சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ஆறு தொகுதிகளை எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்ஃ.ப் வாரிய சொத்துகளை முறைப்படுத்துவது, உலமா நல வாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநிலப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ. சார்பாக போட்டியிடும் வேட்பாளர் விபரம் வருமாறு:
1. கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்) - நெல்லை முபாரக்
2. இராமநாதபுரம் (இராமநாதபுரம் மாவட்டம்) - அப்துல் ஹமீத்
3. பூம்புகார் (நாகை மாவட்டம்) - முஹமது தாரிக்
4. தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்) - உமர் கத்தாப்
5. துறைமுகம் (சென்னை) - அமீர்
6. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் - பதுர்தீன்
சமுதாய இயக்கமான SDPI அன்பனவேண்டுகோள் . துறைமுகம், மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் முஸ்லிம் இயக்கமான MNMK , மற்றும் முஸ்லிம் லீக் களம் காண்பதால் தயவு கூர்ந்து தங்கள் வேட்பாளர்களை வாபஸ் வாங்கி நம் சகோதர்கள் வெற்றி பெற துணை புரியும் படி அன்புடன் கீடு கொள்கிறோம்.
முஸ்லிம் சகோதர்கள்
ரியாத், தம்மம், ஜெட்டாஹ்
சவுதி அரேபியா
அன்பு சகோதரர் சுலைமான் அவர்களே , முஸ்லிம் வேட்பாளர்கள் எந்த இயக்கத்தில் களம் கண்டாலும் அவர்களை கண்டிப்பாக வெற்றி பெற செய்தால் தான் வரும் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் நம்மை தேடி வருவார்கள் . எனவே இந்த தேர்தலில் சரியான பாடத்தை tntj தங்கள் கவுரவம் பார்க்காமல் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் நமக்குள் ஐக்கியத்தை தந்தருள் புரிவானாக. ஆமீன்.
4. MAKE UNITY posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[21 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3451
Assalamu Alaikkum. varah
This is very sad news SDPI is participating in the PORT [CHENNAI] AND RAMANAD which places have our OWN BROTHERS [IUML AND MNMK]are already available in the field.As per agenta of SDPI when they were came to visit Abudhabi,They said if any our muslim brother is on the field of politics SDPI will support to them instead of Against. Where is your agenda and speach ....please remove the candidate at above places instead of this u can put them in the place where our brothers unvailable.
Also every brothers and sister pls vote our community candidate only if available in total TN ASSEMBELY, Parties is not a matter, UNITY and OUR STRENTHS are very important in this stage.
Arasiyal chanakiyangal, Arasiyal Amma ninaithathu sariyaga vara poguthu
Muslim galuku seat kudupathu pondru kuduthu vittu,
Namavargaluku Sandaiyai yavie vittu, vedikai parkalam du ,
Muslim Thoguthie la 3 muslim vetpalargali motha vittu irukanga ,
Parkalam muslim galuku sandai pottu yanthanai peru thadalaium, yathanai pera matra sattathulaium adaika porangalooooooooo poruthu irunthu parkalam
6. SDPI Candidates posted byM.S. அப்துல் ஹமீது (Dubai)[21 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3459
அன்பான சகோதரர்களே!
முஸ்லிம்கள் ஒரே தொகுதியில் எதிரெதிர் நின்று போட்டியிடுவது பற்றி தஙகள் கவலைகளைத் தெரிவித்துள்ளீர்கள். தங்கள் கவலை நியாயமானதே.
தமுமுக சமுதாயத்தின் சார்பில் நிற்கிறது என்று சொன்னால் SDPI போன்ற இன்னபிற கட்சிகளுடன் கலந்தாலோசித்திருக்கலாமே... தமிழகத்தின் அனைத்து ஜமாஅத்துடன் கலந்து ஒரு முடிவை எடுத்திருக்கலாமே...
இப்படி எதுவுமே செய்யாமல் இன்றுதான் வேட்பாளர்களை அறிவிக்கிறார்கள். ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பே SDPI தாங்கள் போட்டியிடப் போகும் தொகுதிகளையும் அறிவித்து, உடன் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. அது தெரிந்த பின் தமுமுக தங்கள் தொகுதிகளை மாற்றியிருக்கலாமே...
SDPI சமுதாய ஒற்றுமைக்காகவே அது தொடங்கியதிலிருந்து பாடுபட்டு வருகின்றது. அது சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் வேலைகளில் ஒருபோதும் இறங்காது.
7. vendatha velai posted byomar (holy)[22 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3484
no other work except making dicrepancies among community and diverting the voter strength among our community . What is hindering you people to join in one hand agains to defeat this bloody dravidian parties
8. tntj political stand posted byDR MOHAMED KIZHAR (chennai)[23 March 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 3488
தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் என்றுமே முஸ்லிம் சமுதாயத்தின் நலன் முக்கியமாக இட வோதிக்கீடு யார் தருவார்களோ அவர்களை தான் ஆதரிப்போம் என்று திறந்த புத்தகமாக தெரிவித்து விட்டார்கள்.
10 முஸ்லிம்களை வெற்றிபெற வைத்து MLA ஆக்கி விட்டால் மட்டும் நம் GOAL அடைய முடியாது. நாளைக்கு அந்த MLA ஆளும் கட்சிக்கு கூஜா தூக்கி விட்டு, சமுதாயத்தை புறம் தள்ள மாட்டார்கள் என்று யார் கண்டது. நமது கடந்த கால அனுபவத்தில் பல முஸ்லிம்களை சட்டமன்றத்துக்கும், நாடாளுமட்ரத்துக்கும் அனுப்பி எதை சாதித்தோம். அவர்களால் இந்த மூன்றை சதவிகித இட ஒதுக்கீடு பெற்று தரமுடியவில்லை.
TNTJ எந்த காலத்திலும் அரசியலில் ELECTION போட்டி இடாமல், சமுதாய நலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு முடிவு எடுக்கும். எந்த தேர்தலிலும் முன்பே முடிவு செய்து எந்த கட்சியையும் ஆதரித்தது கிடையாது. பேரம் பேசி மட்டுமே முடிவு எடுக்கும். என்ன பேரம் என்றல்.. சமுதாய நலம்.. சமுதாய நலம்..
நான் எந்த அமைப்பையும் சேர்ந்தவன் அல்ல என்பதை இங்கே தெளிவு படுத்துகிறேன். TNTJஇன் சுயநலமில்லாத பணியால் ஈர்கப்பற்று, அதன் அனுதாபி. குர்ஆன், ஹதீத் இருந்து இம்மி அளவும் பிசவாத மார்க்க கொள்கை, சுய நலம் அற்ற சமுதாயம் முன்னேட்ட்ற அக்கறை கொண்ட பொது நல அக்கறை மட்டுமே தலையாய பணியாக கொண்டு செயல் படுகிறது. அதனால் அவர்கள் தேர்தலில் எந்த முடிவு எடுத்தாலும், சமுதாய நலனை கொண்டே முடியு எடுப்பார்கள் என்று அறுதி இட்டு நம்பலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross