Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:54:02 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5877
#KOTW5877
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 26, 2011
நகரில் விற்பனை செய்யப்படும் எண்ணெய்யில் கலப்படம்: CFFC சோதனை முடிவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5641 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தின் பிரதான கடை ஒன்றில் விற்கப்படும் எண்ணெய்களில் கலப்படம் இருப்பதாக Cancer Fact Finding Committee (CFFC) சார்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து CFFC குழும ஒருங்கிணைப்பாளர் சாலை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

காயல்பட்டினத்தில் பெருகி வரும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு - இந்தியா மற்றும் உலகமெங்கும் வாழும் காயலர்களின் ஆதரவுடன் - அதற்கான காரணிகளை அறியும் பொருட்டு குழு ஒன்று - Cancer Fact Finding Committee (CFFC) - அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதன் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நகரின் பிரதான பலசரக்கு கடை ஒன்றில் நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் வாங்கப்பட்டு, அவற்றில் கலப்படம் உள்ளதா என்று அறிய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பாக்கெட்களில் அல்லாமல் சில்லரையாக விற்கப்படும் இப்பொருட்கள் குறித்த முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளது.

பரிசோதிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் இல்லை என முடிவு வந்துள்ளது. அதே நேரத்தில் நெய்யில் வனஸ்பதி (டால்டா) கலந்திருப்பதாக முடிவு வந்துள்ளது. கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்யிலும் கலப்படங்கள் இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆகவே பொதுமக்கள் எண்ணெய் வகைகளை கடைகளில் சில்லரையாக வாங்குவதைத் தவிர்த்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தொடரட்டும் CFFC யின் சீரிய பணிகள்!
posted by kavimagan kader (dubai) [26 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3563

நகரில் விற்கப்படும் நெய் மற்றும் எண்ணெயில் கலப்படம் என்ற CFFC உடைய ஆய்வறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.மொத்தமாக வாங்குவதற்கு வழியில்லாமல், அன்றாடம் சில்லரையாக வாங்கி உபயோகம் செய்யும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் இந்தக் கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

காயல்வாசிகளுக்கு கலப்படம் இல்லாத, தரமான உணவுப்பொருட்கள் கிடைத்திட, நல்லவர்கள் கூடி ஒரு முடிவு காண வேண்டும். மாவட்டத்தின் வேறு எந்தப் பகுதியையும் விட அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கும் நமது மக்களுக்கு நீதியும், நியாயமும் கிடைக்கவேண்டும். அருள்வாய் அல்லாஹ்! ஆவல் நிறைவேற்றல்லாஹ்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. SHOP NAME
posted by M.S.ABDULAZEEZ (Gungzhou) [26 March 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 3567

PLS.... mention the shop name. it is very usefull to avoied purchasing the goods in this shop.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. எண்ணெய்யில் கலப்படம்???
posted by தைக்கா சாஹிப் (ரியாத் ) [26 March 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3568

அந்த பிரதான பலசரக்கு கடை எதுன்னு தெரியவில்லையே?
நகரில் உள்ள மற்ற பலசரக்கு கடைகளின் நிலை என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Super Market
posted by Hasan (Khobar) [26 March 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3570

பிரதான kadai- intha clue போதும். பிரதான கடைக்கு சூப்பர் மார்கெட் எல்லாம் உண்டோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. kalappatam
posted by sithi katheeja (kayalpatnam) [26 March 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 3571

தயவு செய்து கடை பெயரை சொன்னால் என் போன்ற பெண்கள் அங்கு பொருட்கள் வாங்குவதை தவிர்த்து விடுவார்கள் இன்னும் என்னென்ன பொருட்களில் எல்லாம் வைத்திருக்கிறார்களோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Only in oil?
posted by Fouzia S.T (kayalpatnam) [26 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3573

Plz let us know the shop name?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஊர் பூராவும் கலப்படம் தானா?
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [26 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3574

முதலில் இந்த சீரிய பணிக்கு தங்களை அற்பணித்த அணைத்து CFFC அங்கத்தினருக்கும் எங்களின் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

பிரதான கடை என்றால்?? இவர்களிடம் இருந்துதான் ஊரில் உள்ள சில்லறை கடைகள் எல்லாம் வாங்கி விற்பனை செய்வார்கள். அப்படியானால் ஊர் பூராவும் கலப்படம்தானா? லிட்டருக்கு ஒரு ரூபாய் இவரிடம் குறைவாக கிடைகின்றது என்று நம் மக்கள் அங்கு போட்டி போட்டு வாங்குகிறார்களே.. என்னத்தை சொல்ல...

இந்த பிரதான கடை எது?

சொன்னால் மக்களும் உஷாராக இருப்பார்கள், கடைக்காரரும் திருந்துவரே..

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Clarification from CFFC !!!!
posted by Salai Sheikh Saleem (Dubai) [26 March 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3575

சில முக்கிய காரணங்களுக்காக கடையின் பெயர் தற்போது வெளியிடப்படவில்லை. கலப்பட பழக்கம் பிற கடைகளில் இருக்க வாய்ப்புள்ளதால் - இப்போதைக்கு எந்த கடையில் இருந்தும் சில்லறை முறையில் எண்ணெய் வாங்குவதை தவிர்த்து கொள்ளவும். இன்ஷா அல்லாஹ், இது குறித்த முழு விபரம் விரைவில் தரப்படும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. CFFC செயல்படும் நோக்கம் புரிகிறதா?
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [26 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3576

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

கடையில் விற்கப்படும் எண்ணெய்களில் கலப்படம் இருப்பதாக CFFC கண்டுபிடித்திருப்பது நல்ல செய்தி.

நெய்யில் வனஸ்பதி (டால்டா) கலந்திருப்பதாக கண்டுபிடித்திருப்பது ஒருபுறமிருக்கட்டும். கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்யிலும் எதை கலந்திருக்கிறார்கள் என்பதை தெரியபடுத்தினால் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.

அவர்கள் கடையில் உள்ள மற்ற உணவுப் பொருட்களையும் தரம் பற்றிய சோதனை செய்திடல், காலாவதியாகும் தேதியை சோதித்தல் போன்றவைகளை பரிசோதித்து அவைகளில் மிகுந்த பாதிப்புக்கள் ஏதுமிருந்தால் உடனே சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க ஏற்பாடு செய்யவும்.

சாதாரண பாதிப்புக்கள்தான் என்று இருக்கும் பட்சத்தில் இந்த கடையின் பெயரை வெளியிடுவதற்கு முன் அவர்களுக்கு எழுத்துப்பூர்வமான எச்சரிக்கையை கொடுத்து உடனே கலப்பட பொருட்கள் அழிக்கப்பட வேண்டும் அல்லது அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

அந்த எச்சரிக்கையை அவர்கள் ஏற்று அப்பொருட்களை உடனே அகற்றினால் நல்லது. மீறும் பட்சத்தில் அவர்களின் கடை பெயரை பொதுமக்களுக்கு பல வகையிலும் சென்றடையுமாறு விளம்பரப்படுத்தி, விழிப்புணர்ச்சியை உண்டாக்கி அவர்களின் வியாபாரத்திற்கு முற்றுபுள்ளி வைக்கவும்.
------------------------------------
மற்றக்கடைகளிலும் பரிசோதனைகளை தொடங்கி இருக்கலாம் அல்லது விரைவில் தொடங்குவது நல்லது.

கலப்படம் செய்வதால்தான் ஒரு சில கடைகளில் விலை குறைவாக கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் இன்று உணர்ந்திருப்பார்கள்.

மேலும் ஊரிலிருந்து சில மக்கள் ஏரல் சென்று, விலை மலிவு என்று வாங்கி வரும் அத்தனையும் கலப்படம்தான் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.
-------------------------------------------
பொது மக்களே!

CFFC செயல்படும் நோக்கம் புரிகிறதா?

பலசரக்கடையில் கலப்படத்தை கண்டுபிடிக்க இப்போதுதான் தொடங்கி இருக்கிறார்கள் இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் எத்தனையோ கடைகள், என்னென்ன சோதனைகள் இருக்கிறது.

மருந்துக்கடைகள், ஹோட்டல்கள், கறிக்கடை, மீன் மார்கெட், இன்னும் பல உண்டு.

மேலும் மொபைல் டவர், DCW கழிவு நீர், காற்றுப் புகை இப்படி பலவகையான புற்று நோய் மற்றும் கொடிய நோய்களுக்கு காரணியாக இருக்கும் அத்தனையையும் சோதித்து கண்டு பிடித்து நம் மக்களையும், ஊரையும் - சுகமானவர்களாகவும், சுகாதாரமானவையாகவும் வைக்க வேண்டும் என்பதே.

ஆகவே பொது மக்களாகிய நாம்தான் CFFCயின் செயல்களுக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

மேலும் பல, பல பரிசோதனைகள் செய்து கலப்படங்களை கண்டுபிடிக்க வேண்டியது உள்ளதால் அவரவர்களுக்கு இயன்ற பொருளுதவியையும் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! CFFC யின் பணியை தொய்வின்றி நடைபெற்று வெற்றியடைய செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. “ஹைய்யா!அந்த கடை எதுன்ணு? எனக்குத் தெரிஞ்சு போச்சு!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [27 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3583

“ஹைய்யா!அந்த கடை எதுன்ணு? எனக்குத் தெரிஞ்சு போச்சு!இனிமேல் அவங்க நெய்யிலெ வனஸ்பதி,(டால்டா)வைக் கலக்க மாட்டாங்களாம்!டால்டாவுலெ தான் இனி நெய்யை கலப்பாங்களாம்,போதுமா?

அடப் போங்கப்பா!ஒரு கடையில் கலப்படத்தை கண்டுபுடிச்சதுக்கே ஆளாளுக்கு,கடை பெயர் என்ன?கடை பெயர் என்னன்ணு?ஆளாப் பறக்கிறீங்களே? ஒட்டு மொத்தக் கடையிலும் ஒரு பொருள் கூட உருப்படியா கிடைக்காதைய்யா?அது நம்ம தலையெழுத்து வாங்கித் தொலைச்சே ஆகணும்!தரக்கட்டுபாடின் தரம் உயரும் வரை இது தான் நம் தலைவிதி!நுகர்பொருளுக்குத் தரம்,மற்றும் உப்புக்கும்,சர்க்கரைக்கும்,ஏன்?முட்டைக்கும் கூட காலாவதி காலத்தை பதித்தே ஆகவேண்டும் என்ற சட்டத்தை இயற்றி அதை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் சவூதி அரேபியாவின் சட்டம் நம் நாட்டில் இருந்தால் மட்டுமே இது போன்ற கயவர்களின் கலப்படத்திற்கு கடுமையானத் தண்டனை கொடுக்க முடியும்.

குறும்பு:
“நாம நெய்யும்,நெருப்புமாகத் தின்றால் இப்படித் தான்.”


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. கலப்படமோ கலப்படம்
posted by Salai S Nawas (Singapore) [27 March 2011]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 3585

அருமையான கருத்துக்களை பதிவு செய்த N.S.E. மஹ்மூது மாமாவுக்கு நன்றி. இதுக்கே ஷாக் ஆகுறீங்களே, இன்னும் படிங்க! இப்போது பரவலாக எண்ணெய்யில் கலப்படம் செய்யும் பொருள் என்ன தெரியுமா? பன்றி கொழுப்பு. இதை நான் சொல்லவில்லை, ஆய்வு கூடத்தில் சொன்ன செய்தி.

இந்த கலப்பட எண்ணையை 2 அல்லது 3 முறை மறுபடியும் உபயோகித்தால் கேன்சர் போன்ற வியாதிகள் வருவது உறுதி, இதையும் நான் சொல்லவில்லை, ஆராய்சியாளரிடம் கேட்டு தெரிந்த செய்தி.

ஆகையால் விலையை பற்றி கவலைபடாமல் தரமான பொருட்களை வாங்கி ஆரோகியமான வாழ்க்கை வாழுங்கள். ஹராம் ஹலால் பேணுவோரிடம் பொருட்களை வாங்குங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. VERY SERIOUS WORK. GOOD
posted by mauroof (Dubai) [27 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3590

சீரிய பணி இது ஒரு SERIOUS பணி. பிரதானம் என்ற ஒரு சொல்லே போதும் புரிவதற்கு. இருப்பினும் அவன்தானே குறைவா தர்ரான். எல்லா பொருளும் ஒரே இடத்தில வேறு கிடைக்குது.


அழுகிய தேங்காய் என்றால் ஒண்ணும் பேசாம மாற்றி தர்ரான். கலப்படம் இருக்கானு பார்த்துக்கிட்டிருந்தா கரி கடையில் ஆட்டுக்கால் சொல்லி வச்சிர்ந்தேன் அவன் வேற யாருக்காவது கொடுத்துருவான்.

அது மட்டுமா SERIAL வேற முடிஞ்சிரும். சலவாத் ஓதி சாப்பிட்டால் எந்த கலப்படமும் ஒண்ணும் செய்யாது. காயல்பட்டணம் இது ஒரு கலப்படபட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Appreciate CFFC
posted by Shaik (Singapore) [27 March 2011]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 3599

While appreciating the work of CFFC, my suggestion is, make sure the information is 100% correct and once confirmed, better ask the shop to CLOSE DOWN immediately.

Some kind of crimes cannot be given second chance and this is surely in this category as this kind of fatal crimes must be stopped at its root and the only way to teach the concerned criminals and curbing this crime from spreading is showing them the EXIT.

If you think, forgiving them by giving severe warning will stop them from doing the same crime in future, is an absolute folly and we will only make our community to suffer more by showing them mercy.

Since they do not fear Allah and dare to spoil human life for the money, no point in expecting them to change and it's not practical to have a frequent routine checkup always and even if we do, by the time we find the adulteration food, many should have consumed that food and started to suffer...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Yosanai
posted by Seyna (Bangkok) [27 March 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3608

Assalamu Alaikum,

Yanaku oru cinna yosanaiga, Nama yalla nadu kalaium irukom, Yalla nadu kalaium kayal nala mandram du vachie irukoom, Nama Yanga oru palasara kadai arambika koodathu, Nama veetula thanay jamangal vangie samikiranga,

Yalla kayal nala mandramaum sarthu oru palasara kadai arambicie orula nalla, suthamana jamankal maka makkaluku kudukalam, oru la irukiravangaluku velaium kidaikum, athula vara labathai nalla visayathuku payan paduthalaamaay, Yosithu parunga, namaludaiya kudumbam, namaludaiya pillainga, yallam kalapada jamangal vangie sapida venduma, illa athai yallam purakanika venduma,

Nama yannathaan kandu pidichie avangal ta kalapada jamangal virka koodathudu sonnalaum, Saivanga ipo Naiela kandu pidichinga, innum niraya irukunga, Milk powder, Masala, Sugar, ipadi niaraya iruku,

Palasara kadai nadathu vathu ondrum asingam illai,

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. மலிவு+மட்டம்= அழிவு+நட்டம்
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [28 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3611

இதெல்லாம் நம்ம மக்களுக்கு, எருமை மாட்டு மேலே மழை பெய்ஞ்ச மாதிரிதான். உறைக்கவே உறைக்காது. முதல்லே எவர் நம்ம ஆள் நடத்தும் மளிகைக் கடைகளில் சாமான்கள் வங்குகிறனர்.

உதாரணத்துக்குச் சொல்லப் போனால் ஐவேளைத் தொழுகையைக் கடை பிடித்து. ஹலால், ஹராம் பேணி,சுத்தமான, தரமானக் கலப்படமே இல்லாத பொருட்களை கச்சிதமாக பாக்கெட்டில் அடைத்து, நமதூரின் கன்னியமான தலைவர்களில் ஒருவருடைய வாரிசுகள்(குத்துக்கல் தெருவைச் சார்ந்தவர்கள்)நடத்தி வருகின்றனர். அதனை நன்கு உணர்ந்தவர்களைத் தவிர பெரிதாக யாரும் அங்கு பொருட்களை வாங்குவதில்லை! கேட்டால்..ஆங்! அங்கே எல்லா சாமான்களுக்கும் விலை கூடுதல் தான்! என, சளைத்துக் கொள்கின்றனர்.

அட! ஏமாளி சமூகமே? தரமான பொருட்களை தகுந்த விலைக்கு தான் விற்க முடியும்! மலிவாகக் கிடைக்கிறது என்று மண்ணாங்கட்டியை வாங்கி மார்தட்டிக் கொள்கின்றீர்களே? இதை விடக்கொடுமை வேறு என்ன இருக்கு?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்
posted by shaik abbul cader (kayalpatnam) [28 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3618

உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.

இவற்றைப் படிக்கத் துவங்குமுன் ஒரு சில வார்த்தைகள். கலப்படத்தைக் கண்டுபிடிப்பதற்கென இங்கே விவரிக்கப்படுகிற வழிகள் எல்லாம் முடிவானவை என்று சொல்வதற்கில்லை. கலப்படத்தைக் கண்டு பிடிக்கும் முறையான ஒரு ஆய்வகம் தரும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை ஈடாகாது.

உணவு குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் போன்றே கலப்படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அக்கலப்படத்தை இனங்கண்டு கொள்வதற்க ஓரளவு இங்கே வழி செய்யப்பட்டுள்ளதேயொழிய, இனிமேல் வரக்கூடிய கலப்படத்தைப் பற்றி எதுவும் இங்கே கூறவில்லை. தோற்றத்திலோ அல்லது குணத்திலோ ஓரளவு ஒத்திருக்கும் சில கலப்படப் பொருட்களை தேடிப்பிடித்து உணவுப் பொருட்களில் கலப்படத்தைச் பெருக்கி வருகின்றனர் சில வணிகர்கள். அவற்றைத் தடுக்கும் சிறு முயற்சி இது.

எனவே நுகர்வோர் இந்த வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கலப்படப் பொருளை கண்டறிவதில், ஒரு சாதகமான அல்லது பாதகமான தீர்வு ஏற்பட்டது என்பதற்காக, ஒரு பொருள் கலப்படமானது அல்லது தரமானது என்று அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது.

குறிப்பிட்ட உணவுப் பொருளில் கலப்படம் செய்யப் பட்டள்ளதா என்று, மேலோட்டமாக அறிவதற்கான வழிவகைகளே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எனவே கலப்படமான பொருள் என்று இறுதியாகச் சொல்வதற்கு ஒரு ஆய்வகமே தகுதி படைத்தது ஆகும்.

1.உணவுப் பொருளின் பெயர் : நெய் அல்லது வெண்ணெய்

கலப்படப்பொருள் : வனஸ்பதி

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி உருகிய நெய் அல்லது வெண்ணெய் மற்றும் அதே அளவுக்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து ஒரு நிமிட நேரம் நன்கு குலுக்கவும். பின்னர் ஐந்து நிமிட நேரம் அப்படியே வைத்திருக்கவும். சோதனைக் குழாயின் அடியில் ஊதாநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிற அமிலப் படிவு காணப்பட்டால் அதில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.

முன் எச்சரிக்கை : வனஸ்பதி பொருள் கட்டாயமாக நல்லெண்ணெய் கலக்கப்பட வேண்டும் என்பதை கண்டறிய இச்சோதனை மிகவும் ஏற்றது. சில நிலக்கரி தார் சாயங்களும் இச்சோதனைக்கு இதே முடிவைத்தரும்.

கலப்படப்பொருள் : கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு மற்றும் பிற மாவு வகைகள்.

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

வெண்ணெயில் உருளைக்கிழங்கு அல்லது வள்ளிக் கிழங்கின் கூழ் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் விடவும். பழுப்புநிறமுள்ள டிஞ்சர் அயோடின் நீல நிறமாக மாறினால் கலப்படம் நடந்திருக்கிறது என்று பொருள்.

முன் எச்சரிக்கை : இந்தசோதனை கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது அடர்த்தி கொடுக்கக் கூடிய பொருட்கள் கலந்த பால் இவற்றுக்குப் பொருந்தாது.

2.உணவுப் பொருளின் பெயர் : பால்

கலப்படப்பொருள் : தண்ணீர்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

1. லாக்டோமீட்டரால் பாலின் அடர்த்தியைக் காண வேண்டும. அது எண். 1.026க்கு மூழ்கிருந்தால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது புலனாகும்.

2. ஒரு பளபளப்பான பரப்பைச் செங்குத்தாக வைத்து ஒரு சொட்டு பால் விடவும். சுத்தமான பால் இலேசாக நகரும் அல்லது அப்படியே நிற்கும். கலப்படப் பால் எந்த ஒரு வீழ்படிவம் இல்லாமல் வேகமாக ஓடிவிடும்.

கலப்படப்பொருள் : மாவுப்பொருள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

பாலில் சிறிதளவு டிஞ்சர் அயோடினைச் சேர்க்கவும். அது நிறம் மாறி நீலநிறமானால் மாவுப் பொருள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளலாம்.

3.உணவுப் பொருளின் பெயர் : கோவா

கலப்படப்பொருள் : மாவுப் பொருள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

மேலே சொன்னவாறு இதற்கும் செய்யவும்.

4.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்

கலப்படப்பொருள் : நாய் கடுகு எண்ணெய்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சிறிதளவு மாதிரி எண்ணெயில் ஒரு சில துளிகள் அடர் நைட்ரிக் அமிலம் விட்டு, ஜாக்கிரதையாகக் குலுக்கவும். அமிலப்படிவம் சிவப்பில் இருந்து செம்பழுப்பு நிறத்தில் தோன்றினால் அதில் நாய் கடுகு எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்பது பொருளாகும்.

5.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்

கலப்படப்பொருள் : தாதுப்பொருள் எண்ணெய்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

இரண்டு மில்லி மாதிரி எண்ணெயுடன் அதே அளவு எண் 2 ஆல்காலிக் பொட்டாஸைச் சேரக்கவும். அக்கலவையை சுமார் 15 நிமிடங்கள் கொதி நீரில் சூடுபடுத்திவிட்டு அதில் 10 மில்லி தண்ணீரைக் கலக்கவும். ஏதேனும் கலங்கல் தென்பட்டால் தாதுப்பொருள் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்று பொருள்.

முன் எச்சரிக்கை :

இந்த சோதனைகள் குறைந்த அளவில் செய்யப்பட்டு உள்ள கலப்படத்தைக கண்டுபிடிப்பதற்கு அல்ல.

கலப்படப்பொருள் : விளக்கெண்ணெய்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

ஒரு சோதனைக் குழாயில் சிறிதளவு எண்ணெயுடன் கொஞ்சம் பெட்ரோலியம் ஈதரை விட்டுக் கரைக்கவும். அக்கலவையை உறை பனி கலவைக்கு நடுவில் வைத்து சிறிது நேரம் குளிர வைக்கவும். ஐந்து நிமிடத்தில் கலங்கல் தென்பட்டால் விளக்கண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது விளங்கும்.

6.உணவுப் பொருளின் பெயர் :. இனிப்பு, ஐஸ்கிரீம், சர்பத் முதலியன.

கலப்படப்பொருள் : மெடானில் எல்லோ (இது ஒரு அனுமதிக்கப்படாத நிலக்கரித்தாரின் சாயம்)

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

சம்பந்தப்பட்ட பொருளில் இருந்து வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு சாயத்தை தனியாக எடுக்கவும். சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடும் போது மெஜந்தர் சிவப்பு நிறம்தோன்றுமானால் மெடானில் எல்லோ என்ற சாயம் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது என்பதாகும்.

7.உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்

கலப்படப்பொருள் : கேசரி பருப்பு

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பருப்பின் மீது 50 மில்லி நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டு, 15 நிமிடம் நீரில் வைக்கவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்று மானால் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகப் பொருள்.

முன் எச்சரிக்கை :

இந்த சோதனை கேசரிப் பருப்பை கண்டுபிடிக்க மட்டுமே உதவும். உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்

கலப்படப்பொருள்: களிமண், சிறு கற்கள், சரளைக்கற்கள் போன்றவை (கால்சியம் குரோமேட் மஞ்சள்)

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இவற்றைச் சற்று கூர்ந்து பார்த்தே கண்டுபிடித்து விடலாம். 5 மில்லி நீருடன் 5 கிராம் பருப்பைச் சேர்த்து அதில் ஒரு சில துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலம் விடவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்றுமானால் கலப்படம் நடந்துள்ளதை அறியலாம்.

8.உணவுப் பொருளின் பெயர் :. பெருங்காயம்

கலப்படப்பொருள் :மாக்கல்லின் தூள் அல்லது மண் சம்பந்தப்பட்ட பொருள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குலுக்கவும். மாக்கல்லாயின் தூள் அல்லது மண் தூள்கள் தானாக அடியில் தங்கிவிடும். சுத்தமான பெருங்காயம் நீரில் கரையும் போதுமான வெள்ளை நிற கரைசலாகும். அது நெருப்பில் கொளுத்தினால் மஞ்சள் நிறத்தில் எரியும்.

முன் எச்சரிக்கை :

கூட்டுப் பெருங்காயத்தில் மாவுப் பொருள் இருப்பதால் ஒரு சிறிது கலங்கல் ஏற்படும் எனினும் சிறிது நேரத்தில் ஙீழே படிந்துவிடும்.

உணவுப் பொருளின் பெயர் : பெருங்காயம்

கலப்படப்பொருள் : மாவுப்பொருள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

பாலுக்குச் செய்த அதே சோதனையைத் தான் இதற்கும் செய்யவேண்டும்.

9.உணவுப் பொருளின் பெயர் : தேயிலை

கலப்படப்பொருள் :சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை அல்லது நிறம் கூட்டப் பற்ற காய்ந்த இலை பருப்பின் தவிடு

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

1. இதனை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும்.

2. வெண்மையான பீங்கான் ஓடு அல்லது கண்ணாடித் தகட்டின் மீது சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல் சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம் செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.

10.உணவுப் பொருளின் பெயர் : சர்க்கரை

கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

சிறிதளவு மாதிரியை எடுத்து ஒரு கண்ணாடி டம்ளர் நீரில் கரைத்தால் சாக்கட்டித்தூள் அடியில் படிந்துவிடும்.

11.உணவுப் பொருளின் பெயர் : கரும் மிளகு

கலப்படப்பொருள் : பப்பாளிப்பழத்தின் உலர்ந்த விதைகள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பப்பாளி விதைகள் முட்டை வடிவில் சுருங்கியவாறு பசும்பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் பார்த்தவுடனேயே எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் ஒரு கரு மிளகைக் கடித்தால் ஏற்படும் கார குணம் பப்பாளி விதையைக் கடித்தால் ஏற்படாததையும் கண்டு கொள்ளலாம்.

கலப்படப்பொருள் : சொத்தை மிளகு

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

எரிசாராயத்தின் (ஸ்பிரிட்) மேல் சொத்தை மிளகு மிதக்கும்.

12.உணவுப் பொருளின் பெயர் : மஞ்சள் தூள்

கலப்படப்பொருள் : நிறமேற்றப்பட்ட மரத்தூள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக்குழாயில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடவும். உடனே நீல நிறம் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தால் அந்த மஞ்சள் தூள் சுத்தமானது என்று பொருள். நிறம் மாறாமல் மஞ்சளாகவே தோற்றமளித்தால் அனுமதிக்கப்படாத செயற்கை சாயமான மெடானில் எல்லோ கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உணரலாம்.

முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மெடானில் எல்லோ கலப்படத்திற்கு.

13.உணவுப் பொருளின் பெயர் :. மிளகாய்த்தூள்

கலப்படப்பொருள் : செங்கல்தூள், உப்புத்தூள் அல்லது முகப்பவுடர்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளை போடவும். கலப்படத்தூளானால் சாயம் கரைந்து மேலாக வர செங்கல் தூள் ஙீழே படியும். மேலும் வீழ்படிவம் வெண்மையாகவும், வழுவழுப்பாகவும் காணப்பட்டால் சோப்புக்கல் தூள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியும்.

முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மண் சம்பந்தப்பட்ட பொருட்கள் கலந்திருப்பதை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.

கலப்படப்பொருள் : வண்ணம்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கண்ணாடி டம்ளரில் சிறிதளவு மிளகாய்த்தூளை தூவ வேண்டும். வண்ணக்கலவை தானாக நிறம் பிரிந்து வரும். படிப்படியாக அந்த நிறம் குறைந்து விடும்.

14. உணவுப் பொருளின் பெயர் : காப்பித்தூள்

கலப்படப்பொருள் : சிக்கரி

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணீரில் இலேசாக காப்பித்தூளைத் தூவவும். காப்பித்தூள் தண்ணீரின் மேல் மிதக்கும். ஆனால் சிக்கரியோ ஒரு சில வினாடிகளில் மூழ்கி விடும். சிக்கரியில் அதிக அளவு கருவெல்லச்சாயம் இருப்பதால் ஒருவித நிறத் தொடர்ச்சி காணப்படும்.

கலப்படப்பொருள் : புளியங்கொட்டை, பேரீச்சங்கொட்டைத்தூள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகத்துக்கு இடமான காப்பித்தூளை ஒரு வெள்ளை மையொற்றுத் தாளின் மீது இலேசாக தூவி அதன் மேல் நீர் தெளிக்கவும். புளியங்கொட்டை அல்லது பேரீச்சங்கொட்டைதூள் கலந்திருந்தால் ஒற்றுத்தாள் சிவப்பு நிறமாக மாறிவிடும்.

15. உணவுப் பொருளின் பெயர் : தூள் வெல்லம், வெல்லம்.

கலப்படப்பொருள் : சலவை சோடா

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் தூள்வெல்லத்தின் மீது ஒரு சில துளிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் விடவும். நுரைத்து வந்தால் கலப்படம் நடந்துள்ளது என உணரலாம்.

கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

ஒரு டம்ளர் தண்ணீரில் இரு தேக்கரண்டி வெல்லத்தூளை விட்டுக் கலக்கவும். சாக்கட்டித்தூள் கிழே படிந்துவிடும்.

16 . உணவுப் பொருளின் பெயர் : ரவை

கலப்படப்பொருள் : இரும்புத்தூள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் ரவையினுள் ஓரு காந்தத்தை எடுத்துத் தூவினால் அதில் இரும்புத்தூள் தானாக ஒட்டிக் கொள்ளும்.

17. உணவுப் பொருளின் பெயர் :அரிசி

கலப்படப்பொருள் : சலவைக்கற்கள் மற்றும் இதர கற்கள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

உள்ளங்கையில் சிறிது அரிசியை வைத்து கையை சிறிது சிறிதாக நீரில் அமிழ்த்தினால் கற்கள் நீரில் மூழ்கிவிடும். அரிசி மிதக்கும்.

18. உணவுப் பொருளின் பெயர் :. கோதுமை மாவு (மைதா)

கலப்படப்பொருள் : மைதா மற்றும் ரவை எடுத்துவிட்டபின் உள்ள ஆட்டா

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

இப்படிப்பட்ட மாவினால் சப்பாததி தயாரிக்க அதிக நீர் விட்டு பிசைய வேண்டியிருக்கும். இதில் சப்பாத்தி தயாரித்தால் சற்று இறுகலாக இருக்கும். சுத்தமான மாவில் தயாராகும் சப்பாத்தி சிறிதளவு இனிப்பாக இருக்கும். ஆனால் கலப்பட மாவில் தயாரிக்கும் சப்பாத்தி சுவையற்றதாக இருக்கும்.

19. உணவுப் பொருளின் பெயர் : சாதாரண உப்பு

கலப்படப்பொருள் : வெள்ளைக்கல்லின் தூள் மற்றும் சாக்கட்டி போன்றவை

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சாதாரண உப்புத்தூளைக் கலக்கவும். சாக்கட்டி கலந்திருந்தால் அந்த நீர் வெள்ளை நிறமாவதோடு மற்ற அசுத்தமான பொருட்கள் கிழே படிந்துவிடும்.

20. உணவுப் பொருளின் பெயர் : தேன்

கலப்படப்பொருள் : சர்க்கரைப்பாகு (தண்ணீரும சர்க்கரையும் கலந்தது)

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

கொஞ்சம் பருத்தி திரியை சுத்தமான தேனில் நனைத்து தீக்குச்சியால் பற்ற வைத்தால் அது தீப்பிடித்து எரியும். கலப்படத் தேனாக இருந்தால் அது எரியாது. அப்படியே எரியத்துவங்கினாலும் பட் பட் என வெடிச்சத்தத்துடன் எரியும்.

முன் எச்சரிக்கை : ஈரம் கலந்த தேனுக்கு மட்டுமே இந்த ஆய்வு.

21. உணவுப் பொருளின் பெயர் : சீரகம்

கலப்படப்பொருள் :கரித்தூள் பூசிய புல் விதைகள், குப்பைக்ஙீரை விதைகள்

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

விரல்களால் கசக்கிப் பார்த்தால் விரலில் கரி படிந்தால் கலப்படம் என முடிவு செய்துவிடலாம்.

22. உணவுப் பொருளின் பெயர் : கடுகு

கலப்படப்பொருள் : மாவுப்பொருள், நாய்கடுகு, காட்டுச்செடி விதைகள்.

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

கடுகு மேற்பரப்பு வழவழப்பாக இருக்கும். நாய் கடுகு போல் சொறப்பாகவும், மிகக் கறுப்பாகவும் இருக்கும். நிற வித்தியாசம் கூர்ந்து நோக்கினால் தெரியும்.

23. உணவுப் பொருளின் பெயர் : தானியங்கள், கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு.

கலப்படப்பொருள் :நச்சுத்தன்மையுடைய காளான் விதைகள் (எர்காட்)

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

செந்நிற கருப்பு கலந்த நீண்ட தானியங்கள் சோளத்தில் இருந்தால், கலப்படம் இருபது சதவீதம். உப்புத்தண்ணீரில் தானியங்களைப் போட காளான் வகை தானியம் மிதக்கும். நல்ல தானியங்கள் நீரின் அடியில் படியும்.

24. உணவுப் பொருளின் பெயர் : கிராம்பு

கலப்படப்பொருள் :எண்ணெய் எடுத்த கிராம்பு

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

எண்ணெய் எடுத்த கிராம்பு சுருங்கிப் போய் இருக்கும்.

நன்றி: YOGANANDHAN GANESAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. ”சுனாமி வராமலேயே அழிந்து போய்விடுவீர்கள்”!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [29 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3631

அடேயப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாபா!!! இவ்வளவு கலப்படமா? தலையே சுற்றுகிறது! இப்படியேப் போனால் எப்படி? மனிதாபிமானம் மடிந்து விட்டதோ? இல்லை! மனிதனின் புத்தி பேதலித்துப் போயிற்றோ?

அற்ப சொற்ப பணத்துக்காக அடிவேரையேப் பிடுங்கியெறியும் ஈனத்தனமான கொடுஞ்செயல், மன்னிக்கவே முடியாத மாபாதகச் செயலாம் கலப்படத்தை நம்மில் புகுத்தும் கல் நெஞ்சக்காரர்களே! கடவுள் நம்பிக்கை(இறையச்சம்)துளி அளவுக்காவது உங்கள் உள்ளங்களில் இருக்குமேயானால் இன்றோடு திருந்திக் கொள்ளுங்கள்!!! உங்களுக்கான தீர்ப்புகள் திருத்தப்படலாம்!

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved