| |
செய்தி எண் (ID #) 5873 | | | சனி, மார்ச் 26, 2011 | சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்! (பாகம் - 8) | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3169 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய | |
ஜனநாயகத்தில் தேர்தல் என்பதும், வாக்குரிமை என்பதும் இன்றியமையா அங்கங்களாகும். சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு அமைதியான
முறையில் தீர்வுக்காண தேர்தலில் வாக்களிப்பது ஒரு சிறந்த ஆயுதமுமாகும். ஆர்வமுடன் தேர்தலில் பல கோடி மக்கள் பங்கேற்று வாக்களிக்கும்
காட்சி இந்தியா போன்ற சில நாடுகளில் நம்மால் காணக்கூடியது. சில பகுதி மக்கள் - பிரச்சனைகள் அளவு மீறி பெரிதாகும் போது தேர்தல்
புறக்கணிப்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்துகின்றனர்.
ஜனவரி மாதம் - கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) குறித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேர்தல் புறக்கணிப்பு சில காரணங்களுக்காக
எச்சரிக்கையாக வைக்கப்பட்டது. அடுத்து வந்த சில தருணங்களிலும் அது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. தற்போது சட்டசபைக்கான தேர்தலுக்கு சில
நாட்களே இருக்கும் நிலையில் இது குறித்து - இந்த அறிவிப்பினை வெளியிட்ட அமைப்புகளின் நிலை என்ன என்பதை - தெளிவுபடுத்தாமல்
இருப்பதே இது குறித்த கேள்விகள் எழும்ப வழிவகுக்கின்றது.
தேர்தல் புறக்கணிப்பு என்பது சாதாரணமாக எடுக்கப்படும் முடிவு அல்ல. அதற்கு பிரதானமாக எடுத்துவைக்கப்படும் பிரச்சனைகளில் உள்ள
உண்மை, அப்பிரச்சனைகளில் உள்ள நியாயம், முக்கியத்துவம் ஆகியவைகளை சிந்தித்து, ஆராய்ந்தே - அதற்கு பகராக மாற்று வழிவுண்டா என்பதனையும் கருத்தில் கொண்டு - இதில் நம் நிலைப்பாடு என்ன என்பதனை அறிவிக்கவேண்டும்.
புறக்கணிப்போம் என்ற அறிவிப்பினை வெளியிட்டுவிட்டு, அதற்கான நேரம் வரும்போது, தேர்தல் புறக்கணிப்பு ஏன்? அல்லது ஏன்
புறக்கணிப்பு அவசியம் இல்லை? என பொதுமக்களுக்கு அறிவிக்காமால் - அமைதிக்காப்பது அறிவித்த அமைப்பினை மற்றும் அன்றி, அதற்கு பின்
நின்று குரல் கொடுத்த அனைவரையும் கேலிக்கூத்தாக ஆக்கி விடும்.
நகரின் முன் உள்ள தொழிற்சாலை மாசு போன்ற பிரச்சனைகளை
பிற்காலங்களில் நாம் எதிர்க்கொள்ளும் போது நமது ஆர்ப்பாட்டங்களும், எச்சரிக்கைகளும் பிறர் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலை உருவாகிவிடும்
என்பதனை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
(பாகம் - 1) | (பாகம் - 2) |
(பாகம் - 3) | (பாகம் - 4) | (பாகம் - 5) | (பாகம் - 6) | (பாகம் - 7)
[முற்றும்]
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|