திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு, திருச்செந்தூர் வழக்கறிஞர்கள் சங்கம், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை இணைந்து, காயல்பட்டினம் துளிர் கேளரங்கில் சட்ட விழிப்புணர்வு முகாமை 23.03.2011 அன்று மாலை 05.30 மணிக்கு நடத்தின.
திருச்செந்தூர் வட்ட சட.டப்பணி.கள் குழு தலைவரும், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவருமான (திருச்செந்தூர்) எஸ்.ஜான் சுந்தர்லால் சுரேஷ் முகாமுக்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் சி.ஏ.வி.பி.மோகனசுந்தரம், அதன் தூத்துக்குடி மாவட்ட ஆலோசகர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கே.ஜேசுராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முகாம் தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, திருச்செந்தூர் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மு.ப்ரீதா சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு நுகர்வோர் பேரவை காயல்பட்டினம் நகர அமைப்பாளர் ஏ.எம்.எச்.முத்தக்கீன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் முகாம் நிறைவுற்றது.
ஏழை-எளிய மக்கள், தாழ்த்தப்பட்ட-பழங்குடி மக்கள் மற்றும் பொதுமக்களுக்கான வழக்குகளை நடத்த இயலாதோர் வழக்கு நடத்துவதற்கான வழிமுறைகள், வரதட்சணை கொடுமையிலிருந்து நிவாரணம், வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈட்டுத் தொகை பெறும் முறை, குடும்பச் சொத்தில் பாகம் பெறல், பிறப்பு - இறப்பு விபரங்களை அரசு அலுவலங்களில் பதியாமல் இருந்தால் நீதிமன்றம் மூலம் பெற்றுத் தர உதவி, அரசு மூலம் பெறும் சட்டம் சார்ந்த - சாராத நலத்திட்ட உதவிகளுக்கு ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இம்முகாமில் விளக்கமளிக்கப்பட்டது.
வழக்குறைஞர்கள் அமல்ராஜ், சரவணன் மற்றும் பலர் இம்முகாமில் கலந்துகொண்டனர்.
படம்:
தாஸ் ஸ்டூடியோஸ்,
கூலக்கடை பஜார், காயல்பட்டினம். |