுகிறதென்றால்?
தி.மு.க மற்றும் அ.தி.மு.க, கதி?
18. SUPPORT OUR BROTHER IF NOT MR.ANITHA posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[20 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3420
ASSALAMUALAIKKIM.VARAH
If any our muslim brother [even shelf] is available in this election in our region means we can fully support him and show our unity and power not only for political party & also great examble for our other brothers in other regions.
Then they [ political party] can understand the reason [DCW & ILLEAGAL HOUSING AND MANY MORE ISSUE] to get vote for next time.
Any have we cannot resolve our issue thru these politicians, Becuse already our issue in the level of facing LAW AND ORDER by court thru leagel aspects.
If no one our brothers is participating means we strogly support to MR.ANITH RATHA KRISHNAN M.L.A. I hope from his last action atleast we can get some social advantages
20. எந்த நாற்றம்............ posted byHusain Noorudeen (Abu Dhabi)[20 March 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3429
இங்கே நாறுவது அரசியல் மட்டுமல்ல............ நம்முடைய சமூக அக்கறையின்மை என்னும் நாற்றமும்தான். எல்லாவற்றையும் விட அதிகம் நாறுவது அடுத்திருக்கும் தொழிற்ச்சாலையின் கழிவு நீரும் அதனால் ஏற்படும் தீமைகளும்.
நான் அனிதா அண்ணாச்சிக்கு நம் மக்கள் தரும் ஆதரவை எந்த வகையிலும் குறை சொல்லவில்லை. எல்லா வகையிலும் அது நமக்கு நன்மை தரக்கூடியதே. என்னுடைய கருத்தானது நம்முடைய தேவைகளை ஏன் முற்கூட்டியே அவரிடம் சொல்லி அவற்றை நிறைவேற்றித்தர வாக்குறுதியாவது வாங்கக்கூடாது என்பதுதான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross