தூத்துக்குடி நீதிமன்றத்தின் பிப்ரவரி 21 இடைக்கால தீர்ப்பினை தொடர்ந்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர் மார்ச் முதல் வாரத்தில்
குடியிருப்பு கட்டுமானங்கள் கடலில் இருந்து எவ்வளவு தூரத்தில் கட்டப்படுகிறது என கண்டறிய வந்ததாக தெரிகிறது.
இது குறித்து - நகர சமூக ஆர்வலர்கள் சிலர் மார்ச் 4 அன்று இத்தூரத்தை கணக்கிட்டனர். அப்போது CRZ விதிகளுக்கு மீறலாக கட்டுமானம் கடலில் இருந்து (High Tide Line) 142 மீட்டரில் துவங்குவதாக அறியப்பட்டது. CRZ விதிகள்படி 200 மீட்டர் வரை கட்டுமானங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அலுவலர் தனது அறிக்கையை எப்போது தாக்கல் செய்வார் என்றும், அடுத்து இவ்வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்றும்
தெரியவில்லை. இவ்வழக்கு தேர்தலுக்கு முன்போ, அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ விசாரணைக்கு மீண்டும் வரலாம். அவ்வேளையில்
இவ்வழக்கு எந்த திசையில் செல்லும் என்பது பெரிய கேள்விக்குறியே. தேர்தலுக்கு பின் புது ஆட்சி வந்தால் இவ்வழக்கினை முற்றிலும் புது
கோணத்தில் தான் காணவேண்டி இருக்கும்.
இக்குடியிருப்பு குறித்து அரசின் பல துறைகள் விதிகளை மீறி உள்ளன என்பது தெளிவாக தெரிகிறது. இச்சூழலில் காயல்பட்டின நகர மக்களின்
தேர்தல் புறக்கணிப்பு மாநில மக்களின் மற்றும் ஊடகங்களின்
கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் இத்திட்டத்தில் அதிகாரிகள் சிலர் ஏன் பல விதிமுறைகளை மீறினார்கள் என்பதும் வெளிவரலாம்.
ஜனவரியிலும், பிப்ரவரியிலும் தேர்தலை புறக்கணிப்போம் என கூறிய ஐக்கிய பேரவை, மார்ச் மாதத்தில் இதுவரை அமைதியாக இருப்பதற்கு இரு
காரணங்கள் இருக்கலாம்.
(i) குடியிருப்பு பிரச்சனையில் அனிதா காயல்பட்டின நகர மக்களுக்கு ஆதாரவாக இருந்தார் (அல்லது அவரால் ஒன்றும் செய்திருக்க இயலாது).
அரசின் சில துறையினர் தான் விதிமுறைகளை மீறினர். ஆகவே தேர்தல் புறக்கணிப்பு மூலம் அனிதாவை தண்டிக்கவேண்டாம்
(ii) வழக்கு நமக்கு சாதகமாக உள்ளது. ஆகவே தேர்தல் புறக்கணிப்பு அவசியம் இல்லை
இதில் முதல் காரணம் (குடியிருப்பு பிரச்சனையில் அனிதா காயல்பட்டின நகர மக்களுக்கு ஆதாரவாக இருந்தார் என்பது) உண்மையா என்று -
இப்பிரச்சனையை நகரில் வழி நடத்தியவர்கள் தான் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். குடியிருப்பு பிரச்சனை நகரில் பிரதானமாக இருந்த போது
அனிதா உட்பட தி.மு.க.வின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் - மீனவர்கள் வாக்கு என்ற அடிப்படையில் - இத்திட்டத்திற்கு
ஆதரவாகவே இருப்பதாக கூறப்பட்டது.
பிப்ரவரி 9 அன்று நடந்த ஐக்கிய பேரவை கூட்டத்தில் இதனை காயல் அமானுல்லாவும் ஊர்ஜிதம் செய்தார். அப்போது அக்கூட்டத்தில் இது குறித்து
அவர் பேசியதாவது:-
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடமும் பேரவை முறையிட்டது. தொகுப்பு வீடு கட்டும் திட்டம்
செயல்படுத்தப்படும் முன் காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நடப்பு உறுப்பினர்களால் 2006ஆம் ஆண்டிலேயே ஒப்புதல் தீர்மானம்
அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையிலேயே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது எதுவும் செய்ய இயலாத நிலையில்
இருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், மீனவர்களுக்கு அரசு நாடு முழுவதும் வீடுகளைக் கட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகளின்
கட்டிடப் பணிகளை நிறுத்தச் சொல்வது அரசின் கண்ணோட்டத்தில் இயலாத ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், காயல் மாநகர
முஸ்லிம்களுக்கு வீடுகள் தேவைப்பட்டால், அதே கடற்கரையில் கட்டித்தர அமைச்சர் (சுப.தங்கவேலன்) வாக்களித்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்திற்குத் தொடர்புகொண்டு பேசிய மாநில அமைச்சர் சுப.தங்கவேலனும், இக்கருத்தை
வழிமொழிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் இரண்டாவது காரணத்தில் (வழக்கு நமக்கு சாதகமாக உள்ளது) எவ்வளவு வலு உள்ளது என காண்போம்.
(பாகம் - 1) | (பாகம் - 2) |
(பாகம் - 3) | (பாகம் - 4) | (பாகம் - 5)
[தொடரும்] |