தமிழகத்தில் வரும் ஏப்ரல் 13 அன்று சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுவை தாக்கல் செய்த
வண்ணம் உள்ளன. காயல்பட்டினத்தை உள்ளடிக்கிய திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய சட்டசபை உறுப்பினர் அனிதா
ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் மனோகரன் என்பவர் போட்டியிடுகிறார்.
இத்தேர்தலில் காயல்பட்டினத்தின் நிலைபாடு என்னவாக இருக்கும்? காயல்பட்டினத்தின் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் கட்டப்படும்
169 குடியிருப்புகளை எதிர்த்து நகரில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைமையில் ஆர்பாட்டங்கள் ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. அவ்வேளையில் குடியிறுப்பு வீடுகள் கட்டும் விசயத்தில் அரசு விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி, அரசு தனது போக்கினை மாற்றிக்கொள்ளவில்லை எனில் சட்டசபை தேர்தலினை காயல்பட்டின மக்கள் புறக்கணிக்க நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
11. காயல்பட்டினம் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு நம்முடைய நியாயமான உணர்வுகள் மதிக்கப்பட வேண்டுமென அரசை
இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தவறும் பட்சத்தில் தேர்தலை புறக்கணிக்கும் கட்டாய நிலைக்கு இந்நகர மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதை
இக்கூட்டம் வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறது.
குடியிருப்புகள் கட்டுமானங்களுக்கு தூத்துக்குடி நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் தற்போது - தேர்தல் புறக்கணிப்பு விசயத்தில் காயல்பட்டின பொது நல அமைப்புகளின் நிலை என்ன? இதுவரை இது குறித்த எந்த அறிவிப்பும் பொது நல அமைப்புகளால் நகரில் வெளியிடப்படவில்லை. ஐக்கிய பேரவைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேர்தல் புறக்கணிப்பு குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்த எந்த கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றன.
1. திமுகவின் ஓட்டு அடிமைகள் posted byIBN SAHIB (Dammam, Saudi Arabia)[24 March 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3519
கலைஞரின் திமுகவிற்கு ஏன் கலைஞர்பட்டணத்தின் மீது இவ்வளவு கடுப்பு. முஸ்லிம்களின் ஓட்டுகள் மட்டும் வேண்டும். ஆனால் முஸ்லிம்களுக்காக இனிப்பு தடவிய வார்த்தைகள் மட்டும் கூறிவிட்டு தொடர்ச்சியாக அவர்களின் மீது வெறுப்பை கக்குவது ஏன்? முஸ்லிம்கள் இவரின் ஓட்டு போடும் அடிமைகளாக மட்டும்தான் இருக்க வேண்டுமா?
அதிமுகவில் இருக்கும்போது திரு. அனிதா அவர்கள் நம் ஊருக்கு செய்த நன்மையின் அளவு கூட அவர் திமுகவிற்கு மாறிய பிறகு செய்ய முடியவில்லையே ஏன்? அவரை தடுத்தது யார்? ஒரு வேளை முஸ்லிம்கள் திமுகவின் ஓட்டு அடிமைகள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்ற திமுக தலைமையின் மமதையினாலா?
திமுக முஸ்லிம்களுக்கு தொடர்ச்சியாக செய்து வரும் துரோக வரலாறின் இரண்டாம் பகுதி பார்க்க:
2. புனைப்பெயரா? குன்னியத் பெயரா? posted byIBN SAHIB (Dammam, Saudi Arabia)[24 March 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3523
Dear Moderator,
இப்னு சாகிப் என்பது என்னுடைய குன்னியத் பெயர் புனைப்பெயரல்ல. சுன்னத்தான அடிப்படையில் வைத்துக் கொண்டது. உதாரணத்திற்கு:
அபாத்திலாக்கள் என்று இஸ்லாமிய வரலாற்றில் குன்னியத் பெயரால் அறியப்பட்ட இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி) ஆகிய மூவரின் இயற்பெயர் அப்துல்லா. நபி அவர்களின் குன்னியத் பெயர் அபுல் காசிம். ஏன் அபூபக்கர் (ரலி)(கன்னிப்பெண்ணின் தந்தை என்பது பொருளாகும்) என்பதே குன்னியத் பெயர்தானே. அவர்களின் இயற்பெயர் அப்துல்லா இப்னு உஸ்மான். இது போல் பல ஸஹாபாக்களின் குன்னியத் பெயர்களை இஸ்லாமிய வரலாற்றில் பார்க்க முடியும்.
எனவே என்னுடைய பெயர் சுன்னத்தான அடிப்படையிலான குன்னியத் பெயர். ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் சுஜாதா என்ற புனைப்பெயரால் அறியபட்டாரே, அது போன்றது அல்ல என்பதை தங்களுக்கு அறிய தருகிறேன்.
என்னுடைய சிறிய விளக்கத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
Moderator:தாங்கள் சொல்வது தங்களின் கட்டுரைகளுக்குப் பொருந்தலாம். இப்பகுதியில் உண்மைப் பெயர் அவசியம் தேவைப்படுகிறது. எனவே தங்களது உண்மைப் பெயரில் தொடர்ந்து கருத்து தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தங்களது முழு ஒத்துழைப்பை என்றும் அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
NOTE : Not only this we can also very well find interesting news like Actor sarath kumar met TMMK committee member in their office.
Another news is ஈமானை இழந்த ம.ம.கட்சி
http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/
Like this we can also copy paste the link as we like
4. TSUNAMI SETTLEMENT & BOYCOTT ELECTION posted bySEYED AHAMED (HONGKONG, CHINA)[25 March 2011] IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 3542
Kayal Muslim United Forum should declare their decision on either BOYCOTTING ELECTION or something else. Keep silent for long time is not correct way to handle this matter.
If it is further delaying, NO ONE SHOULD TAKE CARE ABOUT United Forum, People like me will think that KMUF had been sidelined to one political party as usual.
There should not be any compromised, other than a valuable reason.
5. Boycott is not a wise decision posted byMohamed Abdul Kader (Al Khobar) (Al Khobar)[26 March 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3557
Dears,
Please note that the election is not going to stop if we boycott the election. Any how, the nominee will be selected from our constituency either DMK or ADMK.
Our native collectively take the decision to talk to anitha or monaharan candidate.
To take the promises or oath from them to favor to our things.
First up all, needed to be united to under one umbrella. To accept the leader decision. Wasalam
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross