காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் (சென்னை) அமைப்பின் 19வது பொதுக்குழு கூட்டம் மார்ச் 13 அன்று வடச்சென்னை மூர் தெருவில் உள்ள ஹோட்டல் கல்யாண பவன் பிரியாணி ஹாலில் சங்கத்தலைவர் ஹாஜி ஏ.கே.அப்துல் ஹலீம் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக ஹாஜி கதீப் சலீம் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு:-
தகவல்: எஸ்.எஸ்.எம். சதக்கத்துல்லா,
செயற்குழு உறுப்பினர், காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் (சென்னை).
1. போட்டோ எல்லாம் போட்டீங்க,ஆனால்... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[21 March 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3447
இந்த புகைப்பட தொகுப்புக்களை பார்க்க.. பார்க்க.. மகிழ்ச்சியாக உள்ளது.
யார் சொன்னது நாம் எல்லாம் ஒற்றுமையாக இல்லை என்று? பார்த்தீர்கள் அல்லாவா.. அனைத்து காயல் நலமன்றங்களின் புகைப்படங்களை.. இந்த ஒற்றுமை அனைத்து சந்தர்ப்பங்களிலும் இருந்து சமுதாயத்தை பலப்படுத்த வல்ல அல்லாஹ் துணை இருப்பனாக..
புதிய தலைவர் ஹாஜி கதீப் சலீம் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
சரி.. போட்டோ எல்லாம் போட்டீங்க, ஆனால் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்கள், கொடுத்த நல உதவிகள், நல திட்டங்கள் என்று ஒன்றும் எங்களுக்கு அறியத்தரவில்லையே, ஆவலுடன் உள்ளோம்.
4. அன்பு நண்பர் சாளை S.I.ஜியாவுதீன் அல்கோபார் அவர்களுக்கு.... posted byIBRAHIM (CHENNAI)[23 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3487
அவர்கள் நமதூர் மகளுக்காக சேவை செய்தல் சொல்லட்டும் தெரிந்துகொள்வோம்....(செய்ததான சொல்ல முடியும்)
6. எதிர்பார்ப்பு posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்.)[23 March 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3501
அன்பு சகோ. SATNI.S.A.SEYED MEERAN அவர்களுக்கு, முதலில் சிறு விண்ணப்பம், ஒன்று ஆங்கிலத்தில் கமெண்ட்ஸ் பதிக்கவும் அல்லது தமிழில் பதிக்கவும், இரண்டும் இல்லாமல் தங்க்லீஷ் இல் பதிப்பதால் ஒன்றும் சரியாக புரிவதில்லை,படிப்பதற்க்குள் தாவு தீர்ந்து விடுகிறது. மற்றும் உங்களுடைய நல்ல கருத்துக்கள் மக்களுக்கு சென்று அடைவதில் சிறிது தடை உள்ளது.
சரி மேட்டருக்கு வருவோம்..
என்னுடைய கமெண்ட்ஸ் இல் நான் யாரையும் குறைத்து மதிப்பிட்டோ, குறை கூறியோ,யாரையும் பதவி விலகும் படியோ பதிக்கவில்லை. அங்கு இருப்பவர்களில் அனைவர்களும் என் ரத்த உறவுகளே.
கடல் கடந்து வாழும் எங்களுக்கு இந்த "சென்னை ஐக்கிய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்" என்றவுடன் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது,உண்மையே.
இந்த கூட்டத்தில் CANCER FACT FINDING COMMITTEE (CFFC ) க்கு, IQRA விற்க்கு என்று பல நலஉதவிகள் இருக்குமே என்ற நற்ப்பாசை தானே தவிர வேறு ஏதும் இல்லை.
அங்கு இருப்பவர்களில் ஒருவருடைய கால் தூசுக்கு நான் ஈடாக மாட்டேன் என்பதை நான் நன்கு அறிந்தவன் தான்.
7. Chennai Meet posted byJaved Nazeem (Chennai)[24 March 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 3520
பெரும்பாலானோர் மனதில், சகோதரர் இப்ராஹிம் முன் வைத்தது போன்ற கருத்துக்கள் உள்ளது. குறை கூறும் விதமாக அல்லாமல், நம்மால் நிறைய விஷயங்கள் செய்ய முடியும், செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே அந்த கூட்டத்தில் எனது கருத்துக்களை தெரிவித்தேன். நான் அறிந்தவரை சென்னை அமைப்பு வெளியில் தெரியாமல் அல்லது தெரியபடுத்தாமல் நிறைய பணிகளை செய்திருக்கின்றார்கள். இன்னும் அதிகமாகவும் சிறப்பாகவும் செய்யலாம் - வெளியிலும் தெரியபடுத்தலாம். Read AKP's interview here: http://kayalpatnam.com/interviews-akpeermohammed-210509.asp
முக்கியமாக நான் கவனித்தது என்ன வென்றால் மற்ற KWA வில் இருப்பது போன்று ஒரு ஒருங்கிணைப்பு, உறுப்பினர்கள் மத்தியில் இருப்பதாக தெரியவில்லை (அல்லது எனக்கு நிறைய பேரை or என்னை நிறைய பேருக்கு தெரியவில்லை :)). நமதூருக்கு மிகவும் அருகாமையில் இருப்பதால் இருக்கலாம். சுற்றுலா, போட்டிகள் என்று மற்ற KWA போல் முயற்சி செய்யலாம்.
தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை - தபாலில் அனுப்புவதாக சொன்னார்கள். நேரமின்மை காரணமாக கூறப்பட்டாலும் சற்று நெருடலாகவே இருந்தது.
8. Mini Kayal posted byMohamed Hussain (Chennai)[25 March 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 3545
Assalamu Alaikum
It is a good effort made by KWA Chennai in organizing such a meeting.After Kayal,chennai has the second largest kayalite population(So no harm to call chennai as mini kayal) including students(difficult to find this category in other cities as chennai),traders and working professionals and so on.So it is difficult to coordinate all, as other KWAs associations around the world.In living in chennai , especially mannadi we all get the feel of kayal, this may be the one reason for this get together didn't reach as expected.
One thing is sure "As distance increases and Number reduces, Intimacy among us Increases".This is the success story beyond other KWAs around the world.for ex We cant find as much unity among us in kayal itself ,as existed outside kayal .This Number factor may be the reason.
Insha ALLAH ,we wish KWA Chennai will find huge success in organzing these type of get together and helping needy people with the guidance of new Leadership.Excuse me if i say anything wrong.
9. Business entrepreneurs workshop posted bySalai.Mohamed Mohideen (California)[28 March 2011] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 3617
Good to see the big strength and nice pictures. My suggestion or thought is, KWA chennai (or any other local kwa's with strong business people) can focus on building lot of entrepreneurs through workshop & also they can share their personal experiences/expertise to build young entrepreneurs who is struggling to shine in their respective business career. It may be general guidance or specific to some business track.
As we all aware, most of the members of overseas kwa's are working as an employee in so & so company who can give their money but KWA's in local have strong & succesful business people to guide the youngsters who come for business career. Local KWA's can just focus on something different like this
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross