ஆறுமுகநேரி உபமின்நிலையத்தில் (SUB STATION) மார்ச் 22 (செவ்வாய்) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் - அங்கிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் காயல்பட்டணம் உட்பட இதர பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஆறுமுகநேரி மின் நிலையத்தின் விநியோக பிரிவு உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.
1. அசௌகரியங்கள் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[19 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3408
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மார்ச் 22 செவ்வாய் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று
ஆறுமுகநேரி மின் நிலையத்தின் விநியோக பிரிவு உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர்கள் அறிவித்துள்ள நேரத்திற்கு முன்பின் ஆகாமல் மின் விநியோகத்தை துண்டித்து மீண்டும் சரியான நேரத்தில் விநியோகித்தால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.
------------------------------------------------
இந்த கருத்தை டைப் செய்து கொண்டிருக்கும்போதே நடுப்பகல் சரியாக 12.00 மணிக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, மீண்டும் மதியம் மூன்று மணிக்குதான் மின் இணைப்பு வந்தது.
அவர்களுடைய அறிவிப்பின்படி இந்த மாதம் முழுவதும் காயல்பட்டணம் சார்ந்த பகுதிகளுக்கு மதியம் 2 மணி முதல் 4 மணி வரைதான் மின் விநியோகம் துண்டிக்கப்பட வேண்டும்.
இன்று மட்டும்தான் இப்படி என்று இல்லை, இந்த மாதத்திலே பலமுறைகள் இந்த மாதிரி அவர்களுடைய அட்டவனைகளுக்கு மாற்றமாக நடந்திருக்கிறது.
------------------------------------------------
மின்வாரியமே !
அவசியமின்றி / தேவையற்ற வகையில் உங்களுடைய அட்டவனைகளுக்கு மாற்றமாக மின் விநியோகத்தை நிறுத்தி மக்களுக்கு சிரமத்தையும், மன உளைச்சலையும் கொடுக்காமல் சுமுகமாக உங்கள் பணிகளை செய்து வந்தால், அது மின் நிலைய அலுவலர்களுக்கும் பொது மக்களுக்கும் உள்ள உறவை பலப்படுத்தும் என்பதை உணர்வீர்களாக.
------------------------------------------------
பொது மக்களே !
இந்த மாதிரி சில,சில அசௌகரியங்கள் ஏற்படும்பொழுது பொது மக்களாகிய நாம் மன உளைச்சலுடன் மௌனமாக இருந்திடாமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து நிவர்த்தி செய்திடுதல் வேண்டும்.
நம் உரிமைகளை பெற்றிட என்றும், எதற்கும் தயங்கிடக் கூடாது.
இன்ஷா அல்லாஹ்! நம் ஊருக்கு மறுமலர்ச்சி ஏற்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மக்களே உணர்வீர்களாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross