Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:44:58 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5886
#KOTW5886
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 28, 2011
இவ்வாண்டு முதல் மதுரை விமான நிலையத்திலிருந்தும் ஹஜ் விமானம் இயக்கப்படும்! ஹஜ் கமிட்டி தலைவர் தகவல்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3981 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இவ்வாண்டு முதல் மதுரை விமான நிலையத்திலிருந்தும் ஹஜ் பயணியருக்கான விமானம் இக்கப்படவுள்ளதாக இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவரும், தமிழக தலைவருமான ப்ரெசிடென்ட் அபூபக்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு முதல் ஹஜ் பயணத்திற்காக வட இந்தியாவில் ராய்ப்பூர், தென்னிந்தியாவில் மதுரை ஆகிய இரு விமான நிலையங்களிலிருந்தும் விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. திருந்தும் காலம் என்றோ?
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [28 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3620

நல்ல செய்தி. பல சிரமங்கள்,அசௌகரியங்கள் ஹாஜிகளுக்கு குறையும்.

ஹஜ் கமிட்டிக்கும், அரசாங்கத்திற்கும் நன்றிகள்.

இதிலும் ஒரு பெரிய பிரச்சனை உள்ளதே.

ஒரு நபர் ஹஜ்ஜுக்கு சென்றாலே குறைந்தது 3 வேன்கள் பிடித்து தூத்துக்குடி, திருநெல்வேலி என்று வழி அனுப்ப செல்லுகிறேன் என்று..அப்பப்பா..

அதிலும் டீ,காப்பி,பண்டங்கள் என்று ரயில்வே நிலையத்தை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறார்கள்.

ஹாஜிகள் திரும்ப வரும்போது இதே நிலை தான் கூடுதலாக டிபன்,பண்டங்கள்.எல்லாம் ஹாஜிகளின் செலவு. இனி இந்த செலவு மதுரை வரை தொடருமே.

ஹாஜிகளுக்கு ஹஜ் செலவுக்கு பட்ஜெட் போடும் போது நீங்கள் கவனிக்கனுமே,தலை மட்டுமா சுத்தும், உடம்பே சுத்துதுங்க.

ஹஜ் கடமை பண்ணுவதற்கு உண்டான செலவுக்கு அதிகமாக இந்த 'எக்ஸ்ட்ரா' செலவுகள்,அவர்களுக்கு இந்த சாமான் வாங்கணும்,இத்தனை புடவைகள் வாங்கணும், அவங்க ஹஜ்ஜிலிருந்து வந்த போது எனக்கு "அது" கொடுத்தார்கள்- நான் அவர்களுக்கு "இது" கொடுக்கணும்,வந்த பின்பு பிஸ்கட் செலவு,ஒரு பெரும் விருந்து செலவு,தற்போது மதுரைக்கு ஏர்போர்ட் செல்ல 3 வேன்கள் செலவு எக்ஸ்ட்ரா வேறு ....அல்லாஹ் அக்பர்.

திருந்தும் காலம் என்றோ?

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Good News
posted by Seyna (Bangkok) [28 March 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3621

Nalla oru saithie,

Next busy aga porathu madurai Airport, Aiport pakathula land irukandu parunga sikirama vangidunga , Kayal Alwa kadai, kayal mixter kadai, Kayal biscut shop yallam sikirama thoranthurunga Aporam yadam kidaikathu, Madurai aiport inimaal busy thaan, Appadiya Special Train poda sollunga marakama Ada ada onna maranthutaan pa, Kayal purota kadai yai maranthutaan pa

Intha neram orula illama poietaan Oru round samabachie irukalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Masha Allah
posted by shaik abbul cader (kayalpatnam) [28 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3622

Masha Allah it is very important news for the old peoples. Thanks for the ministers and mps concerned.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. All Praise To Allah.....
posted by Shameemul Islam SKS (Chennai) [28 March 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 3627

25years back our grandpas and grandmas took all the pain to reach the Mekkah to perform Haj.

They start all their way from our hometown and upto Bombay (then) via Chennai by train.

After that they set sail in the sea by ship for months before they reach the Ka'bah and come back the same way. Then came the relax that our Moms and Dads travelled by flight sometime from Bombay and afterwards they started from Chennai by air.

Now things improved a lot and with all their family people greet the occasion of performing the Haj by their relatives by their presence upto Madurai which hardly a 4 hours journey.

It is the blessings of Allah that we live in a much improved time.

But we must see whether the same spirit present with our grand parents then exists even until now is seriously has to be debated.

We are patience less lots complaining each things from food, shelter upto whatever adjustment and tolerance we need to show to our co-haajis.

We complain a lot and remember little whatever we witnessed after reaching the hometown after performing Haj.

We must thank Allah for all His blessings and we must also show our full sincerity towards exposing our spirit before our Lord, Most Generous to attain salvation in this world and in the Hereafter.

It is what we are getting into our thought while we read this news. Alhmadhulillah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எக்ஸ்ட்ரா கடமைகள்
posted by vsm ali (Hetang, Jiangmen, China.) [28 March 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 3628

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், கூட்டாளி, ஹஜ்ஜுக்கு போகணும்னா எவ்வளவு செலவு ஆகும்? என்னுடைய பதில், நான் போகணும்னா, விமான செலவு, மற்றும் eetthapalam, ஜம் ஜம் தண்ணிக்கு மட்டும் செலவு போதும். ஆனால் நீ போகணும்னா கொஞ்சம் கூடுதலா ஆகத்தான் செய்யும். நண்பர் ஜியாவுதீன் சொன்னதைப்போல, ஹஜ்ஜு கடமைக்கு ஆகும் செலவை விட, இந்த "எக்ஸ்ட்ரா" கடமைக்கு ஆகும் செலவுகள்தான் அதிகம்.

சொல்லி பிரயோஜனம் இல்லை. கேட்டால் சொல்வார்கள், "என்னிடம் வசதி இருக்கிறது. செலவு பண்ணுகிறேன், உனக்கென்ன?" என்பார்கள். அதனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதே நமக்கு நல்லது.

"பல் உள்ளவன் பக்கோடா சாப்புடுறான், பல் போனவன் பஞ்சு முட்டாயி சப்புறான்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தூத்துக்குடியில்
posted by saha (chennai) [29 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3641

அடுத்த ஆண்டு தூத்துக்குடியில் ஹஜ் பயணியருக்கான விமானம் இயக்கப்பட்டால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பணம் இப்பொழுது இருக்கும். நாளை இருக்காது.
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [30 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3649

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

காயல் மாநகர மக்களே !

கீழே பதிவு செய்துள்ள சகோதரர் ஜியாவுத்தீன் / சகோதரர் வி.எஸ்.எம். அலி ஆகிய இருவரும் “ ஜோக் ” அடிப்பதில் வல்லவர்கள் தான். அதற்காக எல்லா விஷயத்திலும் அது நன்றாக இருக்காது சகோதரர்களே.

ஒருவர் ஹஜ்ஜுக்கு போகிறார் என்றால், அவரவர்களுடைய ஆசை. குடும்பத்தார்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும்.

எல்லோரையும் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் அழைத்துச் செல்லவேண்டும். அவர்களின் துஆ பேற்றினைப் பெறவேண்டும் என்ற ஆர்வம். அதற்காக இதை “ லஞ்சமா ” என்று கேட்டு விடாதீர்கள். இதைத்தான் தமிழில் விருந்தோம்பல் என்பார்கள்.

இதற்கு என்ன செலவு வந்து விடப்போகுது. அவர்கள் ஒரு லட்ச ரூபாய் ஹஜ்ஜுக்கு செலவு செய்கிறார்கள் என்றால், அதில் ஒரு சதவிகிதம் கூட இந்த மாதிரியான விருந்தோம்பலுக்கு வருவது மிகவும் அரிது.

அதை விட்டு விட்டு கஞ்ஜத்தனமாக இருக்கக் கூடாது. பணத்தைச் சேர்த்து வைத்தவர்கள் எல்லாம் போகும் போது தங்களோடு கொண்டாப் போகிறார்கள். இல்லையே .

பணம் இப்பொழுது இருக்கும். நாளை இருக்காது. ஆனால் நல்ல குணமும் , துஆவும் அப்படி அல்ல சகோதர்களே. ஆகவே எல்லோருடைய நல்ல துஆவைப் பெற முயற்சி செய்யுங்கள்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. யார் கத்துக்கொடுத்தது?
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [30 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3653

அன்பு சகோ. மஹ்மூத் செய்யத் அவர்களுக்கு, வஅலைக்கும் முஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு தாங்களின் கருத்துக்கு நன்றி.

ஒன்றை மட்டும் நாம் நினைவில் வைப்பது நன்கு. இஸ்லாம் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு வழிமுறை வைத்து உள்ளது. பணம் செலவு செய்யவும் அதை சம்பாதிப்பதற்க்கும் நெறியையும்,ஒழுக்கத்தையும் கத்துகொடுத்து உள்ளது.

எது கஞ்சத்தனம், எது ஊதாரிதனம் என்பதையும் நம் நபி(ஸல்) அவர்கள் சொல்லித் தராமல் செல்லவில்லை.அதை மீறி ஒரு செயல் செய்தாலும் அது வழிகேடல்தான். இதை தாங்கள் நன்கு அறிவீர்கள் தானே.

வீட்டில் வைத்து துஆ கேட்டு வழி அனுப்புவது நல்லதா அல்லது திருமணத்திற்கு 'அடாப்பு' போடுவது மாதிரி அவர் வீட்டில் 4 நபர், இவர்கள் வீட்டில் 3 நபர் என்று போட்டு,4 ,5 வண்டிகளில் மதுரை ஏர்போர்ட் சென்று, பல செலவுகள் செய்து வழி அனுப்பி துஆ கேட்பது நல்லதா.

ஒரு வண்டிக்கு மதுரை செல்ல எவ்வளவு செலவு என்று விசாரியுங்கள். அதற்க்கு அதிகமாக "பூ மாலை, துண்டு", போட்டு வாழ்த்துவது, பிளாஷ் போர்டு வைத்து வாழ்த்துவது (அல்ஹம்து லில்லாஹ், நம் ஊரில் இந்த கலாசாரம் வரவில்லை) எல்லாம் என்ன?. காசு வைத்து இருப்பதால் எப்படி வேண்டும் என்றாலும் செலவு செய்ய வேண்டுமா. யார் கத்துக்கொடுத்தது?

இது மட்டுமா செலவு, இன்னும் பல பல செலவுகள் உள்ளன. பட்டியலிட்டால் வம்புதான், MODERATOR அவர்களும் EDIT பண்ணிவிடுவார். Moderator அவர்கள் கட் பண்ணமாட்டார் என்றால் என்னன்னா செலவுகள் ஊரிலும், சென்னைலும், சவுதி அரேபியாவிலும் செய்கிறார்கள் என்று பட்டியலிட்டால் ஒரு தனி பதிவுக்கே வரும்.

ஆகவே, யாருக்கும் புத்தி சொல்லும் தகுதி எனக்கு இல்லை என்பதும் நான் அறிவேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நாம் திருந்தும் காலம் என்றோ
posted by vsm ali (Kangxi, Jiangmen , China) [30 March 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 3654


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வாகன செலவு, விருந்து செலவு
posted by அப்துல் காதர் தைக்கா சாஹிப் (ரியாத்) [31 March 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3681

"பணத்தைச் சேர்த்து வைத்தவர்கள் எல்லாம் போகும் போது தங்களோடு கொண்டாப் போகிறார்கள். இல்லையே" சகோதரர் சொல்வது சரி தானே?

ஆனால் அந்த பணத்தை இவ்வாறு வாகன செலவு, விருந்து செலவு என்று செலவலிப்பதை விட, வருமையில் வாடும் ஏழை குடும்பத்துக்கு தானம் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு செல்லலாமே?

தூத்துக்குடி ரயில்வே ஸ்டேசன் செல்ல குறைந்தது 1000 ரூபாய் ஆகும், 15 பேர் ஒரு வேனில் செல்வார்கள், அவர்களின் இதர செலவுக்கு 500 ரூபாய்?

ஆக 1500ரூபாய் ஒரு ஏழை குடும்பத்துக்கு கொடுத்தாள் அவர்கள் துஆ செய்ய மாட்டார்களா?

இதெல்லாம் சொன்னா, சவூதிக்கு போயி நீ மாறிட்டேன்னு சொல்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved