காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவின் வடமுனையில் அமைந்துள்ளது ஈக்கியப்பா தைக்கா. இங்கு அடங்கியிருக்கும் மஹான் ஃபழ்லுல்லாஹ் ஸாஹிப் ஈக்கியப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி வைபவம் 21.03.2011 (நேற்று) நடைபெற்றது.
நேற்று அதிகாலை 05.30 மணிக்கு கத்முல் குர்ஆன் ஓதி மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. இந்நிகழ்வுக்கு, குருவித்துறைப்பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ தலைமை தாங்கினார்.
மாலை 04.45 மணிக்கு, மஹான் அவர்களின் புகழ்பாடி மர்ஹூம் முத்துச்சுடர் எஸ்.கே.எம்.நூகுத்தம்பி ஆலிம் ஜுமானீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட மவ்லித் ஓதப்பட்டது. இந்நிகழ்வுக்கு குருவித்துறைப்பள்ளியின் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் தலைமை தாங்க, பன்னூல் ஆசிரியர் “முத்துச்சுடர்” மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ முன்னிலை வகித்தார்.
இரவு 07.30 மணிக்கு, ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. பெரிய
ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளிவாசல் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.மவ்லானா ஸாஹிப் இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர் ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
இரவு 08.45 மணிக்கு மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித சொற்பொழிவு நடைபெற்றது. மத்ரஸா ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உரை நிகழ்த்தினார்.
இறுதியாக, எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் நன்றி கூற, மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் துஆ ஓதி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சிகளில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
வைபவ ஏற்பாடுகளை, நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில், ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், ஹாஜி சொளுக்கு எஸ்.எம்.கபீர், ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத், ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், எஸ்.இ.முஹம்மத் அலி ஸாஹிப் (டி.எம்.), ஹாஜி எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், எம்.கே.செய்யித் முஹம்மத், ஹாஜி சொளுக்கு எஸ்.எம்.செய்யித் முஹம்மத் ஸாஹிப், கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், ஹாஜி எம்.ஏ.சதக்கத்துல்லாஹ், ஏ.ஏ.முஹம்மத் ஜியாத், ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஃபிழ் சொளுக்கு தவ்ஹீத், ஹாஃபிழ் ஈஸா ஷஃபீக், ஓ.எல்.அபுல்ஹஸன் ஆகியோர் செய்திருந்தனர்.
|