இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் விளையாட்டரங்கில் 19.03.2011 அன்று மாலை 04.30 மணிக்கு நடைபெற்றது.
சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் செயலாளர் ஹவாஸி தைபீ இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மஸ்ஜித் பெங்கூலன் பள்ளிவாசலின் கத்தீப் மவ்லவீ அப்துல் கய்யூம் பாக்கவீ தமிழில் உரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில் சிங்கப்பூர் நாட்டின் மஸ்ஜித் ஜாமிஆ சுலியா, Money Changers Association, சிங்கப்பூர் - கடையநல்லூர் முஸ்லிம் அசோஸியேஷன், தென்காசி நலச் சங்கம் உள்ளிட்ட பள்ளிவாசல்கள், பொதுநல அமைப்புகள் அடங்கிய 67 நிறுவனங்கள் பங்கேற்றன. ஜாமிஆ சுலியா பள்ளிவாசல் சார்பில் அதன் துணை இமாம் காயல்பட்டினத்தைச் சார்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீயின் ஒருங்கிணைப்பில் குழு பங்கேற்றது.
அதுபோல, சிங்கை காயல் நல மன்ற அங்கத்தினர் இவ்விழாவில் தம் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தமைக்காக மன்ற உறுப்பினர்கள் டபிள்யு.இ.எம்.அப்துல்லாஹ், மொகுதூம் முஹம்மத், உமர் ரப்பானீ ஆகியோருக்கு மன்றச் செயலர் ரஷீத் ஜமான் நன்றி தெரிவித்தார்.
தகவல்:
ரஷீத் ஜமான்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |