Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:23:27 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5879
#KOTW5879
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 26, 2011
தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4278 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் ஏப்ரல் 13 அன்று தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. அணிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். இது குறித்து அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை (26.03.11) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.



முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம்.

இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதிமொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம். இதன் காரணமாகவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம்.

ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக ஒரு வார்த்தையும் இல்லை.

ஆனால் திமுக வின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி கூறப்பட்ட பின்பும் திமுக வின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பியடித்த ஜெயலலிதாவுக்கு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பாராவை மட்டும் காப்பியடிக்கக் கூட மனமில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது போகிற போக்கில் இது குறித்து பேசினால் அதை முஸ்லிம்கள் நம்ப மாட்டோம், மாறாக தேர்தல் அறிக்கையில்தான் கூற வேண்டும் என்று நாங்கள் கூறியதை ஒப்புக்கொண்ட அதிமுக முஸ்லிம் சமுதாயத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது.

பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் அறிக்கையில் இதைச் சேர்ப்போம் எனக் கூறி, வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்பது உட்பட நம்மிடத்தில் எழுதி வாங்கிச் சென்று விட்டு, நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவது என்று மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

முஸ்லிம்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று நாம் வைத்த கோரிக்கையும் அதிமுக வால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

திமுக 120 இடங்களில் 4 இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் 160 இடங்களில் போட்டியிடும் அதிமுக மூன்று இடங்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு வழங்கி மற்றொரு துரோகத்தையும் செய்துள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.


இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தகவல்:
www.tntj.net


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எல்லோருக்கும் தெரிந்த கதையே
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [26 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3572

இதான் எல்லோருக்கும் தெரிந்த கதையே..

த.மு.மு.க எங்கு இருக்கிறதோ அதற்கு மாற்று அணியில் தானே நீங்கள் இருப்பீர்கள். இந்த செய்தியை சொல்ல மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் வேறு..

ஒரு காலத்தில் ஒற்றுமை, ஒற்றுமை, ஒரே அணி, அப்படி இப்படி என்று வாய் கிழிய கத்திய நீங்கள் தானா இன்று கூறு போட்டு களத்தில் நிற்கின்றீர்கள்.

சரி, மற்ற அணியில் நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களிடம் தாங்களின் நிலைப்பாடு என்ன? அவர்களை வெற்றிக்கு உறுதுணையாக இருப்பீர்களா அல்லது வழமை போல குழிபறி வேலை தானா.!!

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இப்பொழுதுதான் மக்கள் புரிய தொடங்கி இருக்கிறார்கள்.
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [27 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3580

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

அப்பாடா !

இப்பொழுதுதான் மக்கள் புரிய தொடங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் பற்றி இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் புரிவார்கள்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கருணாநிதி Vs TNTJ
posted by Cnash (Makkah) [27 March 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3581

அட போப்பா!! இதுக்கு வடிவேல்டே திமுக ஆதரவு முடிவு எவ்வளவோ பரவா இல்லை போல இருக்கு!! அதுலே கூட ஒரு லாஜிக் இருக்கு !!! நல்லா இருக்கு உங்க தீர்மானம் கருணாநிதி இட ஒதுக்கீடு கூட்டி தருவேண்டு இவர் கிட்டே வந்து வாக்கு மூலம் கொடுத்தாராம், இவர் அதே ஈமான் கொண்டு ஆதரவு அளிக்க போறாராம்!! என்னா வில்லத்தனம்!!!!! ....

PJ என்ற தனி பெற்ற மனிதர் மீது அதீத மரியாதையும் பாசமும் வைத்திருக்கும் லட்ச கணக்கான மக்களில் நானும் ஒருவன் உங்களில் பேச்சும், கருத்தும் நீங்கள் மறந்தாலும் எங்களுக்குள் என்றும் ஓடிகொண்டிர்க்கும்!!! இந்த தௌஹீத் தமிழ் மக்கள் இடையே தழைத்து ஓங்க உங்கள் ஒருவரில் பங்கு என்றுமே மகத்தானது, அதற்கான நன்மையையும் கூலியும் அல்லா உங்களுக்கு என்றும் தருவான், மேலும் நீங்க அதே பணியை மறுமை நன்மைக்காக என்றும் தொடருங்கள்!!!

அரசியலில் ஆட்டம் போட 1000 அல்லக்கைகள் உண்டு!! அவர்கள் அதை பார்து கொள்ளட்டும்!! நீங்க ஆகுற வேலை 1000 இருக்கு அதை மட்டும் பாருங்கள்!! உங்களில் ஞானமும் அறிவும் நல்ல முறையில் நாலு பக்கமும் இஸ்லாதை அதன் தூய்மையான வடிவில் எடுத்து சொல்ல மட்டுமே பயன்படட்டும்!! அரசியல் காமெடிலாம் அவர்கள் பண்ணிகொள்ளட்டும்!!!

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஏன் ஒரு முடக்குத் தண்ணீர் கூட குடிக்கிறீங்க...?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [27 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3582

அருமையான முடிவு ,தற்சமயம் நாம் எடுக்க வேண்டிய முடிவு,மற்றும்,நிலைபாடு,இப்படித்தான் இருக்க வேண்டும்.இடஒதுக்கிட்டின் முக்கியத்துவத்தை உணராத மூடர்களின் உளரல்கள்,உளரல்களாகவே இருந்து விட்டுப் போகட்டும்!அவகாசம் கொடுத்தும் அதற்குச் செவிமடுக்காத அரசியல் கட்சிகளை நம்பி நாம் ஏமாந்தது போதும்.ஆதரவு என்றால் அவர்களுக்கு அடிவருடிகள் என அர்த்தமில்லை!இபோதைய நிலைபாடு ஒன்று மட்டும் தான் பார்பனிய ஆட்சிக்கு வழி வகுக்காமல் இருக்கச் செய்யும்.

குழி பறிப்பதும்,கிடா வெட்டுவதும்,அரசியலில் போட்டி இடவே மாட்டோம்,யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டோம்,என ஆரம்பத்தில் மார்தட்டிக் கொண்டு இப்போது வளைந்து கூனிககுறுகி அம்மாவின் ஆசிரமத்தில் சீடராகி மண்டியிட்ட அந்த இயக்கங்களுகே உரிய இயல்பு.எப்போதும் எதிர் அணியில் நிற்பது வழக்கமல்ல,சூழ்நிலை அறிந்து சூட்சகமான முடிவை எடுப்பவர்கள் தான் தமிழ் நாடு தெளஹீத் ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள்.சும்மா வாய்க்கு வந்த படி வசைபாடுவது சுலபம்!அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்துபவர்கள் தான் வெற்றி பெற முடியும்.அந்த விஷயத்தில் மு.கருணாநிதி கெட்ட்டிகாரர் அவ்வளவு தான்!!!

TNTJ ன்ணாலெ ஏன் ஒரு முடக்குத் தண்ணீர் கூட குடிக்கிறீங்க...? எதையும் சமயோசிதமா(நிதானமாக)சிந்தித்துப் பாருங்க..விஷயம் விளங்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. TNTJ DECISION
posted by DR MOHAMED KIZHAR (chennai) [27 March 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 3586

AT THIS JUNCTURE, TNTJ HAS TAKEN FANTASTIC DECISION, TAKING INTO CONSIDRATION ONLY THE WELFARE OF THE MUSLIM COMMUNITY. TNTJ HEADS, NEVER OPT FOR ANY DECISION TILL ADMK MANIFESTO (WHICH DOES NOT MENTION ABOUT A WORD REGARDING RESERVATION FOR MUSLIMS, INSPITE EARLIER ASSURANCE FROM SENIOR LEADERS OF ADMK). AND THEY CLEARLY HINT AT SUPPORTING SUPPORT TO DMK IF IT GIVES RESERVATION INCREMENT FOR MUSLIMS.

EVEN THOUGH DMK DOES NOT INCREASE THE RESERVATION, BUT ITS SUPREMO HINTED AT INCREASING RESERVATION FOR NMUSLIM IN A MARIIAGE FUNCTION ON 3O TH JULY 2011. EVEN AFTER THIS DMK, DID NOT SUPPORT DMK, ASKING THEM TO BRING ORDINANCE TO INCREASE RESERVATION. BUT IT DIDNOT DO SO.

THEN WAITING FOR JAYALALITHA"S ELECTION MANIFESTO, WHICH ALSO DIDNOT MENTION SINGLE WORD REGARDING THIS. BUT DMK MANIFESTO HINTS AT CONSIDERING INCREASE IN RESERVATION FOR MUSLIMS. IN THIS JUNCTURE, CONSIDERING ALSO CONS AND PROS, ANY MUSLIM LEADER REALLY INTERESTED IN WELFARE OF THE MUSLIM COMMUNITY, WILL TAKE DECISION TO SUPPORT DMK ALLIANCE.

THIS DECISION ALSO NOT TAKEN BY THE DECISION OF SINGLE MAN OR TWO, BUT AFTER ASKING OPINION OF ALL EXECUTIVE MEMBER, CLEAR DEMOCRATIC WAY.. WE HOPE AND HAVE FULL CONFIDENT IN TNTJ THAT THEY WILL TAKE ANY DECISION, ONLY FOR THE WELFARE OF THE MUSLIM COMMUNITY AND WE CAN FOLLOW THEIR DECISION BLINDLY WITHOUT HESITATION.

IN THE PAST AND PRESENT , NO MUSLIM OUTFIT TAKE SUCH A WONDERFUL DECISION, BASED ONLY ON WELFARE OF MUSLIM COMMUNITY EXCEPT TNTJ. AND I HOPE THIS SUPPORT WILL BE FOR THIS ELECTION ONLY AND DMK SUPPORT WILL NOT CONTINUE AFTE THIS ELECTION AND IF DMK COMMIT ANY MISTAKE IN FAVOUR OF MUSLIM, AT THIS JUNCTURE, TNTJ WILL BE THE FIRST AND SOLE OUTFIT, VOICE AGAINST DMK DURING ELECTION ALSO.

IS THERE ANY PARTY OR ROGANISATION, TAKEN DECISION AFTER ANALYSING ALL THE THINGS AND VER LATE.. TNTJ LATTA VANDHALUM, LATESTAA VANDHAARKAL


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Beware of JAYA AWARE ISLAM
posted by Mohamed Abdul Kader (Al Khobar) (Al Khobar) [27 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3594

Good,

Ippoluthvathu TNTJ arasiyalil onartharhele, Sondasam.

Eppadiya irenthe Vaiko eppadi akivittar JAYA.

Eppoluthu vantha Themu Teeka, Manitha Makkal Naya katchi ivarhalukum iruku JAYA vin Nalla Appu.

Ithai TNTJ arasiyalil veru oru karanathirkaha onartharhele. Al Hamdu Lillah.

Ithai ponru Avarhal Markathilayum onarnthu Thooymayana Islathin Pakkam Varuvarhal Enru Nambuherom.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. உங்கள் முடிவில் ஆச்சரியம் ஒன்றுமில்லை...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [27 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3597

உங்கள் முடிவில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ம.ம.க தி.மு.க கூட்டணியில் இருந்திருந்தால் அ.தி.மு.க வை ஆதரித்திருப்பீர்கள்.

அடுத்த தேர்தலில் நீங்களும் ஒரு கட்சி ஆரம்பித்து வைகோ கட்சியுடன் கூட்டணி வைத்து 3 தொகுதி வாங்கி கொள்ளுங்கள்.அப்புறம் பாக்கர் ஒரு கட்சி ஆரம்பித்து பி.ஜே.பி யுடன் கூட்டணி வைத்து 3 தொகுதிகள் வாங்கி கொள்ள்ட்டும்.

சொந்த பிரச்சனைக்காக விஜய்காந்தை எதிர்க்கும் வடிவேலுக்கும், ம.ம.க வை எதிர்க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். வடிவேலு ஒரு காமெடி பீஸ் நீங்களும் அந்த லிஸ்டில் சேர்ந்து விடாதீர்கள். நாங்கள் உங்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளோம் அதில் நீங்களே மண்ணை அள்ளி போட்டு விடாதீர்கள்.

ம.ம.க வில் நிற்கின்ற மூவரும் பட்டதாரிகள். கண்டிப்பாக நம் சமுதாயத்திற்காக குறல் கொடுப்பார்கள். உங்களால் அவர்களுக்கு உதவி தான் இல்லாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருங்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தி, அனைவரும் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிக்க அருள் புரிவானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நம்மை ஒற்றுமையாக இருக்க விடக்கூடாது
posted by சாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [27 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3598

எதற்கு அந்த கட்சி தேர்தல் அறிக்கையில் ஒன்றும் சொல்லவில்லை, இந்த கட்சி ஒன்றும் சொல்லவில்லை என்று மோதிக்கிட்டு. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மாதிரி யார் நடத்திக்காட்டினார்கள்?

இதற்க்கு தான் நம்மிடம் ஒரு வலுவான ஒற்றுமையான அணி இருந்து, ஒரு குறுப்பிட்ட அளவில் MLA க்கள் இருந்து, நம் தயவில் தான் ஆட்சி அமைக்க முடியும் என்றால், நாம் ஏன் அடுத்தவர் கையை எதிர்பார்த்து வாழனும்.

இன்றைய சூழ்நிலையில் கூட, நிற்கக் கூடிய அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களையும் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். இதை முதல் படியாக நினைத்து, கவனமாக எடுத்து வைத்து நாம் யார், நம்முடைய பலம் என்ன, நம்முடைய ஒற்றுமை என்ன என்று காட்டினால் அப்புறம்....அப்புறம் தான்.

இந்த மாதிரி தான் மர்ஹூம் பழனி பாபா அவர்கள் காட்டு கத்தாக கத்தி ஒற்றுமையாக இருங்க, அப்படி இருந்தால் குறைந்தது 40 MLA க்கள் நாம் தான் என்று பட்டியல் இட்டவரை விட்டு வைத்தால் நடத்திக் காட்டிவிடுவார் என்று போட்டு தள்ளி விட்டார்கள்.

நம்மை ஒற்றுமையாக இருக்க விடக்கூடாது என்பது தான் அனைத்து கட்சிகளின் முக்கிய கொள்கை, புரிந்து கொள்பவர்கள் புரிந்தால் நலமே.

இன்ஷா அல்லாஹ்.. நடப்பது நன்மையாக இருக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்
posted by தைக்கா சாஹிப் (ரியாத்) [27 March 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3600

TNTJ - ஒவ்வொரு தொகுதியிலும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு என்று அறிக்கை வெளியிட்டிருக்கலாம்

மீண்டும் இரண்டாவது முறையாக தூத்துக்குடி அ.தி.மு.க. வேட்பாளர் மாற்றம். ஒரு தொகுதிக்குரிய வேட்பாளரை சரியாக தேர்வு செய்ய முடியாத அ.தி.மு.க கூட்டணியால் எப்படி ஒரு சிறந்த ஆட்சியை தரமுடியும்?

பேரறிஞர் அண்ணாவின் ஆவி தன்னிடம் கூறியதால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றால் தான் அவர் பெயர் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதின்பேரிலேயே அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறேன்???? இப்ப புரியுதா யாரு காமெடி பீஸ் என்று? (see http://thatstamil.oneindia.in/news/2011/03/27/election-vijayakanth-speech-anna-ghost-aid0128.html )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. TNTJ resolution and a very brief look on other parties
posted by Javed Nazeem (Chennai) [27 March 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 3601

Dear Kizhar, TNTJ certainly has a lot of good aspects. But I think, internal democracy is not one of them. Though I would not recommend and your profession may not allow, you may need to get a bit closer to understand the individuals and the organization better. If you stick to your opinion then, I will be happy to change mine.

Regarding their current stand, I think it was taken long back. Pls check the below link - despite a bit of ambiguity, the message seems to be clear: http://tinyurl.com/67fhzef

On MMK, well, they seem to have become flexible beyond comfort. One of the good aspects with them may be they do not hit below the belt – may be, unless provoked beyond a limit. But cozying with an alliance partner beyond acceptable levels, does not qualify for a sincere organization.

On ML - off late they were seen to do few good things, but I think the one seat issue has put them back. Like to recollect a poem, I think by Thaa. Kaasim (of Thendral Kaatre fame). I remember only a part of it.

கோபாலபுரமே கிப்லாவாய்
முரசொலியே முசல்லாவாய்
கலைஞரே கலீபாவாய்

Obviously a poetic exaggeration (what a play of words!) and addressed against one party. But the message is for anybody who compromises their policies.

On Fathima Muzaffar, I thought she was a brave lady, but the below link helped to know better. Thanks to that brother from Sudan, I did a search and got this.

http://www.hindu.com/2009/04/26/stories/2009042651420100.htm Let me conclude by saying this. Most of the points above are just my observations. If anybody contradicts and corrects me with clear facts, I will be happy to rectify accordingly. God knows better.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Convene under one parent Muslim party
posted by Mohamed Abdul Kader (Al Khobar) (Al Khobar) [27 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3603

Dears,

Why we are fighting each together? Please ask your head of the party to join under the parent party of Muslim (Muslim league).

This is not a good decision to create many parties within our Muslim community. The Muslim candidates under any party also to be joined under Muslim league.

Fathima Muzaffar became a brave lady in sense not to obey the leadership? If they have problem with the league, they have to access properly & conclude to amicable solution rather than creating another party.

Now Ramandapuram constituency contestant is Mr. Jawhirullah & Mr. Hasan Ali. Both are Muslim Candidate. In this such a case one Muslim has to defeat. If Muslims are equal to other caste.

First of all our Muslims vote will be derived into to two.We are people giving chance to other community to come up by fighting each other.

To avoid such a case all should come under one umbrella, it will strengthen our majority


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. tntj decision
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [28 March 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 3612

DEAR NASEEM BABU,

FIRST I CLARIFY THAT I AM NOT EVEN A MEMEBR OF TNTJ, BUT A WELL WISHER OF THE JAMAATH, BASED ON THEIR PREVIOUS GOOD RECORDS, COMPARED TO OTHERS, THE WAY TNTJ ADOPT RULES OF SUNNAH AND QURAN WITHOUT BOWING DOWN TO ANY PRESSURE. THEY DID NOT GET ANY MILEAGE BECAUSE OF THEIR POLITICAL ELECTION SUPPORT IN THE PAST. THIS IS CLEARLY EVIDENT THAT THEY DO NOT HAVE OWN BUILDING FOR THEIR HEAD QUARTERS. I HAD BEEN CONSTANTLY ANALYSING VARIOUS FACTORS, BEFORE MYSELF BECOMING WELL WISHER.

LET ME COME TO THE POINT. TNTJ DECISION TO SUPPORT DMK ALLIANCE,IS TAKEN JUST 2 DAYS BACK. THEY KEPT THEIR OPTION TO BOTH ALLIANCE REGARDING MUSLIMS RESERVATION. WHEN ADMK MANIFESTO DID NOT MENTION SINGLE WORD REGARDING RESERVATION FOR MUSLIMS, TNTJ HAS FORCE TO TAKE SUCH A DECISION. IT DOES NOT MEAN THAT DMK IS VERY CLEAN. IT IS BETTER THIEF WHEN COMPARE OTHER GIANT THIEF. AFTER DMK HAD GIVEN 3.5PC RESERVATION WHICH NO OTHER PARTY , NOT EVEN CONSIDERING IN THE PAST.

LET US COME TO INTERNAL DEMOCRACY IN TNTJ. ITS SUPREMO MOULAVI PJ, STRICTLY ABIDE BY THE BY LAW. HE NEVER EXTENDED HIS TENURE AS CHAIRMAN, LAST TIME. HE STEPPED DOWN AND GAVE WAY FOR OTHERS TO COME UP DURING PREVIOUS TERM. NEXT MOMENT HE STEPPED DOWN FROM POST, HE VACATED HIS CHAIR, WHICH NO ONE DID IN THE PAST IN ANY OUT FIT. WHEN HE WAS NOT CHAIRMAN, HE NEVER SIT IN THE CHAIR IN THE OFFICE OF HEAD QUARTERS. IN THIS JANUARY 31 MEETING, HE WAS ELECTED AS CHAIRMAN IN DEMOCRATIC WAY. HE NEVER OPTED FOR THAT THIS TIME ALSO AND WHEN OTHERS COMPLELLED AND MAJORITY WANTED HIM TO BECOME CHAIRMAN AND THEN ONLY HE ACCEPTED.

ONCE AGAIN I CLARIFY THAT I AM NOT EVEN A BASIC MEMBER OF TNTJ, AND MY IDEAS AND OPINION REGARDING TNTJ ARE NOT PREJUDICE AND JUST GIVING OPINION, ACCORDING TO THE SITUATION, THEN AND WHEN ARISE. WASSALAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Discussion
posted by Javed Nazeem (Chennai) [28 March 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 3613

Thanks for the explanation Kizhar – think you are in a vacation, appreciate your efforts to respond. Insha Allah, if time permits, we shall take this offline.

Dear brother Mohamed Abdul Kader: there are no fights here, just some healthy discussion. Instead of getting into sentiments like parent party, would you prefer giving a list of achievements by ML? This may be the criteria for the discussion for who ever supporting parties like MMK too. Instead of attacking others or getting sentimental would it not be better to get the achievements listed for the perusal of the public?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. ம.ம.க வை பழிதீர்க்க இந்த முடிவா??
posted by Salai.Mohamed Mohideen (California) [28 March 2011]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 3614

"தௌஹீத் ஜமாஅத் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு!"- நீங்கள் DMK க்கு தான் ஆதரவு தருவீர்கள் என்று எல்லோரும் எதிர் பார்த்தது தான். ஏற்கனவே உங்களுடைய முந்தைய பொதுக்குழு கூட்டத்தில் ம.ம.க வை அடியோடு தோற்கடிக்கவேண்டும் என்று முடிவு எடுத்தது பற்றி உங்களுடைய வெப்சைட்டில் வெளிவந்தது. நிச்சயமாக ம.ம.க அங்கம் வகிக்கும் கூட்டணியை நீங்கள் ஆதரிக்க மாட்டிர்கள். ஒரு வேளை ADMK கூட இடஒதுக்கீட்டுக்கு ஒத்து வந்து இருந்தாலும் ....உங்கள் முன்னாள் நண்பன் தற்போதைய பரம எதிரி ம.ம.க வுக்கும் சப்போர்ட் பண்ண வேண்டியது வந்து இருக்கும். இல்லையென்றால் ADMK கூட்டணிக்கு சப்போர்ட் ஆனால் ம.ம.க வை தோற்கடிப்போம் என்று சொல்ல வேண்டியது வரும். அப்படி சொன்னால் முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும் உங்கள் முகத்தில் காரி துப்பி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதை தவிர்ப்பதற்காக இது மாதிரியான முடிவு என்று நினைக்க தோணுகிறது.

உங்களை பொறுத்தவரையில் ம.ம.க வை தோற்கடிக்க ஒரு காரணம் வேண்டும். அதற்கு இது இடஒதுக்கீடு ஒரு காரணம். உங்களுடைய கடந்தகால சொந்த வெறுப்புக்காக அல்லது கொள்கை வேறு பாடிற்காக நம் சமுதாயத்தின் மற்ற அமைப்புகளை அழிக்க வேண்டி நம் சமுதாயத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பது நல்லதா என்று தெரியவில்லை. பொருத்து இருந்து பார்க்கலாம். DMK கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதற்காக என்ன செய்ய போகிறீர்கள் என்று. ஏனென்றால் அவர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளது. அவர்கள் மணிமண்டபம் மீலாது நபி காயிதே மில்லத் பிறந்தநாள் விழா என்று வலம் வருபவர்கள். ஆனால் நீங்கள் அதற்கு நேர் எதிர். தயவு செய்து அவர்களுக்காவது முழுமையான முறையில் சப்போர்ட் பண்ணி வெற்றி பெற வையுங்கள்.

நம் சமுதாயத்தில் தேவையான ஒரு சில சீர்திருத்தத்தை அல்லது மாற்றத்தை கொண்டுவந்தவர்கள் மேலும் சமுதாய ஒற்றுமையை வாய் கிழிய பேசியவர்கள் இன்று நம் சமுதாயத்தின் மற்ற அமைப்புகளை மிகக்கடுமையாக விமர்சித்தும் ஒற்றுமையும் சீர்குலைத்து வருகிறார்கள் என்றுதான் நினைக்க தோணுகிறது. தௌஹீத் ஜமாஅத்தின் ஒரு சில நல்ல விசயங்களை/கொள்கைகைளை மற்றும் சமுதாய முன்னேற்றதிட்கான போராட்டத்தை எல்லோரும் சப்போர்ட் செய்து வருகிறார்கள். ஒருவேளை ஜமாஅத் எல்லா அமைப்புகளையும் ஒன்று கூட்டி நம் சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் சமுதாய ஒற்றுமையை சொந்த வெறுப்புக்காக அல்லது கொள்கை வேறு பாடிற்காக பிரிக்க முயலும்போது ஜமாஅத் பிசு பிசுத்து போகலாம் ஏனென்றால் எல்லோரும் சமுதாய ஒற்றுமையை பெரும்பாலும் விரும்புகிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ஒற்றுமையே.
posted by MUTHU ISMAIL (kayalpatnam ) [28 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3615

உலகத்தில் அச்சம், எதிர்காலம் குறித்த நம்பிக்கை அனைத்தும் ஒரேயொரு நூலிழையில் மூச்சுவிடக்கூட முடியாமல் திணறித் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நூலிழை ஒற்றுமையே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. ம.ம.க. VS டி.என்.டி.ஜே
posted by தைக்கா சாஹிப் (ரியாத்) [28 March 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3624

சகோ. Salai.Mohamed Mohideen அவர்களின் கருத்து சரியே...

சகோ. Salai.Mohamed Mohideen அவர்களே சும்மா தௌஹீத் ஜமாஅத் என்று மொட்டையா சொன்னா எப்படி? தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் or இந்திய தௌஹீத் ஜமாஅத்?

இன்று எல்லா ஜமாத்களும் தங்கள் சொந்த வெறுப்புக்காக அல்லது கொள்கை வேறுபாட்டிற்காக சமுதாயத்தை பிரிக்க முயலுகின்றனர்.

British policy -யான Divide and Rule policy -யை இன்றைய அரசியல்வாதிகள் கடைபிடிக்கின்றார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. SUPPORT ALL MUSLIM CANDIDATE
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [28 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3625

ASSALAMU ALAIKKUM.

What ever it is TNTJ Sould support all muslim candidate without seeing any islamic faith diffrences or other internal issue.We need one unity by showing our full publicaly support of our muslim candidate.Atleast they or any one must not act against with our candidate.

We try to full fill Janab MArhoom PALANI BABA COMMENTS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. கருணாநிதியின் அரசியல் அறிவு
posted by Cnash (Makkah ) [28 March 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3626

இன்றைய தினமலர் சிறப்பு பகுதியில், "டவுட் தனபாலு" பகுதியில் வந்த கமெண்ட்,

"தமிழக முதல்வர் கருணாநிதி: சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகவும் பேசிவிட்டு, இப்போது, "முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவேன்' என ஜெயலலிதா கூறுவதை, இஸ்லாமியர் நம்ப மாட்டார்கள்.

டவுட் தனபாலு: விடுங்க சார்... குஜராத் கலவரத்தின் போது, பா.ஜ.,வுடன் கூட்டணியிலயும் இருந்துட்டு, அந்த கலவரத்தை, "அது அந்த மாநில பிரச்னை'ன்னு சொன்ன உங்களையே இஸ்லாமியர் நம்பும் போது, அவங்களை நம்ப மாட்டாங்களா...?

பத்திரிகை செய்தி: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார்.

டவுட் தனபாலு: உஷ்... அதெல்லாம் பகுத்தறிவு சமாச்சாரம்... அதையெல்லாம், "கமென்ட்' பண்ணக் கூடாது...!

கருணாநிதியின் அரசியல் அறிவும் (!!!) கெட்டிக்கார தனமும் சாதாரண சாமானிய மக்களுக்கு தெரியாது, சில மேதைகள் என்று தங்களை நினைத்து கொண்டிருக்கும் அறிவாளிகளுக்கு மட்டும் தான் தெரியும்!! சரி தெரிஞ்சிட்டு போகட்டும், கலைஞர் கொடுக்க போகும் இட ஒதுக்கீட்டின் பலன் தெரிஞ்சி பகுந்தறிஞ்சி ஆராய்ந்து ஆதரவு கொடுகிறாராம்!! கொடுக்கட்டும்!!! 60 வருசம் கொடுத்த வாக்கை எல்லாம் காப்பாத்தி விட்டாரே!! PJ எது சொன்னாலும் கரெக்ட் என்று ஈமான் கொள்ள அவர் நமக்கு அறுவுறித்திய பேச்சை திரும்ப கேட்டலே போதும்!!!

The decision has been taken already at the same time as the MMK stance was disclosed, this eye-washing resolution only to bluff the public that they are sticking on to democracy. Br. Nassim and Mohammed’s explanation is sound enough turn down this counterfeit declaration.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இட ஒதுக்கீடா? அது என்ன விலை...?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [29 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3632

நான்... நான் நானே, என்ற அகம்பாவம்,
பெண் எனும் தன்மையே இல்லாமல் தன் காலில் ஆண்கள் வந்து விழவேண்டும் என்ற கர்வம்,
சொல்லில் வன்மையைக் கையாள்வது,
எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் அவசர முடிவு,
எவரையும் வந்துபார் என்ற செருக்கு,
தான் மட்டுமே அறிவாளி! மற்றவர்கள் என் காலுக்கு தூசு எனும் விதத்தில் கைகட்டி, வாய் பொத்தி, கூனிக்குறுகி, கும்பிட்டு பிறரைத் தன் முன்னால் நிற்கச் செய்த அந்த அம்மிணியே சரணம்!
எனத் துதிபாடும் சில பக்தர்கள் அந்த அம்மிணிக்காகவே இருக்கும் போது, இடஒதுக்கீட்டால் நம் சமுதாயம் பெறும் பல நன்மைகளை அவர்கள் அறிந்து கொள்ளவோ? அல்லது ஆராய்ச்சி செய்யவோ? முற்படமாட்டார்கள்! என்பது வேதனைக்குரிய விஷயம் தான்.

“இச்செயல் இவன்முடிக்கும் என ஆய்ந்து
அச்செயல் அவன் கன்விடல்”

இக்குறளுக்கு விளக்கம் தேவையெனில் கலைஞர் எழுதிய குறளோவியத்தைப் புரட்டிப் பாருங்கள்! ஏன் என்றால் அங்கே தானே அறிவாளிகள் ஜாஸ்த்தி!!!

“நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது! நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்” இந்தப் பழக்கமே உங்க அம்மிணிகிட்டே கிடையாதே? எப்பத்தான் திருந்துவீங்களோ...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Dear Doctor Sir!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [29 March 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3633

மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்! த.த.ஜ.வின் தேர்தல் நிலைப்பாடு, நாம் கண்ணை மூடிக்கொண்டு தயங்காமல் பின்பற்றக்கூடிய அளவிற்கு சிறந்தது என்ற தங்களது கருத்து தவறானது என்று எண்ணுகிறேன்.

இந்திய முஸ்லிம்களுக்கு பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வில்லையெனில், அவர்களால் சமூக நீதி என்னும் சமதளத்திற்கு எட்டவே முடியாது என்று நமக்காக எடுத்துரைத்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களது பரிந்துரையின் பக்கங்களை திறந்து கூட பார்க்காமல் குப்பையில் வீசி எறிந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ் தி.மு.க.கூட்டணி. கடந்த ஆண்டு, சென்னை தீவுத்திடலில், த.த.ஜ..இதற்காகவே ஒரு மாநாடு நடத்தி, மேற்கண்ட கமிஷனின் பரிந்துரை நிறைவேற்றப்பட வில்லையெனில், ஒருபோதும் காங்கிரசை ஆதரிக்கமாட்டோம் என்று தீர்மானம் போட்டதோடு நில்லாமல், பிரதமர் அவர்களையும் சந்தித்து வலியுறுத்தியது. இப்போதும் தேர்தல் அறிக்கையில், த.த.ஜ.குறிப்பிட்டு இருப்பதைப்போல், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்ற எந்த வாசகமும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. மாறாக, பரிசீலிப்போம் என்ற கருணாநிதியின் கண்துடைப்பு வாசகமே அதில் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், இதுவரை கருணாநிதியால் நாற்பது ஆண்டு காலத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில்,அவர் நிறைவேற்றியது அவரது குடும்பத்திற்கு பலன்தரும் ஐந்து சதவிகிதத்தை மட்டுமே!

மேலும், 160 தொகுதியில் போட்டியிடும் அ.தி,மு.க. இரண்டே இரண்டு முஸ்லிம்களுக்கே வாய்ப்பளித்திருப்பதாகவும், அதேநேரத்தில் 120 தொகுதிகளில் மாத்திரமே போட்டியிடும் தி.மு.க. நான்கு முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்திருப்பதாகவும் கூறி அதுவும் தி.மு.க.வை ஆதரிக்க ஒரு காரணம் என்று த.த.ஜ. சொல்வது, 31 இடங்களில் போட்டியிட்டும் ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பு வழங்காத பா.ம.க.வை ஆதரிக்க சரியான காரணம் ஆகுமா?

செய்ததன் அடிப்படையில் ஆதரிப்பது என்பதுதான் சரியான நிலைப்பாடு. வெறும், வாக்குறுதிகளை மாத்திரம் நம்பி ஆதரிப்பதானால், தனது பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்திலேயே முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ள ஜெயாவை ஏன் ஆதரிக்கக்கூடாது? இன்னும் சொல்லப்போனால், லயோலா கல்லூரி கருத்து ஆய்வு, அவுட்லுக் மற்றும் தி வீக் போன்ற ஆங்கிலப்பத்திரிகைகளால் 70 சதவிகித வாக்குகளைப் பெற்று அடுத்து முதல்வராக வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளவராக சுட்டிக்காட்டப்படும் ஜெயாவை ஏன் ஒருமுறை ஆதரிக்கக்கூடாது? ஒவ்வொரு முறையும் தி.மு.க.விற்கே வாக்களித்து விட்டு ஜெயா முஸ்லிம்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவது எப்படி நியாயமாகும்?

ஒருவேளை,ம.ம.க, மு.லீக். போன்ற சமுதாய இயக்கங்கள் மற்றும் பல்வேறு கட்சியின் சார்பில் போட்டியிடும் முஸ்லிம்கள் மற்றுமுள்ள தொகுதிகளில் தி.மு.க.விற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை த.த.ஜ. எடுத்திருக்குமேயானால் நியாயமானதாக இருந்திருக்கும். இப்போதைய நிலைப்பாடு என்பது கண்மூடி பின்பற்றத்தகுந்தது அல்ல. கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் விழுவது போல!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. இதை கேட்ட அம்மா பக்தனானு கேட்பாங்க...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [29 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3635

“இச்செயல் இவன்முடிக்கும் என ஆய்ந்து
அச்செயல் அவன் கன்விடல்”

ஆமா.. அது என்னவோ உண்மைதான் ஊழல் செய்யிறதுல இவங்க செய்யுற அளவுக்கு யாரலயும் முடியாது அதுனால இந்த முறையும் நாம அவங்களயே ஜெயிக்க வச்சுடலாம். அவங்க 1.76 லட்சம் கோடி ஊழல் செஞ்சா நமக்கென்ன, நம்மலுக்குதான் 15 - 3 ல (OC) TV எல்லாம் கிடைக்குதே.... எவன் அப்பன் வீட்டுல காசுலயோ TVய இலவசமா கொடுத்த உங்களால ஏன் உங்க சொந்த கேபிள் கனெக்சன இலவசமா கொடுக்க முடியலே..? இதை கேட்ட அம்மா பக்தனானு கேட்பாங்க...

கலைஞர் ஆட்சியில் நம் சமுதாய மக்களுக்கு கிடைக்க போகும் இட ஒதுக்கீடினால் அடைய போகும் நன்மைகளை அறிய மாட்டார்களா...? ஆராச்சி செய்யமாட்டர்களா...? என்று ஒரு கேள்வி.... கலைஞர் ஆட்சியில் நம்க்கு 5 சதவிகிதம் என்ன... 100 சதவிகிதமே இட ஒதுக்கீடு கொடுத்து விட்டார் கோவை மத்திய சிறைச்சாலையில். நம் சமுதாய மக்களுக்கு தீவிரவாதி என பேரிட்ட பெருமை மான்மை பொருந்திய உங்கள் கலைஞருக்கு மட்டுமே....

குறளோவியத்தைப் புரட்டிப் பார்ப்பதற்கு முன் கொஞ்சம் அறிவாலத்தை புரட்டி பாருங்கள் அவர்களது குடும்ப அரசியல் புரியும்.

“நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது! நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்” என்று கலைஞர் சொன்னதுக்கு நீங்கள் தவறுதலாக விளக்கம் கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். நாம் என்று சொன்னது அவரது குடும்பத்தை..

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. பக்தனும் வேண்டாம்! பித்தனும் வேண்டாம்!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [30 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3648

ஆமா,ஆமா!!கோடிக்கோடியா கலைஞர் அடிச்சலும் சரி,கோமனத்தோடு குப்பன் போனாலும் சரி,ஆஹா!அம்மாவின் ஆட்சி மட்டும் தூய்மையான ஆட்சியா?என்ன?அடுக்கு மாளிகை,ஆடம்பர ஊர்திகள்,வீட்டுக்குள்ளேயே நகைக் கடை,துணிக்கடை,ஏன்?செருப்புக்கடையே வச்சிருந்தவங்க தானே?செக்கிழுக்கும் மாடுகளாக நாம் இருக்க,அந்த சக்கயைக்கூட நமக்குத்தர மனமில்லாத அம்மா!ஏன்?நீங்களே முதலமைச்சராக வந்தாலும் கூட உங்க அப்பன்,பாட்டன் சொத்துலேருந்து கொடுக்க மாட்டீங்க இலவச டி.வி,காஸ் அடுப்பு,பாதாம் பருப்பு,முந்திரி,சைக்கிள்,சக்கரம் எல்லாம் திமுக உறுப்பினர்களுக்கு மட்டும்ன்ணு கொடுக்கல்லையே!நீங்களும் வாங்காமலா இருந்திருப்பீங்க?அமுக்குறதுலே ஐயா வேறெ!அம்மா வேறென்ணு வித்தியாசமெல்லாம் கிடையாதுங்க!நான் என்ன?சொல்ல வர்றேன்ணா? அரசியலில் நாம் ஐயா பித்தனாகவும் இருக்க வேண்டாம்! அம்மா பக்தனாகவும் இருக்க வேண்டாம்!இன்றய சூழலில் நாம் யாரை ஆதரித்தால்?சற்றேனும் சாதகம் நமக்கு கிடைக்கும் என்பது தான்!முக்கியம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved