காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான நிலம் வாங்க நிதி தேவைப்படுவதாகவும், உலக காயலர்கள் உதவுமாறும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கடந்த டிசம்பர் மாதம் நடந்த கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டது.
இது குறித்து மேலதிக விபரம் காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது. அதில் ஓடக்கரை அல்லது துளிர் ஸ்தாபனம் அருகில் ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் செயற்பொறியாளர் த.மேரிராணி மலர்விழி அளித்த பதில்களில் கூறியிருப்பதாவது :-
புதிதாக 33/11 கேவி துணைமின் நிலையம் அமைக்கும் திட்ட பணிக்கு இருப்பு நிலத்தின் நீளம் மற்றும் அகலதன்மை மற்றும் அந்த நீளத்தின்
அணுகு சாலை வசதிகள் ஆகியவைகளை கணக்கில் கொண்டு சுமார் ஒரு ஏக்கர் நிலம் அவசியமானதாகும்.
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஆரம்ப கட்டத்தில் அதற்கான விலை நிர்ணயம் தெரிவிக்க இயலாது. சந்தை மதிப்புத் தொகை அடிப்படையில்
நிலம் தேர்வு செய்து செயற்பொறியாளர்/பொது நிர்மாண வட்டம் அவர்களது கள ஆய்வு அறிக்கை மற்றும் சிபாரிசு அடிப்படையில் பிரேரனை
சமர்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் லிமிடெட் மூலமாக இலவசமாக கையகப்படுத்தும் முறை தற்போது இல்லை. காயல்பட்டினம்
பகுதியில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்க தனி நபரோ/ஸ்தாபனமோ முன் வந்து பொது நலன் கருதி உகந்த நிலம் தர
முன்வருவோர்களேயானால் குறைந்த விலை கிரயம் கொடுக்கப்படும். சந்தை விலை நிர்ணயித்தன்படி கிறைய பத்திரம் பதிவு செய்து நிலம்
கையகப்படுத்தப்படும்.
மின்பளுவை பகிர்ந்து அளிக்கும் நோக்கில் காயல்பட்டினம் 3ம் நிலை நகராட்சிக்குட்பட்ட காயல்பட்டினம் - திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலை
ஓடக்கரை பகுதி மற்றும் துளிர் ஸ்தாபனம் சமீபமாக அணுகு சாலையுடன் கூடிய நிலப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் புதிய துணை மின் நிலையம்
அமைக்க மத்திய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்வாரியம் பதில்கள் வழங்கியுள்ளது.
காயல்பட்டினத்தில் இடம் கிடைக்காத பட்சத்தில் ஆத்தூரில் மின் நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளதா என வினவியதற்கு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் நிறுவனத்திடம் தற்பொழுது ஆத்தூர் பகுதியில் புதிதாக 33/11 கேவி துணை மின் நிலையம்
அமைக்கும் நோக்கில் திட்ட வரைவு ஏதும் இல்லை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross